செவ்வாய், 20 மே, 2014

நாடகம் என்பது எப்படி சரி...?

இந்தியாவில் மோடி அலை தமிழகத்தில் லேடி அலை ஆகியவற்றால் பல முக்கிய அரசியல் பிரமுகர்கள் விக்கித்துத்தான் போயிருக்கின்றார்கள்...

நான் ஏற்கனவே எழுதியிருந்தேன். தமிழகத்தில் அம்மாவுக்கு வாக்களித்தால் ஒரேயடியாக மக்கள் வாரி வழங்குவார்கள் என்று.. இந்த முறையும் அப்படியே...  திமுக கலகலத்துத்தான் போயிருக்கிறது... 

திமுகவின்  சரிவுக்கு ஆயிரம்  காரணங்கள் இருக்கின்றன... நிச்சயமாக அதற்கும் ஸ்டாலினுக்கும் சம்பந்தம்  இல்லை என்பது என் கருத்து..  ஆனால் அவர் பதவியை ராஜினாமா செய்ததாகவும் கலைஞர் மறுத்ததாகவும் செய்திகளில் ஒரே களேபரம்.. செய்தி சேகரிக்கச் சென்ற ஆங்கில ஊடக நிருபர்கள் தாக்கப்பட்டதாக செய்திகளில் சொன்னார்கள்.. அர்னாப் அலறினார்... ”ஸ்டாலின் .. இதற்கு பதில் சொல்லியாக வேண்டும்...” .

ஸ்டாலின் என்ன பதில் சொன்னாரோ.. ஆனால் நிச்சயமாக ஸ்டாலின் இவ்வித தாக்குதலை விரும்ப மாட்டார் .. நிச்சயமாக இது அவர் பார்வைக்கு சென்றிருந்தால் உடனே தடுத்திருப்பார்.. நான் ஸ்டாலின் ரசிகன் அல்ல.  ஆனால் உண்மையைச் சொல்ல வேண்டும்...  தமிழகத்தில் எந்தவித ஊழல் குற்றச்சாட்டுக்கள் இல்லாத (அண்ணாவிற்கு பிறகு உள்ள அரசியல் பிரபலங்களில்) ஒருவர் ஸ்டாலின்தான்... கலைஞர் மீது புகார் உள்ளது.. அவ்வளவு ஏன் ஸ்டாலின் பையன் மீதும் புகார் உள்ளது... 
ஆனால் ஸ்டாலின் மீது இல்லை... 


எந்த ஒரு சந்தர்பத்திலும் நிதானம் தவறாத அரசியல்வாதியாகத்தான் ஸ்டாலின் இருக்கிறார்..  மேலும் எமர்ஜென்சி கொட்டடியில் வதை பட்ட ஒரே அரசியல்வாதி ஸ்டாலின்... அடாவடி அரசியலுக்கு வேண்டுமானாலும் அவர் சரிப்பட்டு வர மாட்டார்... எனக்குத் தெரிந்த வரை கண்ணிய அரசியலுக்கு கலைஞரை விட பொருத்தமானவர்தான் ஸ்டாலின்... உண்மையில் அவர் ராஜினாமா செய்ய விரும்பியிருக்கக் கூடும்... காரணம் பொதுவாழ்வில் நேர்மையான அரசியல்வாதிகள் செயயும் விஷயம்தான் அது.. ஆனால் நடந்து முடிந்த தோல்விக்கு சற்றும் காரணமே இல்லாத அவர் பதவி விலகத் தேவையில்லாம் இருப்பதால் அதை எவரும் விரும்பவில்லை...  ஆனால் தோல்வியால் துவண்டு போன திமுக தொண்டர்கள் நிருபர்களை தாக்கியிருக்க வேண்டாம்... அதனால் ஸ்டாலின் பெயருக்கு களங்கம் விளைவித்திருக்கிறார்கள் என்றே தோன்றுக்றது...

திமுகவின் தலைமைக்கு பொருத்தமானர் ஸ்டாலின்தான்.. தமிழக மக்களுக்கும் அதுதான் நல்லது...2 கருத்துகள் :

பெயரில்லா சொன்னது…

sombu super.....try more

Badri Nath சொன்னது…

வருகைக்கு நன்றி அனானி... எனக்கும் திமுகவுக்கும் ஸ்நானப் ப்ராப்தி கிடையாது... எனக்கும் சொம்பும் வேண்டாம்.. அதனால் உங்கள் வம்பும் வேண்டாம்...டிரை மோர் என்பதற்கு இது என்ன பெப்சியா...? 40 வருடங்களாக ஒரு பார்வையாளனாக அரசியலை பார்த்து வருவதால் என் கருத்தைச் சொன்னேன்... அவ்வளவுதான்... உங்கள் சார்பான கருத்தைச் சொன்னால் அது வேறு ஒருவருக்கு சொம்பாகத் தெரியலாம் அல்லவா...