வியாழன், 4 செப்டம்பர், 2014

சுசாமியும் கோஸ்வாமியும்...

நேற்று டைம்ஸ்நவ் தொலைக்காட்சியில் நடந்த விவாதம் விநோதமாக இருந்தது..


நிகழ்ச்சியில் திருச்சி எம்பி சிவா மற்றும் நாகநாதனுடன் திருவாளர் சுசாமி கலந்து கொண்டார்.. 

சற்றும் கண்ணியம் குறையாமல் பேசிக் கொண்டிருந்த சிவா மற்றும் நாகநாதனைப் பார்த்து சுசாமி ”நீங்களெல்லாம் ரவுடிகள்...” என்று எரிந்து வீழ்ந்தார்...

இலங்கைப் பிரச்சனை... தமிழக மீனவர்களை இலங்கை கைது செய்வது போன்றவைகளில் யார் தவறு யார் சரி என்பது ஒரு புறம் ... சுசாமி இலங்கை அதிபரை எந்த வித authority யில் போய்ப் பார்த்தார்  என்கிற வாதம் இன்னொருபுறம்.. அரசு சார்பாகவா.. அல்லது தமிழக மக்கள் சார்பாகவா என்கிற வாதம் என்று எத்தனையோ இருக்கிறது.. அதில் இவரின் கூற்றே சரி என்று வைத்துக் கொள்வோம்... அவரிடம்  மீனவர்கள் பெட்டிஷன் கொடுக்கட்டும... அதன் பேரில் பார்த்தார் என்கிற வாதம்கூட ஏற்கலாம்... ஆனால் ஒரு விவாதம் என்று வரும் போது ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்கிற மரியாதை கூட இல்லாமல் அவரை ரவுடி என்று வெளிப்படையான டிவி நிகழ்ச்சியில் பகிரங்கமாக கூறுவது எந்த வித நயத்தக்க நாகரீகம் என்பது தெரியவில்லை... ஹாவர்ட் பல்கலையில் படித்தவர் என்கிறார்... 

ஒரு கட்டத்தில் கோஸ்வாமியும் சற்று அதிர்ச்சியாக சுசவாமியைப் பார்த்துக் கொண்டிருந்தார்.. 

அடிக்கடி   பேட்டி என்றால், அர்னாப் இவரை அழைப்பது வழக்கம்.. தற்போது தெரிந்து கொண்டிருப்பார்..

கருத்துகள் இல்லை :