புதன், 17 செப்டம்பர், 2014

உண்மை சுடும்

எப்பொழுதாவது FM ரேடியோ கேட்பதுண்டு.. அர்த்தமில்லா பாடல்களுக்கு நடுவில் சில நேரங்களில் சில அற்புத தருணங்கள் கிடைப்பதும் உண்டு...


அந்த வகையில் இன்று (17.9.14) அன்று ரேடியோ ஒன்னில் (94.3 FMமில்) திருவாளர் ஜோகின் அற்புதம் அவர்களின் பேட்டி ஒலிபரப்பானது..

திருவாளர் ஜோகின் அற்புதம் என்பவர் தேசிய குடிசைவாழ் மக்கள் சம்மேளனத்தில் தலைவர் ஆவார்.. இவர் ஒரு தமிழர்.

ரமன் மெகசேசே விருதைப் பெற்றவர். 2014கான அமைதிக்கான நோபல் விருதுக்குப் பரிந்துரைக்கப் பட்டவர். இவரைப் பற்றி மேலதிகத் தகவல்கள் http://www.skollfoundation.org/entrepreneur/jockin-arputham/ பெறலாம்.. இவர் 37 நாடுகளில் பயணம் செய்து அந்தந்த நாட்டிலுள்ள குடிசைவாழ் மக்களுக்களின் வாழ்வாதாரத்திற்காக போராடியிருக்கிறார். 

அவர் பேட்டியில் முக்கியமான அம்சங்கள் என்னை ஆச்சரியப் படவைத்தவை

மும்பை தாராவி உலகத்தில் மிக பெரிய குப்பம்தான்  ஆனால் நம் நாட்டில் வாழும் ஒரு குடிசைவாசி பிலிப்பைன்சில் உள்ள குடிசையில் ஒரு நாள்கூட வாழ மாட்டான்.. ஓடி வந்துவிடுவான்.. அத்தனை மோசம்.. என்று ஒரு போடு போட்டார்..

மெக்சிகோ தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் குடிசைகள் படு மோசமானதாம்.. குறிப்பாக தென்னாப்பிரிக்காவில் மேற்கூரைகூட இல்லாமல் மழை வெயிலில் மரத்தில் மக்கள் வாழ்கிறார்களாம்....

உலகில்  இந்தியாவில்தான் மோசமான வாழ்க்கையை மக்கள் குடிசையிலும் குப்பத்திலும் வாழ்க்கிறார்கள் என்று நினைத்திருந்தேன்.. ஆனால் இவர் பேட்டியைக் கேட்டதும், நம் நாடு எத்தனையோ  பரவாயில்லை என்று  நினைக்க வைத்துவிட்டார்...

கருத்துகள் இல்லை :