வெள்ளி, 27 மார்ச், 2015

ரங்கநாதன் தெருவும் கிரிக்கெட்டும்....

எனது கிரிக்கெட் பித்து தெளிந்து பல வருடங்கள் ஆகிவிட்டது.. அவ்வப்பொது உலகக் கோப்பை  போன்றவைகள் நடந்தால் ஸ்கோர் மட்டும் தெரிந்து கொள்வதோடு சரி...  ஆர்வக் குறைவுககு  ஊழல் பெரும்பாலும்   காரணமாக இருக்கலாம்... மேலும் மேலும் .கேள்விப் பட கேள்விப் பட அடச்சே என்றாகிவிட்டது

ஆனால் நம் மக்களின் கிரிக்கெட் மோகத்தைப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கும்,. நானும் ஒரு காலம் அப்படி இருந்தவன்தான் என்றாலும் ...  இந்தியா தோற்றால் அழுவது, டிவி பெட்டியை உடைப்பது தோனியின் பட எரிப்பு ,... ஒரு கூலித் தொழிலாளி இந்தியா வெல்ல வேண்டும் என்று வேண்டிக் கொண்டு தனது நாக்கை அறுத்து சாமிக்கு நேர்ந்திருக்கிறான்...  அட தேவுடா........எங்கே போய் முட்டிக் கொள்வது.....வெள்ளைக்காரர்களை விட நமது ஆர்வம் அதிகம்,அதீதம்......ரங்கநாதன் தெருவின் படம் பத்திரிகையில் பார்த்தேன்... நாளை தானே பந்த்.. நேற்றே நடந்து விட்டதா என்று சந்தேகம் வரவழைக்கும் வகையில் வெறிசோடிக் கிடந்தது..

சரி விஷயத்திற்கு  வருவோம் நேற்று சிட்னியில் நடந்ததை சற்றும் ஜீரணிக்க இயவில்லை... உண்மையில் நமது அணியில் ஏதோ ஒரு குறைபாடு உள்ளது.. சில வருடங்களுக்கு முன் ஸ்ரீகாந்த் சொன்னதாக ஞாபகம்...
”நம்மிடம்  killer instinct குறைவு...”

தோல்விக்கு பல காரணம் அலசி ஆராயப் படுகிறது.. செய்தித்தாள்களில் டிவியில்.... எல்லாம் சரிதான்.. தோனியின் தலைமை சரியில்லை... பௌலர்களிடம் களப் பகுப்பாய்வு செய்யவில்லை.. அஸ்வினை
17 ஓவரில் கொண்டு வந்தது. ...

அவற்றை நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும் என்றாலும்....

ஒரு உலகக் கோப்பை அரையிறுதி என்கிற பொறுப்புணர்வு இல்லாமல் ஆடியிருக்கிறார்கள் என்பது நிதர்சனம்...  இதை எத்தனை சால்ஜாப்புகள் சொன்னாலும் ஏற்கவே முடியாது....

தோல்வியில் இரண்டு வகை... கம்பீரமான தோல்வி கேவலமான தோல்வி...நம்முடையது இரண்டாது வகை.....

நீயூசிலாந்திடம் தென்னாப்பரிக்க வீரர்கள் தோற்றார்கள்... எத்தனை கம்பீரமான தோல்வி அது இறுதி வரை விட்டுக் கொடுக்காமல் ஆடியது... உண்மையில் அவர்களிடம் நாம் பாடம் கற்ற வேண்டும்...

கருத்துகள் இல்லை :