ஞாயிறு, 5 ஜனவரி, 2014

காரைக்காலும் டெல்லியும்

கிறிஸ்மஸ் இரவில் காரைகாலில் நடந்த அந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி  ஆச்சர்யம் வேதனை ஆகிய வற்றை ஒரு  சேர அளித்திருக்கிறது...... 

காரைக்கால் ஏன் டெல்லியாகவில்லை ? வெண்ணிலாவின்

கட்டுரையை தமிழ் இந்துவில்  படிக்கும்  இதயம் உள்ள எந்த ஆண் மகனும் வெட்கித் தலைகுனிவான்......


"15 பேர் சேர்ந்து ஒரு பெண்ணைப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்குவது என்ற கொடுமையைக் கண்ணை மூடிக்கொண்டு ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். இந்த சமூகத்தின் மீது காறி உமிழத் தோன்றவில்லையா?"

என்ற வரிகளைப் படிக்கும் போது ஓ வென்று கத்தத் தோன்றியது  
என்ன மாதிரி உலகம் இது..  எத்தனை பெரிய கொடுமை நடந்தேறியிருக்கிறது......   

இதில் பெரிய ஆச்சரியம் அனைத்து ஊடகங்களிலும் வெறும் செய்தியாக மட்டும் பார்க்கப் படுவதுதான்......

பாமக அருளை பல சமயங்களில் ஏற்கவில்லை...... இப்படி இன்னொரு சம்பவம் நடந்தால்   அவர்  சொல்வதை உலகமே ஏற்றுக் கொண்டுவிடும்...

  தமிழகம்..... அமைதிப்  பூங்கா இல்லை மயான அமைதிப்  பூங்கா......

5 கருத்துகள் :

kari kalan சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
Badri Nath சொன்னது…

உங்கள் கோபத்தை வெளிப்படுத்தவே உங்கள் கருத்தை வெளியிட்டேன்.. ஒரே ஒரு கடைசி வரிகளைத் தவிர உங்கள் கருத்து உடன் பாடே.. ஆனால் கரிகாலன் இறுதியில் அந்த வார்த்தை மேலும் யாரோ ஒரு பெண்ணைத்தானே காயப்படுத்துகிறது.. அதனால் அந்த வரியை இனி உபயோகிக்காதீர்....

Badri Nath சொன்னது…

நண்பர் கரிகாலன்.. முதலில் உங்கள் பின்னூட்டத்தை வெளியிட்டேன்.. ஆனால் கடைசி வரிகளைப் படித்த எனது சில முக்கியமான நண்பர்கள் அது வேண்டாம் என்றார்கள்.. அவர்கள் கருத்துக்கும் மதிப்பளித்து உங்களை பின்னூட்டத்தை நீக்கியிருக்கிறேன்.. தயவு செய்து தவறாக எண்ண வேண்டாம்.. தொடர்ந்து பின்னூட்டமிடுங்கள் (கடைசி வரி தவித்து)...ப்ளீஸ்

kari kalan சொன்னது…

நண்பரே, தாங்கள் குறிப்பிடும் அந்த வரி என்ன என்றே நான் அறிந்திலன். அதை நானே எழுதி இருந்தாலும் உணர்ச்சி வசப்பட்டு எழுதியிருக்கலாம். ஆனால் என்ன எழுதினேன் அன்று அறிய முடியாமையால் அடுத்த முறையும் அந்த தவறை நான் செய்வதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆதலால் தயவு செய்து என் பின்னோட்டத்தையும் அதில் நீங்கள் தவிர்க்க நினைத்த பகுதியினையும் சிரமம் பாராது எனக்கு மெயில் இட வேண்டுகிறேன்
என்றும் அன்புடன்

Badri Nath சொன்னது…

அனுப்பிவிட்டேன் நண்பர் கரிகாலன்