சனி, 13 ஜனவரி, 2018

ஆண்டாள் PART II தொடர்ச்சி...

ஆண்டாள் அவள் தமிழை ஆண்டாள்   கட்டுரையை 20 நிமிடத்தில் தோன்றியதை மட்டும் எழுதினேன்.. ஆராய்ந்து எழுதவில்லை.. நாட்டு நடப்பை பார்த்தவுடன் ஏற்பட்ட மனஎழுச்சி..

எனது கட்டுரைகள் பெரும்பாலும் ஜெயமோகன் அவர்களின் பார்வையை ஒட்டி இருக்கும் இது முன்னேற்பாடோடு நடப்பது இல்லை.. ஆனால் நான் அவர் கட்டுரையை படிக்கும் போது பெரும்பாலும் ஒத்து இருப்பதாய் கண்டு ஆச்சர்யமடைந்தேன்.. ஒரு சிலருக்கு ஜெயமோகன் அலர்ஜி இருக்கும் அதற்கு நான் ஏதும் செய்ய முடியாது

ஆண்டாள் தமிழை ஆண்டாள் என்கிற பதமே கண்ணதாசனிடம் நான் எடுத்தாண்டது நான் தமிழ் புலவர் அல்லன் . அவரே அந்த கட்டுரைக்கு அவர் வைத்த பெயர் ஆண்டாள் அவள் தமிழை ஆண்டாள் தற்போது கூகிளிட்டு பார்த்த போது இப்படி சொல்கிறார்

‘’ஆனால், `இசை மங்கலம்’, `சொல் மங்கலம்’. `பொருள் மங்கலத்தோடு புதுத் தமிழ்ச் சொற்களைத் தூக்கிப் போட்டுப் பந்தாடி இருக்கும் நாச்சியார் திருமொழி, எனது சிறுமையை எண்ணி எண்ணி என்னை வெட்கப்படவே வைத்தது.’’

நான் வாய் தவறி சொல்ல வில்லை கண்ணதாசன் வரிகள் நீங்கள் கண்ணதாசனை ஏற்பதும் மறுப்பதும் உங்கள் முடிவு
(விநாயகம்)

நான் குடந்தை அருகே சேர்ந்த நாச்சியார்கோயில் என்கிற ஊரை சேர்ந்தவன்.. என் சிறுவயதில் எங்கள் ஊர் (கல்கருடன்) ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலுக்கு மாலை தோறும் செல்வேன்…  கோயிலின் சுவர்களில் எழுதியிருக்கும் திருமங்கையாழ்வார் பாசுரம் என்னவென்றே அறியாமல் படித்து கொண்டிருப்பேன்… எங்கள் கோயில் திருவிழாவில் ஆண்டாள் பாசுரம் நெற்று செய்து வெள்ளி காசு வாங்கியது மிக பாக்கியமாக கருதுகிறேன்…  ஆண்டாள் தமிழை என் போன்ற ஒரு சிறு கூட்டத்திற்கு மட்டும் என்று நான் சொல்ல வில்லை என்போன்ற பெருங்கூட்டத்திற்கு என்று திருத்தி சொல்கிறேன் காரணம் என்னை போன்ற சாதாரணர்கள் அதிகம்(விநாயகம்)

உங்கள் பின்னூட்டத்தில் சொலிருக்கும் இன்ன பிற கருத்துக்கள் உங்கள் கருத்துக்கள் அவைகள் நான் கொண்ட கருத்தை மாற்றவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்

நான் சொன்ன பேரரசுகள் தோன்றிய பிறகுதான் தேவதாசி முறை தோன்றி இருக்க வேண்டும் என்பது மார்க்சிய நோக்கு.. அதைத்தான் நான் சுட்டியிருக்கிறேன்..

வீர நாத்திகம் என்று சொல்வதை பற்றி சில விளக்கம் சொல்ல விரும்புகிறேன்..
இணையத்தில் ஒரு சில வீர நாத்திகர்களை பார்க்கிறேன்.. அவர்கள் பெரும்பாலும் ராஜராஜசோழன் காலத்தை பற்றி குறிப்பிட்டு பேசும் போது பார்ப்பனர்கள் ஆதிக்கம் நிறைந்தது சாதி கொடுமைகள் என்று கூக்குரலிடுகிறார்கள் அதை பற்றி நான் சொல்வதை விட ஜெயமோகன் கருத்தே எனது கருதும்… அவற்றை ஏற்பதும் ஏற்காமல் விடுவதும் அவரவர் விருப்பம்… ஆனால் நான் அவற்றை ஏற்கிறேன் என்பதை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.. ஆக இந்து மதம் என்பதே ஒரு தொகுப்பு… வரலாற்று ரீதியில் நடந்த ஒரு நிகழ்வு ..அப்படி இருக்கும் போது தங்கள் ஒற்றை அடிப்படை அரசியலுக்காக அனைத்தும் பார்ப்பன சதி என்பதை ஏற்க முடியாது.. …மேலும் அந்த ஒற்றை கருத்தாக்க அரசியலை சில வீர நாத்திகர்கள் செய்வதை நான் மறுக்கிறேன் அதற்கும் ஏராளமான ஜெயமோகன் கட்டுரையை என்னால் மேற்கோள் காட்டமுடியும்..

ஆகவே எனது கட்டுரையை தனித்தனியாக படிப்பதை காட்டிலும் தொடர்ச்சியாக படித்தால் நான் சொல்ல வருவது விளங்கும் என நினைக்கிறன் நன்றி


9 கருத்துகள் :

வருண் சொன்னது…

சும்மா தேவையே இல்லாமல் நீங்களா வீர நாத்திகன் னு ஒரு வரியை எழுதிவிட்டு, இப்போ விளக்கம் வேற??

மதவெறீயன் ஜெயமோகனுக்கு வக்காலத்து வேற?

ஜெயமோகனுக்கு சாகித்ய அகாடமி கிடைக்கவில்லை, பாரதீய ஞான் பீடத்திற்கு பரிந்துரை செய்யப் படவில்லைனா? எனக்கு தகுதியிருக்குனு சொல்ல வேண்டியதை விட்டுவிட்டு வைரமுத்துவை விமர்சிப்பது ஈனச் செயல்.

அதையெல்லாம் விமர்சிக்க உங்களூக்கு நேரமில்லை?? வக்கில்லை. யாருமே பார்க்காத பழகாத ஆண்டாள இன்னொரு கடவுளாக்கி இஷ்டத்துக்கு உளற வேண்டியது!!

நானும் நாத்திகன் தான். உம்மை மாதிரி மதவெறீ பிடிச்ச ஆட்கள் எனக்கு முட்டாள்களாக தெரிவதை தைரியமாக சொல்லுவேன். வீரம் என்பது உண்மையை அடிச்சுச் சொல்றது. அவ்வளவுதான். அதுக்கு நாத்திகனா இருக்கனூம்னு இல்லை. சிந்திக்கத் தெரிந்த மூள வேலை செய்யும் பார்ப்பானாவும் இருக்கலாம்.

you better publish this comment!

PV சொன்னது…

ஜயமோஹன் தான் நீங்கள் காட்டும் ஆதாரம். அவர் எழுதியதை ஏற்றுக்கொண்டு அதுவே, சோழர்கள் ஆட்சிக்காலத்துக்குபின்புதான் தேவதாசி முறை ஏற்பட்டது என்கிறீர்கள். நான் ஜயமோஹனைப் படித்ததில்லை. வரலாற்றைப் பற்றித் தெரிந்து கொள்ள வரலாற்றாசிரியர்களிடம்தான் போவார்கள். ஓர் இலக்கியவாதியிடமா போவார்கள்? ஆனால், அவ்விலக்கியவாதி ஒர் வரலாற்றறிஞராகவும் பரிணாமம் கொண்டவராக இருந்தால், அவரைப் படிக்கும் - ஜயமோஹன் என்ற வரலாற்றறிஞர் என்றும் பார்க்கலாம். ஜயமோஹன் அப்படிப்பட்ட வரலாற்றறிஞரா? அவர் எழுதியவைகளை வரலாற்றறிஞர்கள் எடுத்துக்காட்டினார்களா எங்கேயும்? ஆண்டாள் யார் எனப்து வரலாறு. பக்தியோ இலக்கியமோ இல்லை. கல்லூரி வரலாறு விடைத்தாளில் ஜயமோஹன் இப்படி சொல்லியிருக்கிறார் என மேற்கோள் காட்டிப்பாருங்கள். திருத்துபவர் வெட்டித்தள்ளிவிடுவார் விடையை.

நான் சென்றது நீலகண்ட சாஸ்திரி, சுப்ரமணியம். இவர்களெல்லாம் வீர நாத்திகம் பேசியவர்களோ, திராவிட நாத்திகம் பேசியவர்களோ கிடையவே கிடையாது. மார்க்சீய வரலாற்றாய்வாளர்களும் கூட கிடையாது. எனவே இவர்களே நமக்கு சிறந்த வழிகாட்டிகளாக இருக்க முடியும்; இருக்கவும் வேண்டும்.

சோழர்கள் பற்றி எழுதிய தனிநூலும் தென்னிந்திய வரலாறு என்று எழுதிய நூலும் சாஸ்திரியின் பெயரைச் சொல்லி இன்றும் நின்று நிலவுகின்றன‌. அவர் சொல்வது: சோழர்களில் ஆட்சிக்காலத்தில் மன்னர்கள் பிராமணர்களின் பேச்சைக்கேட்டே நடந்தார்கள். விளைவு: சோழர்-பிராமணர் தொடர்பால் சனாதன மதமும், சமஸ்கிருதமும் தழைத்தோங்கின. பெருங்கோயில்கள் கட்டப்பட்டன. வைணவத்தைவிட சைவம் தழைத்தது. சைவப்பிராமணர்களின் ஆதிக்கத்தை இது காட்டுகிறது.

இதைத்தான் நீங்கள் காட்டும் ''வீர நாத்திகர்கள்'' எடுத்து பயன்படுத்திக்கொண்டார்கள். தேவதாசி முறை முன்பில்லாமல் திடீரென ஏன் சோழர்களாட்சியில் வந்தது? பெருங்கோயில்களை சோழர்களைக்கட்ட வைத்தார்கள்; அதன் நிர்வாகம் எப்படியிருக்க வேண்டும் என அவனுக்குச் சொன்னார்கள்; ஆடல்-பாடல்கள்; கலை கோயில்களால் வளர்ந்தன. வளர்க்க‌ ஊழியர்கள்.பிடித்தார்கள். பெண்களைப் பிடித்து நிரந்தர நர்த்தகிகளாகவும் பாடகிகளாகவும் ஆக்கினார்கள்; தேவதாசி முறை பிறந்தது. பிரம்மாண்டமான பெருங்கோயில்களினால் தேவதாசிகள் உருவாக்கப்பட்டார்கள்.

இப்படிப்பட்ட தேவதாசி முறை பின்னர் திரிந்து வைப்பாட்டி முறையாகவும் விபச்சாரிகளை உருவாக்குவதற்கும் களனாகியது. உண்மையா? பொய்யா? சரி ஆகியது. பின்னராவது அதைத்தூக்கியெறிந்து பெண்ணின் அவமானத்தை நீக்கலாமே? ஆனால் பிராமணர்கள் எதிர்த்தார்கள். இன்றும் சொல்கிறார்கள்; அம்முறை சிறந்ததே. தேவதாசிகள் என்றால் உயர்ந்தோர். தமிழக சட்டசபையில் எதிர்த்தார்கள். அவர்கள் எதிர்ப்பை மீறித்தான் அம்முறை அழிக்கப்பட்ட்து.

PV சொன்னது…

ஆண்டாள் கதை வேறு. அவர் யார்? என்பது எவருக்குமே தெரியாது. அவரின் கதை 14ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட குருபரம்பரா பிரபாவம் என்ற நூலிலிருந்தே எடுக்கப்பட்டு வழிமொழியப்படுகிறது வைணவர்களால். ஏன் அப்படி சொல்கிறேனென்றால், வரலாற்றாசிரியர்கள் அந்நூலை எடுத்துக்கொள்வதேயில்லை.

ஆழ்வார்கள் காலம் 7லிருந்து 9வரை என்பது கணிப்பு. 10ம் நூற்றாண்டில் இராமானுஜர் வந்தார். 14ம் நூற்றாண்டில் குருபரம்பரா பிரபாவம் எழுதப்பட்டது. இப்ப்பிரபாவத்தைத்தவிர வேறொன்றுமே இல்லை. ஆழ்வார்கள் வரலாறு என்பது வைணவர்கள் எழுதிக்கொண்டது. ஆழ்வார்களை விட்டிருந்தால், அதாவது அவர்கள் எழுதிய்தை மற்ற புல்வர்கள் எழுதியதைப்போல பொதுச்சொத்தாக விட்டிருந்தால் வைணவமே இல்லை. அனைத்து பாடல்களையும் தொகுத்து நாலாயிரமாக்கி, நான்கு வேத சாரமென காட்டி, திராவிட வேதமென பெயரிட்டதற்குப் பின் குருப்ரம்பரா பிரபாவம் தேவைப்படுகிறது. 12 மனிதர்கள் பெருமாளையே முழ்முதற்கடவுளாக பாடல்களில் ஏத்தியதால் ஆண் ஆழவார்கள் பெருமாளின் திருமேனியிலிருந்தும் பெண் ஆழ்வார் பூதேவியில் அவதாரமாகமும் மாற்றப்பட்டு வைணவ சம்பிராதயம் உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு பத்துவுக்கு ஒரு தனியன் சேர்க்கப்பட்டு இப்பத்தைப் படித்தால் (பாராயணம் பண்ணினால்) இந்நன்மை கிடைக்குமென சொல்லப்பட்டது. இந்தப்பன்னிருவரும் தாம் பின்னாளில் கடவுளின் அவதார்ங்களாக ஆக்கப்படுவோம் என கிச்சித்தும் நினைத்துப்பார்த்திருக்க மாட்டார்கள்.

,ஒரு மதத்தை அல்லது சம்பிர்தாயத்தை உருவாக்க ஆழ்வார்கள் பாடலகள் என்ற தெள்ளுதமிழ்ப் பாடலகளை - தமிழ் இலக்கியத்தின் மாணிக்கப்பரல்களை - பொதுச் சொத்தை தமதாக்கிக்கொண்டு ஒரு மதம் உருவாக்கப்பட்டது. ஏழு கோடி தமிழரின் சொத்தை ஒரு கோடி (கிட்டத்தட்ட) அபகரித்துக்கொண்டுவிட்டது. உண்மையா? பொய்யா?

ஆண்டாள் தேவதாசியா? இல்லையா? என்பதற்கு நான் பத்ரி சேஷாத்ரியின் முகநூலுல் பேரா எம் ஏ வேங்கட கிருஸ்ணனுக்குக் கொடுத்த பதிலை வாசிக்கவும். அவர் தந்தி தொலைக்காட்சி விவாதத்தில் குருபரம்பரா பிரபாவமே ஆழ்வார்களின் சரித்திர சான்று என்கிறார். ஆனால் அது வெறும் ஹேகியோக்ராஃபி என்று விலக்கிவைக்கிறார்கள் வரலாறு கல்வியில்.

ஓர் எழுத்தாளரை மட்டும் வாசித்துக்கொண்டு அவர் சொன்னதை மட்டுமே உணமை என்றிருந்தால், மற்றவர் சொல்வதெல்லாம் பொய்யென்று உதறித்தள்ள வைக்கும். அதோடு விடாமல், அவர்களை வெறுக்கவும் வைக்கும். கற்றவன் செய்வது காய்தல் உவத்தல் இல்லாமல் அனைவரையும் படித்து தானே ஒரு முடிவுக்கு வருவதே.

silanerangalil sila karuththukkal சொன்னது…

மீண்டும் ஆண்டாள் பார்ட் இ எழுத தேவை இல்லை என்பதால் திரு வருண் மற்றும் விநாயகம் அவர்களுக்கான சுருக்கமான பதில் இங்கே தந்து விடுகிறேன் ..
1) நான் அனைத்து கருத்துக்களையும் வெளியிடுவேன் தனிப்பட்ட தாக்குதல் தவிர ..
2)ஒருவர் வரலாற்று ஆசிரியர் என்பதற்கு என்ன தனி தகுதிகள் என்பது புரியவில்லை
3)நமது சிந்தனைக்கு ஏற்புடைத்தாக இருந்தால் அதுவே உவப்பானது (அப்படித்தானே நாம் அனைவரும் )
4)நமது வாழ்க்கை கலை கலாச்சாரம் வரலாறு அனைத்தும் நாம் தொகுத்து கொள்கிறோம்
5) 30 வயதுகளில் கம்யூனிசம் மட்டுமே தீர்வு என்றிருந்தேன்
6)50 வயது கடந்த நிலையில் எங்கோ தவறு இருக்கிறதை உணர்கிறேன்
7)உங்களுக்கு தெலுங்கு புரட்சி பாடகர் GADDAR தெரியுமா? அவருக்கு தெரியாத விஷயமா? தற்போது அவர் நிலை தெரியுமா?
8) ஜெயமோகனை மத வெறியன் பரிசுக்கு ஆசை படுபவன் என்று நீங்கள் நினைத்தால் ஒரே வரிதான் என் பதில் SORRY
9)நம்மை போன்றே பிறர் சிந்திக்கவேண்டும் இல்லை என்றால் குதற வேண்டும் என்பது பச்சை பாசிசம் இல்லையா
10)ஜெயமோகனின் பின் தொடரும் நிழல்கள் குரல் படித்திருக்கீர்களா என் வாழ்க்கையால் நான் விடை தேட முடியாத கேள்விகளுக்கு விடை சொன்ன பெரும் படைப்பு இதுவல்லவா
11)ஆங்கிலத்திலே ஆயிரம் வந்திருக்கலாம் அனால் தமிழில் ஜெயமோகனின் இந்த படைப்பை ஒரே சேர அழுகை சிரிப்பு மன எழுச்சி என்று மாறி மாறி எனக்கு வந்ததது
12) திரு விநாயகம் அவர்களுக்கு நீங்கள் திரு பத்ரி சேஷாத்திரிக்கு கொடுத்த பதிலையும் VENKATAKRISHNAN அவர்களுக்கு தந்த பதிலையும் பார்க்க வில்லை உடனே எனக்கு சுட்டி அனுப்பவும் படித்துவிட்டு சொல்கிறேன்
13)நமது சமூகம் வாழ்க்கை அனைத்திற்கும் அனைவரும் காரணம் தானே அதை விடுத்தது பார்ப்பனர்களை மட்டும் குறை சொல்வதும் IN OTHER WORDS - IN REVERSE ORDER மனு வாதம் தான் என்பது என் எண்ணம்
14)ஆண்டாளை பொறுத்த வரை அவள் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்தவள் அங்கே பெரும் பேரரசுகள் இருந்ததில்லை ஆகவே தேவதாசி என்கிற 11 நூற்றாண்டு விஷயம் தவறு என்பது என் எண்ணம் ஜெயமோகன் அப்படி சொன்னாரா என்பதை அவரிடம் தான் கேட்கவேண்டும் ..(ஆக இந்த ஒற்றை அம்சத்தில் தான் நான் மேல பேசியிருக்கிறேன்.. நீலகண்ட சாஸ்திரி, சுப்ரமணியம் போன்றோர் சொன்ன வரலாறு படிக்கவில்லை சுட்டி இருந்தால் தரவும்)
15) மற்றவர்கள் பொய் என வாதிட விரும்பவில்லை..அப்படி பேசுவது தவறு என்று உணர்ந்தவன் நான் .. உங்களாலோ அல்லது என் முயற்சியில் தேவதாசி முறை பற்றி முழுதும் படித்தவுடன் மீண்டும் எழுதுகிறேன் நன்றி

PV சொன்னது…

பத்ரி சேஷாத்ரியின் முக நூலுக்கு அவர் பெயரை ஆங்கிலத்தில் எழுதினால் வரும். அங்கே பேராசிரியர் எம் ஏ வேங்கட கிருஷ்ணனின் கீதாச்சாரியன் கட்டுரையை எடுத்த்ப்போட்டிருந்தார். அங்கு நான் எழதியதைப் படிக்கவும். உங்க்ள் எண்ணம் 14தான் நான் அங்கே எழுதியது.

வரலாறு எனபது ஒரு பாடப்பொருள்; இயற்பியல், வேதியியல், தத்துவம், பூகோளம் பொறியியல் என்பவன போல வரலாறும் ஒரு பள்ளி, கல்லூரிப் பாடம். ஆராய்ச்சிக்குமுரிய பாடம். இயற்பியலத் தெரிய சாரு நிவேதாவைப்படிப்போமா? வேதியலைத்தெரிய ஜயமோஹனைப் படிப்போமா? பூகோளத்தைத் தெரிய ஜயகாந்தனைப்படிப்போமா? தத்துவப்பாடத்தைப் படித்து சிவில் சர்வீஸ் எழுத எஸ் இராமகிருஸ்ணனைப் படிப்போமா? மாட்டோம். அதததற்கு பேராசிரியர்களும் கல்வியாளர்களும் நூலகள் எழுதியிருக்கிறார்கள். அவறறைப்படித்துத்தான் அப்பாடத்தில் நாம் அறிவு பெருவோம். அதைப்போலவே வரலாறத்தெரிய வரலாற்றாயவாளர்கள்; ஆசிரியர்கள் எழுதியவைத்தான் படிப்பார்கள்.

எனவே //ஒருவர் வரலாற்று ஆசிரியர் என்பதற்கு என்ன தனி தகுதிகள் என்பது புரியவில்லை
3)நமது சிந்தனைக்கு ஏற்புடைத்தாக இருந்தால் அதுவே உவப்பானது (அப்படித்தானே நாம் அனைவரும் )// என்பது எப்படி சரியாகும் என்று எனக்கு வியப்பு. சரியே ஆகாது. கல்லூரி ஆசிரியர் ஆவதற்கு என்ன தகுதியோ அத்தகுதி, அதற்கு மேலும் வேண்டும் வரலாற்றாசிரியருக்கு. ஜயமோகனுக்கு இருக்கா? எந்த உலக் வரலாற்று மேடைகளில் அவர் தன் கண்டுபிடிப்புக்களை வாசித்து உலகம் ஏற்றுக்கொண்டதா? அவர் எழுதியது உவப்பாக இருப்பதனால் அவர் எழுதிய வரலாறு ஏறகப்பட்ட்டு விடும் எனபது எப்படி ?

அனைத்துக்குக் காரணம் பார்ப்பனர்கள் என்று சொல்லவில்லை. தமிழ்ப்புலவர்கள் 12 பேரை எடுத்து ஒரு மதத்தை உருவாக்கியது யார்? இராமானுஜர்தானே? 12 பேர்களை பெருமாளின் அவதாரங்கள் என்று சொன்னது யார்? அவர்கள் வாழ்க்கை வரலாற்றை எழுதியது யார்? ஓர் புகழ்பெற்ற வைணவ ஆச்சாரியார்தானே? ஆழ்வார்கள் காலம் 9ம் நூறறாண்டில் முடிய, 500 ஆண்டுகளுக்குப்பின்னரே அவர்கள் வரலாறு என்று சொல்லி ஒரு நூல் எழுதப்படுகிறது? எச்சான்றுகளை வைத்து எழுதப்படுகிறது?

ஆக, செய்தது வைணவ ஆச்சாரியர்கள். அவர்கள் எடுத்துக்கொண்டது பன்னிரு தமிழ்ப்புலவர்கள். புறம்போக்கு நிலத்தில் குடிசை போட்டால் சொந்தமாகி விடுமா? ஆனால் இன்று இந்த பன்னிருவரும் எங்களுத்தான் சொந்தம்? வேறெவரும் பேசக்கூடாது என்பது எப்படி?

மற்றவர்கள் பேசலாமென்று மாலன் சொல்ல, பேராசிரியர் எம் ஏ வேங்கட கிருஸ்ணன் ' பேசலாம். ஆனால் அவதூறு செய்யக்கூடாது!'' (தந்தி தொலைக்காட்சி விவாதத்தில்). அவதூறென்றால் என்ன? நீங்களாகவே தமிழ்ப்புலவர்களைத் தெய்வங்களாக்க்கிக்கொண்டால் மற்ற தமிழர்கள் தேமே என்றுவிட்டுவிடவேண்டுமா? கம்பர் அப்படி நீங்கள் எடுத்துக்கொள்ளவில்லையென்பதால், அவரைப்பற்றி பலபல எழுதுகிறார்கள். எவருமே அவதூறு என்று தடுக்கவில்லை. அவதூறு எனற பதம் எழுப்பப்படுவது உங்க்ள் வ்சதிக்காக?

நம்பிக்கை என்றிருக்கட்டும். அந்த நம்பிக்கை உங்கள் ஆச்சாரியர்கள் எழுதியவற்றை வைத்துப் பின்னுங்கள். மற்றவர்கள் விலகிக்கொள்வது சரி. பொதுமக்களில் 12 பேரை எடுத்து நீங்களாகவே அவர்கள் சென்ற பின் 500 ஆண்டுகளுக்குப் பின் உங்களுக்கு பிடித்த வரலாற்றை எழுதிக்கொள்ள இன்றிருப்பவர் அதை வேறுமாதிரி சொல்ல, உங்களுக்கு இருக்கும் கறபனை உரிமை அவருக்கு இருக்ககூடாதென்பது என்ன் நீதி?

silanerangalil sila karuththukkal சொன்னது…

திரு விநாயகம் உங்கள் கருத்தை பத்ரி சேஷாத்திரி முக நூலில் அவசியம் படிக்கிறேன்..சற்று அவகாசம் தருக .... நிற்க... உங்கள் கூற்றை என்னால் சிறிதும் ஏற்க இயலவில்லை ...கலைஞர் ஒரு முறை கேட்டதை போல் ராமன் எந்த இன்ஜினியரிங் கல்லூரியில் படித்தான் என்று கேட்பதை போல ஜெயமோகன் என்ன வரலாற்று ஆசிரியரா என்கிறீர்கள் ...நான் பெரும்பாலும் அனைவரையும் சமூக அறிவியல் கண்ணோட்டத்தில் படித்தான் அனைத்தையும் பார்க்க பழகி இருக்கிறேன் .. சரியோ தவறோ அதுதான் என் அளவுகோல்... வரலாற்று ஆசிரியர் என்ன கூறுகிறார் இது என்ன பள்ளி இறுதியாண்டு தேர்வா ....? நீங்கள் சுட்டும் மாலன் வேங்கட கிருஷ்ணன் தந்தி விவாதம் பார்த்தேன் திரு வேங்கட கிருஷ்ணன் பெரும் பண்டிதர் என்றாலும் அவர் கூறுவதை முழுமையாக ஏற்கமுடியவில்லை ..என்னை பொறுத்தவரை ஆண்டாள் பிரச்சனை தேவை இல்லையே என்பது மட்டும்தான் ....காரணம் தற்போதைய அரசியல் சூழல்... அனைத்தும் நம் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை தற்போது நடக்கும் நிகழ்வுகள் தெரிவிக்கின்றன ...இங்கே கலை கலாச்சாரம் வரலாறு அனைத்தும் அரசியலே என்பது எனது துணிபு.... வாழ்க... நன்றி ..

silanerangalil sila karuththukkal சொன்னது…

///பெரும்பாலும் அனைவரையும் சமூக அறிவியல் கண்ணோட்டத்தில் படித்தான் ///
''பெரும்பாலும் சமூக அறிவியல் கண்ணோட்டத்தில் படித்தான்....'' என்று வாசிக்கவும்

PV சொன்னது…

நான் செய்வது வாதம். என் வாத முடிவு நிலை ''எழுத்தாளர்கள் இலக்கியவாதிகள் மட்டுமே''. அவர் ஒரு துறையில் பெரிய விற்பன்னராக இருந்தால் அத்துறையைப்பற்றி எழுதுபவை இங்கடங்கா. அத்துறையிலிருந்து விலகி அவர் எழுதுவதை மட்டுமே நாம் எடுக்கிறோம்) அவர் எழுதும் வரலாற்றுக் கருத்துக்கள் வரலாற்றறிஞர்களால் மதிக்கப்படவேண்டும்; தங்களுல் ஒருவராக ஏற்கப்படவேண்டும். மாறாக அவர் இரசிகர்கள் அவரை ஏற்பது, ஒரு சினிமா நடிகனை அவன் விசிறிகள் சகல கலா வல்லவனாக ஏற்பது போல. நான் இப்படி பொதுவாகப் பேசுகிறேன். நீங்கள் தன்னிச்சையாக ஜயமோஹனைப்பார்த்து அவர் ஒரு வரலாற்றறிஞர் என்று ஏற்று அவர் 7ம் நூற்றாண்டு பற்றிச் சொவதெலாம் வரலாற்றுண்மை என்று நம்புகிறீர்கள். சாண்டியல் சோழ காலத்தை வைத்து நாவல்கள் புனைந்த எழுத்தாளர். அவரின் கடல்புறாவைப் படித்து இன்புறலாமே தவிர அதை சரித்திர சான்றாக எவருமே கொள்ள மாட்டார்கள். எனவே நீங்கள் விசிறி நிலை; நான் சுதந்தரப் பார்வையாளன். உங்களிடம் பேசுவதில் பொருளே இல்லை.

பலர் என் கருத்துக்களை தங்கள் பதிவில் வராதபடி பார்த்துக்கொள்வார்கள்; அல்லது வசைபாடுவார்கள். நீங்கள் அதைச்செய்யவில்லை. நன்றிகள் பல.

என் பதிவில் உங்களிடம் செய்த வாதத்தை விரிவுபடுத்தி எழுதுகிறேன். விரும்பினால் பார்க்கவும்.

Good bye !


websites: https://throughalookingglassalaymanreflects.wordpress.com (English)
https://freeflowofthoughts.blogspot.in (Tamil)

silanerangalil sila karuththukkal சொன்னது…

//'எழுத்தாளர்கள் இலக்கியவாதிகள்//
அய்யா அடிப்படையில் உங்கள் புரிதல் தவறு என்று பணிவாக தெரிவித்துக்கொள்கிறேன்... காரணம் இலக்கியம் என்றால் ஏதோ ஜீபூம்பா கதை என்று நினைத்துகொள்ளதீர்... உதாரணமாக டால்ஸ்டாய் படித்திருக்கிறீர்களா ..அவை என்ன வெறும் கதை என்ற பார்க்கமுடியும்.. லெனின் கூறினார் டால்ஸ்டாய் படைப்புகள் ரஷ்ய புரட்சிக்கு வித்திட்டவை என்றார்.. அப்படி என்றால் அதன் பொருள் புரியவில்லையா.. இதுற்கு மேல் விளக்கம் தேவையா ...நமது சக வாழ்வின் ஒரு பிரதிபலிப்பல்லவா


//ஒரு சினிமா நடிகனை அவன் விசிறிகள்//
நீங்கள் ராஜேஷ்குமார் கதைகளை பேசுகிறீர்கள் போலும்

//அதை சரித்திர சான்றாக//
நிச்சயமாக அவற்றை சில சான்றாக எடுக்கலாம் அந்ததந்த காலகட்டத்தில் எழுத்துவபர்கள் தன் காலத்தை பிரதிபலிப்பவர்கள்தான் அவ்வாறு இல்லை என்றால் அவைகள் படைப்பல்ல

//விரும்பினால் பார்க்கவும்.//
நிச்சயமாக பார்க்கிறேன் நான் ஒரு சுதந்திர ஜனநாயக விரும்பி

//உங்களிடம் பேசுவதில் பொருளே இல்லை. //

என் நிலையை விளக்கி சொல்ல முடியவில்லை.. என்பதில் எனக்கு வருத்தமே விரைவில் நீங்கள் புரியும்படி எழுதுவேன் ...
நன்றி