சனி, 14 மார்ச், 2015

த்ருஷ்யம் - INTELLECTUAL TREAT

பல மாதங்களுக்கு முன்பே என்னிடம் சில நண்பர்கள் த்ருஷ்யம்  படம் பார்க்கச் சொன்னார்கள்... மலையாளப் படம் மொழி புரியுமோ புரியாதோ என்று நினைத்தேன்..  அதுவும் இல்லாமல் கமல் வேறு அதை தமிழில் செய்கிறாரே அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்தேன்..


சமீபத்தில் படத்தைப்   பார்க்க நேர்ந்தது.. பார்த்த பிறகு எனது பிரம்மிப்பு இன்றும் விலகவே இல்லை...

ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால் கிளாசிக்....

ஒரு மிகப் பெரிய கலைப்படைப்பு எதற்கும் மொழியோ  வேறு எதுவோ தடையில்லை என்பதை பரிபூர்ணமாக உணர்கிறேன்..

மோகன்லால் நடிப்பு பற்றி பேசுவதா... அல்லது படம் எடுக்கப் பட்ட கலை நேர்த்தியைப் பற்றிப் பேசுவதா என்று தெரியவில்லை... கதை என்று பல நூறு கதைகளில் இதை சேர்த்துவிட முடியாது.. 

சமகால வாழ்க்கை அதன் குறுக்கு வெட்டுத் தோற்றம் என்ற பிரிவில்தான் இந்தப் படத்தைச் சேர்க்க வேண்டும்.. ஒரு படத்தைப் பார்த்த பிறகு அதன் தாக்கம் சில தினங்கள் தங்கும் என்றால் உயர்ந்த உனனத கலைப் படைப்பு
என்றுதான் சொல்ல வேண்டும்.. என் மனத்தின் பல கதவுகளை அனாயசமாக திறந்து விடுகிறதே.. அதன் காரணம் புரியாமல் திகைத்துக் கொண்டிருக்கிறேன்...

படத்தைப் பார்த்த பிறகு அதைப் பற்றி எழுத வேண்டும் என நினைத்தேன் அதை  நான் இப்படி தொடங்குகிறேன்..

ஒரு படித்த வர்க்கத்தைச் சேர்ந்தவன் வாழ்க்கை என்பது குழப்பமானது.. வறட்டு கௌரவத்துடன் வறட்டு சித்தாதாங்கள் பேசிக் கழிக்கும் வாழ்க்கை... அறிவு ஜீவி என்கிற போலி முத்திரையுடன் தன் வாழ்க்கைகை கழித்துக் கொண்டிருப்பான்... பிறரை விட தான் உயர்ந்தவன் என்கிற அதிகார மமதையுடம் வாழ்வான்.. அப்படிப்பட்டவன் தன் வாழ்வில் பல சமயம் தோற்றுத்தான் போகிறான்.. காரணம் மேற் சொன்ன குணங்களால்..

ஆனால் படிப்பறிவு இல்லாத பாமரன் தன் சொந்த உழைப்பால் உயர்ந்தவன்  ஒருவன்  வாழ்க்கை என்பது ஒரு தெளிந்த நீரோடைப் போன்றது.. அதில் வீண் பிம்பபங்கள் வறட்டு சூத்திரங்கள் தத்துவங்கள் குழப்பங்கள் ஏதும் இருக்காது... உடல் உழைப்பை கேவலமாகப் பார்க்காத தன்மை கொண்டவன் அவன்..  அப்படிப்பட்ட ஒருவன் வாழ்க்கையில் ஏற்படும் ஒரு சம்பவம் அதன் தீவிரம் அதை அவர் தீர்க்க முயலும் சமார்த்தியம் .. அட... lovely என்று கத்த வேண்டும் என்றே தோன்றுகிறது... படத்தின் எந்த ஒரு காட்சியும் வீணாக செய்ததில்லை.. ஒவ்வொரு  காட்சியும் அர்த்தப் புஷ்டியுடன் எடுக்க பட்டிருக்கிறது.. மேற்கத்தியப் படங்களுக்கு சவால் விடும் பாணியில் இருக்கிறது...

கதையின் நாயகன்  படிக்காதவன்தான்... ஆனால் அவன் சினிமா என்கிற துரோணர் மூலமாக பல விஷயங்களை கற்கிறான்.. மெத்தப் படித்தவர்களை விட துல்லியமாக திட்டம் தீட்டுகிறான்... அவன் திட்டம் எங்கும் தவறவில்லை...

இறுதியில் அவன் கூறுவான் ”என் வாழ்க்கையில் என் குடும்பம் எனக்கு முக்கியம்.. அதற்காக எதையும் செய்வேன்.. ஆனால் அவற்றில் சரியானவை மட்டுமே இருக்கும்...” 

உண்மைதான்... பஞ்ச் டயலாக் என்று சொற்றொடரை திரைப் படத்தில் அடிக்கடி சொல்வார்கள்  .. ஆனால் இதற்கு ஈடாக ஒரு பஞ்ச் எதுவுமே இல்லை...

திரைத் துறையில் மலையாளிகள் முன்னேறித்தான் இருக்கிறார்கள்... நாமும் அப்படி ஆக வேண்டும் என்று ஏக்கம் தோன்றத்தான் செய்கிறது...


கருத்துகள் இல்லை :