வெள்ளி, 5 செப்டம்பர், 2014

சர்ச்சைகள் ஒரு தொடர்கதை

இரண்டு சர்ச்சைகள்... முதலில் கமல் இரண்டாவது நீதியரசர். சதாசிவம் சம்பந்தப்பட்டது
...
(1) கமல் சர்ச்சை
பொதுவாகவே கமலைப் பற்றி ஏதாவது விமர்சனங்கள் சுழன்று கொண்டிருக்கும்.. அவர் என்ன செய்தாலும் சரி என்பவர்கள் ஒரு சிலர்.. அதே போல அவர் என்ன செய்தாலும் தப்பு என்று சொல்பவர்கள் வேறு ஒரு க்ரூப்... இதில் இரண்டாவது தரப்பினர்கள் கமல் எங்கேடா சறுக்குவார் என்று காத்திருப்பார்கள்... உடனே கல்லடிதான்... 

பாவம் கமல் ஒரு காய்க்கிற மரம்தானே..... 
Image result for kamal hassan visit jeeyar madam photos

அப்படி என்ன செய்து விட்டார்.. பாபநாசம் என்கிற இடத்தில் தான் நடிக்கும்  திரைப்பட விஷயமாக சென்றிருக்கிறார்.. அங்குள்ள மடத்தில் ஷீட்டிங்.. மரியாதை நிமித்தம் ஜீயரை சந்தித்திருக்கிறார்... அதில் என்ன தவறு.. உடனே.. ஒரு பகுத்தறிவு வாதி.. நாத்திகன்... பவ்யமாக ஒரு சாமியார் முன்னே.. என்று ஒரே பாய்ச்சல்தான்....

ஒரு வைணவ மடத்தில் விபூதியுடன் அமர்த்திருக்கிறார்... அந்த விபூதிப் பட்டையும் மேக்கப் சமாச்சாரம் என்று ஜெயமோகனே சொல்லிவிட்டார்.. (சம்பவம் நடந்த போது அவர் அங்கிருந்தார்...) அப்பறம் என்ன... ஏன் வீண் அவதூறு...

நாம் வாழும் காலத்தில் இருக்கும் ஒரு மகாகலைஞனை தயவு செய்து கொச்சசைப் படுத்தாதீர்கள்  ப்ளீஸ் என்று மட்டுமே சொல்லத் தோன்றுகிறது..

(2) நீதியரசர் சதாசிவம்.
சமீபத்தில் கேரளா ஆளுநர் பதவிக்கு நியமனம் செய்யப்பட்ட முன்னாள் உச்ச நீதிமன்ற நீதியரசர் எப்படி அந்தப் பதவியை ஏற்கலாம் என்று சர்ச்சை அங்கங்கே நாளேடுகள் மற்ற ஊடகங்களில் வந்து கொண்டிருக்கிறது..

உண்மைதான்.. மரபு மீறல் என்றால் நாம் எத்தனோ உதாரணங்கள் சொல்லிக்கொண்டே செல்லலாம்... ஏன் காங் ஆட்சியிலும் நடந்திருக்கிறது... உதாரணம் பாத்திமா பீவி நமது ஆளுநராக இருந்தவர்தானே... 

பிஜேபி எதிர்க்கட்சியாக இருந்தபோது வேறு நிலையும் தற்போது வேறு நிலையும் எடுக்கிறது.. காங்கிரசும்தான்.. அவரவர் தேவையை ஒட்டி ஏதாவது  கிளப்பிக் கொண்டேயிருப்பார்கள்தான்...

காய்தல் உவத்தலன்றி பார்த்தால்...
முதல் கோணம்
நீதியரசராக இருந்தவர்.. தன்னுடைய காலகட்டத்தில் எந்த வித தவறுகளுக்கும் இடம் கொடுக்காமல் நீதி பரிபாலனம் செய்திருக்கிறார் என்று பார்த்தால், நிச்சயம் நீதியரசர் பாரபட்சமற்றவர் என்பது உண்மைதான்.. அவரின் நெடிய அனுபவ அறிவு நமது நாட்டிற்கு ஏதோ ஒருவகையில் கிடைக்கும் என்றால் அது வரவேற்கத்தகுந்ததுதான்...

இரண்டாவது கோணம்
எந்த ஒரு நீதியரசர்  ஓய்வு பெறும் போது இப்படி ஏதாவது பதவிகள் கிடைக்கச் செய்ய  ஆளும் அரசுகள் முனையலாம்... அதனால் ஒரு வித எதிர்ப்பார்ப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியாது... அப்படி செய்யும் போது வீண் விவாதப் பொருளாகத்தான் ஆகும் என்பதை நாம் ஏற்கவேண்டும்..

கருத்துகள் இல்லை :