வெள்ளி, 5 ஜனவரி, 2018

வீசும் காற்றில் விஷம் ...

ஒரு சில நண்பர்கள் TTVன் வெற்றி  பற்றி நான் எழுதியதை கூறும்போது,   காசுக்கு ஓட்டு என்பதை குறிப்பிடவில்லை என்றார்கள் ..

கமல் ஜெயமோகன் முதல் பலரும் இதை பற்றியே சொன்ன பிறகு நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை...

 ஆனால் ஆளும் கட்சியை மீறி TTVயால் எவ்வாறு இப்படி பட்டுவாடா செய்யமுடிந்தது  என்பது ஆச்சரியம் ..  EPS-OPS முதல் மத்திய அரசு வரை எதிராக இருக்கும் சூழலில்   காவல்துறையும் உளவு துறையும் கோட்டை விடுமா என்பதும் கேள்விக்குறி .. 

அதனால்தான் நான் சென்ற முறை அப்படி எழுதினேன் ..ஆனால் பலரும் சொல்வதை வைத்து பார்க்கும்போது அனைத்து தரப்பும் காசுக்கு ஓட்டு என்கிற நிலையை எடுத்திருப்பது நிச்சயம் வீசும் காற்றில் விஷம் கலந்திருப்பதையே காட்டுகிறது ...மேலும்   TTV இப்படி செய்யமுடிந்தது நமது நிறுவனங்களின் இயலாமையை காட்டுகிறது 

மீண்டும் அனைத்தையும் மறு ஆய்வு செய்தலும் இந்த காசுக்கு ஓட்டு என்பது ஒரு குறிப்பிட்டவரை தான் பாயும் என நினைக்கிறேன் .. RK நகர் நமக்கு தரும் பாடம் -  திமுக அதிமுக ஆகிய கட்சிகளின் வீழ்ச்சி நிலையை காட்டுவதாகும்... ஒரு புதிய தலைமைக்கு மக்கள் தயாராக இருப்பதாகவும் இன்னமும் நம்புகிறேன் ..அதுதான் மக்கள் நமக்கு தரும் செய்தியாக பார்க்கிறேன் ...இந்த சமயத்தில் ரஜினியின் வரவு நிச்சயம் ஒரு மாற்றம் வரலாம்... இந்தப் பந்தயத்தில்  கமல் சற்றே பின் தங்கிவிட்டார் என்றே தோன்றுகிறது..


 .. அதே சமயம் ரஜினியை நான் ஆதரிக்க வில்லை என்றாலும் அவரின் பேச்சு உடல் மொழி போன்றவை வெள்ளேந்தியாய் உள்ளதாக தோன்றுகிறது ...அவர் ஆன்மிக அரசியல் என்றது அவரின் அப்பாவித்தனத்தை காட்டினாலும் அவரை பயன்படுத்து பிஜேபி முயல்வது தெளிவாக தெரிகிறது ..எவர் வலையில் வீழாமல் தனித்து இயங்கலாம் ..

இது ஒரு புறம் மறு புறம் தமிழ் நாட்டை தமிழன் ஆளவேண்டும் என்ற கனவும் கை நழுவி வருவதும் ஒரு சோகமே ...

4 கருத்துகள் :

ஆதி சொன்னது…

Good view

silanerangalil sila karuththukkal சொன்னது…

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி AADHI

வேகநரி சொன்னது…

இது ஒரு புறம் மறு புறம் தமிழ் நாட்டை தமிழன் ஆளவேண்டும் என்ற கனவும் கை நழுவி வருவதும் ஒரு சோகமே ...
என்ன சோகம் உங்க சோகத்திற்கு எதார்த்தம் என்ன என்பதை படிங்க
திருடும் தமிழன் தான் வேண்டுமா?
https://sathyanandhan.com/2018/01/09/%e0%ae%95%e0%af%88-%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a4/

silanerangalil sila karuththukkal சொன்னது…

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி வேகநரி ...மணியன் கருத்து எனக்கு உடன்பாடானது இல்லை ...நான் மீண்டும் சொல்கிறேன் தமிழகத்தை தமிழன் ஆளவேண்டும் என்பது ஒரு ஜனநாயக கோரிக்கை... நியாயமான அபிலாஷை ...