வியாழன், 5 மார்ச், 2015

அழுகிய கூடை....

இன்று தமிழ் இந்து நாளேட்டின் தலையங்கத்தைப் படித்ததும் இதயம் கனத்தது. அழுகையும் வந்தது. அடக்கிக் கொண்டேன். சட்டம் என்னை கட்டுப் படுத்ததாது என்றால் ’எதை’யும் செய்யலாம் தவறில்லை என்று தோன்றியது..


அட நாசகார பாவிகளா...  நிர்பயா என்கிற மனித குலத்தைச் சேர்ந்தவரை கடித்துக் குதறிய அந்த  சுட்டுக் கொல்லப் பட வேண்டிய மனித உருவில் உலவும் கொடிய விஷப் பிறவி இத்தனை கேவலப் படுத்துவான்  அதைக் கேட்டுக் கொண்டு பேசாமல் இருக்க வேண்டுமா என்று கத்தத் தோன்றியது.. பெண் என்பது தனிப் பிறவியா... அட நாய்களே... நாம்தானே பெண்... பெண்தானே நாம்... அப்படியானால் பெண்ணுக்கு எதிரான எதுவும் மனித குலத்திற்கு எதிரானதுதானே...

திகார் சிறையில் இருக்கும் அந்த வாழத் தகுதியற்ற நாய் மனித குலத்திற்கு எதிராக பேசியிருக்கிறது..(இந்து பக் 16).... அணுகுண்டை போடும் போர் வெறியர்களுக்கு எதிராக நாம் என்ன செய்ய வேண்டுமோ அதை தற்போது அந்த நாய்க்கு எதிராக செய்திருக்க வேண்டும்... 

பெண்களுக்கு எதிரான இந்த செயலை பெண் அமைப்புகள் மட்டுமே பார்க்கத் தேவையில்லை.. நாம் அனைவரும் - அதாவது மனிதத்தன்மை கொண்டவர்கள் எவரும் கையில் எடுக்க வேண்டும்... ஆக நேர்மையாக இயங்கும் அத்தனை ஜனநாயக இயக்கங்கள் அதைச் செய்ய வேண்டும்..இந்து ஏடு சொல்வதை நாம் முற்றிலும் ஏற்க வேண்டும்... இந்தியர்கள் நாகரீகமானவர்கள் ஜனநாயகவாதிகள் குறைந்த பட்சம் மனிதர்கள் என்பது உண்மையானால் அதை வல்லறுவு புள்ளி விவரங்கள் சொல்ல வேண்டும் 

அது வரை நாம் என்ன பேசிப் பயன்...?....

கருத்துகள் இல்லை :