வெள்ளி, 16 மே, 2014

ஊருக்கு நாலு பேர்...

இது சற்று வேடிக்கையாக இருக்கலாம்... ஆனால் எனக்கு நம்பிக்கை இருக்கிறது...எந்த ஒரு பெரிய விஷயமும் சாதாரணமாகத்தான் ஆரம்பிக்கிறது... அந்தவகையில் பஞ்சாப் மாநிலம் பல முக்கிய விஷயங்களுக்கு அடிக்கல் நாட்டியிருக்கிறது..


தற்போதும் பஞ்சாப் மாநிலம் நமக்கு வழிகாட்டியிருக்கிறது.. அந்த நான்கு எம்பிக்கள் -ஆம் ஆத்மியின் சார்பாக பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவார்கள்... அவர்களுக்கு ஓட்டளித்த அந்த மக்கள் நிச்சயமாக ஒரு மாற்றத்திற்காக மாற்றுக் குரல் எழுப்பப்பட வேண்டும் என்கிற எண்ணத்தில்தான் அவர்களை தேர்தெடுத்திருக்கிறார்கள் என்றே நான் நினைக்கிறேன்... வெறும் நபர்களை கணக்கில் கொள்ள வேண்டாம்... வெறும் எண்ணிக்கையை கணக்கில் கொள்ள வேண்டாம்..

அந்த மக்களின் மன மாற்றம் என்னை ஆச்சரியப்பட வைக்கிறது.. சிலிர்க்க வைக்கிறது.. ஆம் ஆத்மி ஒரு போதும் ஆளும் கட்சியாக பாராளுமான்றத்தில் வந்துவிடப் போவதில்லைதான்  இருப்பினும் ஜனநாயகம் வளர அவர்கள் physical presence என்பது மிக முக்கியம்  என்று உறுதி பட நம்புகிறேன்...

அநத் வகையில் மகிழ்ச்சியே என்றாலும்.. இடதுகளின் சரிவு பெரும் ஏமாற்றம்தான்... கரடுதட்டிப் போன பழைய வழிமுறைகளை சற்றே ஓதுக்கி விட்டு ஆம் ஆத்மிகள் பாதையில் இடதுசாரிகள் தங்களை மாற்றிக் கொண்டு தங்கள் பலத்தைக் கூட்டினால் நிச்சயம் நல்ல check and balance சரியாக இருக்கும்.. எனது தனிப்பட்ட தொழிற்சங்க இயக்கங்களிலும் அவ்வாறு பார்த்திருக்கிறேன்.. சரியான எதிர்க் குரல் இல்லை என்றால் பாசிசம் தலை தூக்கும்...தான் நினைத்ததே சரியென்று செய்ய ஆரம்பித்து விடுவார்கள்..

இதோ பஞ்சாப் நமக்கு வழி காட்டுகிறது... 

இது வெறும் small step of four men but giant step of the democracy


கருத்துகள் இல்லை :