சனி, 12 ஜூலை, 2014

சிம்பன்சி குரங்குகள்....

ஜெயமோகன் தளத்தில் ஒரு வாசகர் கடிதத்தைப் பார்க்க நேரிட்டது.. ஏற்கனவே பல நாட்டு நடப்புகள் மனதைப் போட்டு வாட்டிக் கொண்டிருநத போது இந்தக் கடிதம் பல விஷயங்களை யோசிக்க வைத்தது

ஜெயமோகன் தளத்தில் அந்த வாசகர் கடிதத்திற்கான சுட்டி::: http://www.jeyamohan.in/?p=33546

(பெசன்ட் நகர் கடற்கரையில் ஜீலை 7 அன்று பெண் கொலை  - காதலன் கைது- கோப்பு படம்)

ஆண் இனத்தின் இந்த வித திமிர்த்தனத்திற்கான காரணம் என்ன...? என்பது பல முறைகள் யோசிக்க வைக்கிறது நமது பாரம்பரியமான சிந்தனை முறைகள் கலாச்சார வழிவகைகள் புராணத்தின் மூலமாக வந்தது என்று பல கோணங்கள் உள்ளது என்பது உண்மைதான்.. ஆனால் மாறி வரும் கால தேச வர்த்தமானங்களில் மனித மனம் பண்பட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படி நடக்க வில்லை.. அல்லது குறைவான மாற்றமே குறிப்பாக ஆண் இனத்தின் மனத்தில் ஏற்பட்டிருக்கிறது.. இத்தனை விஞ்ஞான வளர்ச்சி யுகத்திலும்

ஜெயமோகன் இதற்கான காரணத்தை மனித இனம் சிம்பன்சி குரங்கின் உயிரியல் பண்பாக இருக்கலாம்......அதன் மூலமாக நமக்கு வந்திருக்கலாம் என்கிறார்.. அப்படி யென்றால் இந்த ஆண் வர்க்க திமிர் நிச்சயமாக ஒரு மிருக குணம் தான்...

ஆனால் சமூகத்தில் பெரியவர்கள் எடுத்துச் சொல்ல வேண்டும்...  அட மிருகமே.. பெண் என்பவள் யார்... உன் இனத்தின் ஒரு பாதிதானே...  நாணயத்தின் இரு பக்கங்கள் போலத்தான் ஆண் இனமும் பெண் இனமும்.. உன் அழுகை உன் சிரிப்பு உன் வலி உன் சந்தோஷம் என்று அத்தனை உணர்வுகளும் உள்ள சக மனித இனம்தானே அவள் என்று மர மண்டைகளுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்... 

சுருக்கமாக நாம்தான் அவள்.. அவள்தான் நாம்...அப்படியிருக்க உன்னுடைய எந்த வித கொழுப்புத் திமிர் பெண் என்னை விட குறைந்தவள் எனக்கு கீழானவள் எனக்கு உதவப் பிறந்தவள் என்று கூறுத் தோன்றுகிறது... அவளை அடக்கியாளத் தோன்றுகிறது... அவள் மீது உன் பலாத்காரத்தை பிரயோகிக்கத் தோன்றுகிறது...  அப்படி செய்யும் ஆண், மனித இனமே இல்லை... மிருகத்திற்கு கீழான ஜந்துக்கள் தான்....

அதை வேரறுக்க வேண்டும்..

நான் சட்டத்திற்குக் கட்டுப் பட்டு நடக்கும் ஒரு பிரஜை... ஆதனால்  இந்த மனித ரூபத்தில் இருக்கும் இழி ஜந்துக்களை அப்படியே விடுகிறேன்....

ஆனால்... நெஞ்சு பொறுக்குதில்லையே...

2 கருத்துகள் :

prasanth சொன்னது…

Its also due to Gene psycology.....Richard dawkins and psycologist carl jung had clearly expalined about this....We have been continously hearing a abstract version,by degrading women through various means mainly by religion and it has been stored as gene for long period...It will take time to delete that but our education needs more emphasize on these issue...Not only education parents also have responsibility to taught their children about these...But it will not happen in India...

silanerangalil sila karuththukkal சொன்னது…

NO prasanth.. You are very much pessimesstic... It will definitely happen in India provided if we give proper education.. மக்கள் மனம் என்பது உடனடியாக மாறக் கூடிய சமாச்சாரம் இல்லை.. ஆனால் மாற்றம் என்பது மெதுவாக கொஞ்சம் கொஞ்சமாக நிகழும் என்பது உறுதி... நான் நம்பிக்கையோடு இருக்கிறேன்.. வருகைக்கு நன்றி பிரசாந்த்...