செவ்வாய், 13 மே, 2014

நடக்குமா...?

தேர்தல் முடிவுகள் வருவதற்கு இன்னமும் சில தினங்களே உள்ளன... பல தனியார் தொலைக்காட்சிகள் குறிப்பாக ஆங்கிலத் தொலைக்காட்சிகள் கருத்துக் கணிப்புகளை வெளியிட்டிருக்கிறார்கள்....

சில சமயங்களில் அவை சரியாகவும் சில சமயங்களில் நேர்மாறாகவும் இருப்பதைப் பார்த்திருக்கிறேன்... காரணம் தெரியவில்லை... பல்வேறு கூறுகள் அதற்குண்டு... 

சரி.. நமக்குத் தேவை என்ன...?

 யார் ஆட்சிக்கு வந்தாலும் முதலாளிகளுக்கு ஒன்றாகவும் பிற மக்களுக்கு ஒன்றாகவும் இருப்பதைப் பார்த்து வருகிறோம்.. இருப்பினும் சிலர் வந்தால்  மக்களுக்கு நன்மை பயப்பது உண்மைதான்... அதை சற்று  பார்த்து விடுவோமே...?

எப்படியும் பிஜேபிக்கு ஒரு வாய்ப்பு உள்ளது என்று அனைத்து கருத்துக கணிப்புகள் சொல்கின்றன... அது உண்மையும் கூட.... 

ஆனால் பிஜேபி காங்கிரஸ் தவிர  யார் அதிக இடங்களில் வருவது நல்லது (ஆளும் கட்சிகளை மக்களுக்கான பிரச்சனைகளுக்கு  குரல் கொடுக்க  வைக்க  - நெருக்கடி கொடுக்க) என்பது எனக்குத் தெரிந்தது...

வட நாட்டு எஸ்பி பிஎஸ்பி NCP ஐக்கிய ஜனதாதளம் ஆகியவை அதிக இடங்கள் வந்தால் அவரவருக்கான தேவைகளுக்காக ஆளும் கட்சியை நெருக்குவார்கள்... அதனால் மக்களுக்கு என்ன பயன்...?

அம்மா மற்றும் தாத்தா அதிக இடங்கள் பிடித்தால் அவரவர்களுக்கு ஆயிரம் பிரச்சனைகள் உண்டு.. அதற்குத்தான் அழுத்தம் தருவார்கள்.. ஆனால் மக்களுக்கு...?

இதர உதிரிக் கட்சிகள் அதிக இடம் பிடித்தால் தத்தம் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்வார்கள்... மீண்டும் மக்கள்....? 

ஆகவே 
இடது சாரிகள் ஆம் ஆத்மி கட்சி ஆகியவை அதிகம் இடம் பிடித்தால்  - கடவுள் சத்தியமாக ஆட்சியைப் பிடிக்க முடியாது - ஆனால் சர்வ நிச்சயமாக  மக்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்பார்கள்... சற்று ”பொருளைப் பொதுவாக்க” முடியும் என்றே நினைக்கிறேன்...

நடக்கிறதா  பார்ப்போம் ........


4 கருத்துகள் :

S.P. Rajamanickam சொன்னது…

100% correct. The two parties will act as point of check and balences

Badri Nath சொன்னது…

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி திருவாளர் ராஜமாணிக்கம் அவர்களே.. ஒரு இனப அதிர்ச்சியாக ஜெயமோகனும் நான் நினைத்த கருத்தையே அவரது பிரபல வலைத்தளத்தில் சொல்லியிருக்கிறார் (சற்று ஆழமாக)... நினைத்துப் பார்த்தால் பொதுவாக அரசியல் பார்வையாளர்கள் மக்களைப் பற்றி நினைப்பவர்கள் இப்படித்தான் நினைப்பார்கள்....

சதீஷ் செல்லதுரை சொன்னது…

நீங்க சொவது சரியானதே..இவிங்க ரெண்டு போரையும் ஒதுக்கிட்டு துடைப்பமும் கம்யுனிசமும் வந்தா பெட்டரா இருக்கும் ...ஆனா மக்கள் ஊடக வலையில் பண வலையில் விழுந்துள்ளனர்..எல்லாம் கனவுதான்

Badri Nath சொன்னது…

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி திருவாளர் சதீஷ் செல்லதுரை அவர்களே.. கம்யு சிறந்த எதிர்கட்சி....மோசமான ஆளுங்கட்சி....என்பார்கள்.. துடைப்பம் ...இனி மேல்தான் பார்க்கணும்....