வெள்ளி, 12 ஜனவரி, 2018

ஆண்டாள் அவள் தமிழை ஆண்டாள் ...

இந்து மதம் என்பதே ஒரு தொகுப்பு  என்பதை ஏற்காமல்    ஒற்றை குடையின் கீழ் அனைத்தும் இந்து  என்பதை,  குறிப்பாக H ராஜா உள்ளிட்ட மதவாதிகளும் வீர நாத்திகம் பேசுபவர்களும்   பேசுகிறார்கள் ..இது ஆச்சர்யகரமான ஒற்றுமை ...' இரு தரப்பினரும்  ஒரு வேளை  புரிந்து கொண்டாலும்  , அதை பற்றி கவலை படவில்லை .. வீர நாத்திகம் பேசும் சில குழுக்கள் ''பார்த்தீர்களா சோழ மன்னர் ஆட்சியில் சாதிய  கொடுமைகளை..'' என்று கூக்குரலிடுகிறார்கள்..  நேர் எதிர் ராஜா முகாமோ அனைத்தும் இந்து என்கிறது .. வரலாற்று பாதையை மறுக்கும் பார்வையாகவே பார்க்கிறேன் ...

இந்து மதம்  என்பதே தமிழ்நாட்டில் ஏழு வகையாக இருந்ததாக வரலாறு சொல்கிறது

1.சைவம்..
2.வைணவம்..
3.கெளமாரம்..
4.காணாபத்தியம்..
5.செளரம்..
6.சாக்தம்..
7.ஸ்மார்த்தம்..

சைவத்தின் முழுமுதற் தெய்வமான சிவன் கோவில்களில் 283 இல் 276 தமிழ்நாட்டில் தான் உள்ளன.. வைணவத்தின் 108 வைணவ திவ்ய தேசத்தலங்களில் 96 தமிழ்நாட்டில் தான் உள்ளன.. கெளமாரத்தின் 21 முருகன் கோவில்களில் 18 கோவில்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளன..

ஆகவே தமிழும் பக்தியும் இங்கே ஒன்றுடன் ஒன்று பிணைத்து வந்திருக்கிறது   .   ஆண்டாள் பெரியாழ்வார் போன்ற 12 ஆழ்வார்கள் முதல் 63 நாயன்மார்கள் வரை தமிழ் பக்தி இலக்கியத்தில் ஊறித்திளைத்தவர்கள் .. அதனால் தமிழுக்கு அவர்கள் அளித்த கொடை மிக அதிகம் ..பக்தி  இலக்கியத்தை  தமிழிடமிருந்து பிரிப்பது , உயிரை பிரிந்த உடல் போலவே தோன்றுகிறது

வரலாற்றை நாம் பார்க்கின் பேரரசுகள் தோன்றியவுடன் அவைகள் மாறுவதை நாம் காணலாம் 

தேவதாசி முறை என்பதே பேரரசுகள் உருவான பிறகு     வந்த ஒன்று .. அதற்கு முன்பு சாத்தியமில்லை  .. தமிழகத்தின் ஆகச்சிறப்பு வாய்ந்த பேரரசு என்பதே சோழ பேரரசுதான் அதுவே ஆண்டாளுக்கு பிந்தியது அப்படி இருக்கும் சூழலில்  அதற்கு முன்பே  தேவதாசி என்கிற பதம் எப்படி சரியாகும்  .. அதாவது அக்பர்காலத்தில் ரயில் வண்டி ஓடியது என்று எழுதுவதற்கு சமம் இது 

இந்த குழப்பத்திற்காகவே  ஆண்டாள் ஒரு கற்பனை பாத்திரப்படைப்பு என்கிறார் ராஜாஜி ..   பிஜேபி குறிப்பாக H ராஜா தலைமையில் இதை ஒரு அரசியல் ஆதாயம் அடைய முயலுமா என்று பார்க்கிறார்கள்  . வைரமுத்துவோ தனக்கு ஞானபீடம் கைநழுவி போகுமோ என்கிற அய்யப்பாடுடன் இருப்பதாக இணையத்தில் சந்தி சிரிக்கிறது ..

அய்யா.. உங்கள் சண்டையில் எங்கள் ஆண்டாளை, எங்கள்தமிழை, தமிழை ஆண்டவளை விட்டுவிடுங்கள் என்று இறைஞ்சுவதை தவிர வேறு என்ன சொல்ல இருக்கிறது 

5 கருத்துகள் :

வேகநரி சொன்னது…

//H ராஜா உள்ளிட்ட மதவாதிகளும் வீர நாத்திகம் பேசுபவர்களும் பேசுகிறார்கள்//
வீர நாத்திகம் என்று ஒன்றும் உள்ளதா? வீர தமிழிச்சி போன்று!
//பார்த்தீர்களா சோழ மன்னர் ஆட்சியில் சாதிய கொடுமைகளை..'' என்று கூக்குரலிடுகிறார்கள்//
ஜாதி பற்று, வெறி கொண்டவர்களே சோழ மன்னர்கள் ஆதரவாளர்களாக இருப்பதையே பார்த்திருக்கிறேன். வருத்தமே.
வைரமுத்துவின் கருத்து சுதந்திரத்தின் மீதான பயமுறுத்தல்கள் அனுமதிக முடியாதவை.

PV சொன்னது…

//வீர நாத்திகம் பேசும் சில குழுக்கள் ''பார்த்தீர்களா சோழ மன்னர் ஆட்சியில் சாதிய கொடுமைகளை..'' என்று கூக்குரலிடுகிறார்கள்..//

சோழர்களின் ஆட்சிக்காலம் அரசியல் வாதத்தில் வராது. அது கல்வி. வரலாறு ஆய்வு. சோழர்களின் ஆட்சியில் பிராமணர்களின் ஆதிக்கமும் சனாதன மதத்தின் இறுக்கமும் நிறைந்தது என்பதை ''வீர நாத்திகம்'' பேசுபவர்கள் காட்டுவதே ஏற்கனவே பல வரலாற்றறிஞரக்ள் சொல்வதிலிருந்தே. இவர்களாகச் சொல்லவில்லை. இராஜா போன்றவர்கள் அந்த அறிஞர்களைத்தான் எதிர்க்க வேண்டும். அரசியல்வாதி அறிஞரை எதிர்ப்பது நகைச்சுவை.

நீலகண்ட சாஸ்திரி வீர நாத்திகரா? இல்லை. அவர் புகழ்படைத்த வரலாற்றுப்பேராசிரியர். அவர் எழுதிய சோழர்களின் வரலாறு படிக்கவும். அவர் சொல்லியதுதான் இது.

PV சொன்னது…

வரலாற்றை நாம் பார்க்கின் பேரரசுகள் தோன்றியவுடன் அவைகள் மாறுவதை நாம் காணலாம்

தேவதாசி முறை என்பதே பேரரசுகள் உருவான பிறகு வந்த ஒன்று .. அதற்கு முன்பு சாத்தியமில்லை //

Please show some proof for your statement.

PV சொன்னது…

//அய்யா.. உங்கள் சண்டையில் எங்கள் ஆண்டாளை, எங்கள்தமிழை, தமிழை ஆண்டவளை விட்டுவிடுங்கள் என்று இறைஞ்சுவதை தவிர வேறு என்ன சொல்ல இருக்கிறது //

தமிழை ஆண்டவள் என்றால் மாபெரும் தமிழ்ப்புலவர் என்று பொருள். ஆக, எங்கள் தமிழ், எங்கள் ஆண்டாள் என்று உங்களைப்போன்றவர்களின் ஓர் கூட்டமட்டுமே சொந்தம் கொண்டாடலாமா? அத்தமிழப்பருகலாமா? 8 கோடி தமிழ்கூறும் நல்லுலகத்துக்கே சொந்தமா? இல்லை வைணவர்கள் என்று சொல்லும் ஒரு கூட்டத்திற்கு மட்டுமா?

வாதம் அடிப்படையில் தவறு. ஆண்டாள் ஒரு வரலாறு. அவர் வாழுங்காலத்தில் தன்னை கடவுளாக்குவார்கள்; தன் பாக்களுக்குத் தெய்வநிலை கொடுத்து இராமனுஜர் ஏத்துவார்; பின்னர் வைணவ சம்பிரதாயத்தில் வைக்கப்படுவோம் என்று நினைத்திருக்க மாட்டார். அப்படி நினைத்திருந்தால் அவரின் பக்தி மாசுபட்டதாகும். அவர் ஆழ்வார் என்ற நிலைக்கே தகுதியில்லாதவராயிருப்பார்.

இவர் நிலையே மற்றெல்லா ஆழ்வார்களுக்கும். பல நூற்றாண்டுகளுக்குப் பின்னரே அவர்கள அனைவரும் கடவுளர்களாக்கப்பட்டார்கள். ஆக, ஒரு பொதுச்சொத்தை, ஓர் தனிக்கூட்டம் தனதாக்கிக்கொண்டது. புறம்போக்கு நிலத்தில் குடிசை போட்டுவிட்டு பின்னர் நீதிமன்றம் சென்று பட்டா வாங்குவதைப் போல.

போகட்டும். அப்படியே எடுத்துக்கொள்ளட்டும். ஆனால், நீங்களே வாய்தவறிச்சொன்னதைப்போல, ஆண்டாள் மாபெரும் தமிழ்ப்புலவர். அவரின் பாக்களை வாசிக்க, ஆராய, அவரின் வரலாற்றை அப்பாக்களின் மூலமாக தெரிந்து அவரவருக்குத் தெரிந்த மாதிரி சொல்ல, ஏன் தடை சொல்கிறீர்கள்?

silanerangalil sila karuththukkal சொன்னது…

நண்பர் விநாயகம் அவர்களுக்கு நான் தனியாக ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன் பெயர் 'ஆண்டாள் PART II தொடர்ச்சி' அதை படிக்குமாறு வேண்டுகிறேன்