வியாழன், 25 செப்டம்பர், 2014

சாதனை மற்றும் சோதனை

நாளேடுகளில் கண்ணில் படும் செய்திகள் ஏன் கலவையான உணர்வை தருகின்றனவோ... சாதனைச் செய்தியும் சோதனைச் செய்தியையும் பார்க்க நேரும் போது, சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லை...
========================================================
சாதனை
மங்கள்யானின் வெற்றி மகத்தான வெற்றி! எத்தனை மகிழ்வான தருணம் இது... எத்தனை கடுமையான நிமிடங்கள் அவை.. ஒரு வழியாக வெற்றியடைந்தது இந்தியர்கள் அனைவரும் பெருமை கொள்ள வேண்டிய விசயம்

மங்கள்யான் என்ற விண்கலம் நேற்று காலை  (24 செப்டம்பர் 2014) எட்டு மணி அளவில் செவ்வாய்க்கோளின் சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப் பட்டது.  

மங்கள்யான் என்பது orbiter வகையைச் சேர்ந்த விண்கலம் ஆகும்.இது செவ்வாய்க் கோளைச் சுற்றி வந்து ஆய்வு செய்யும்; படம் எடுத்து அனுப்பும்.
இந்த வெற்றிக்கு மூல காரணமாய் இருந்த பலரில் குறிப்பிடத்தக்கவர்கள் இரண்டு தமிழர்கள் என்பது கூடுதல் மகிழ்ச்சி..

=== ==============================================================
சோதனை 
(இந்தச் செய்தி times of India வில் வெளியான செய்தியை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது)  

நேற்று முன்தினம் டெல்லியில்  மிருகக் காட்சி சாலையில் அந்தப் பையனுக்கு நிகழ்ந்த கொடூரத்தை என்ன வென்று சொல்வது..

செய்தித்தாளின் செய்தி  என்ன வென்றால் அந்த வெள்ளைப் புலி அந்தப் பையனை இரண்டு அல்லது இரண்டரை நிமிடங்கள் மட்டுமே கவ்விக் கொண்டு சென்றது. அதற்குள் மக்கள் கூச்சலிட்டு கல்லெறிந்ததால் அந்தப் பையனை விட்டுவிட்டுக் கூண்டுக்குள் சென்றுவிட்டது என்று கூறுகிறது..

ஆனால் பிரேதத்தை கைப்பற்ற கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் ஆகியிருக்கிறது..

அந்தப் புலியைவிட் கொடுமையான இந்தத் தவறை என்னவென்று சொல்வது...காலதாமதம் என்கிற பெரும் கொடூரம்தான் தாங்கிக் கொள்ள முடியவில்லை...

கருத்துகள் இல்லை :