சனி, 6 ஜனவரி, 2018

போக்குவரத்து தொழிலாளர்களின் நிலை ...

பேருந்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் பற்றி நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் வேலை நிறுத்தத்தை தடை செய்துள்ளது..  போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் ESSENTIAL SERVICEல்  வருவதால் அவர்களுக்கு அப்படி செய்ய சட்ட அனுமதி  கிடையாது என்கிறது நீதிமன்றம் ..

நேற்றைய புதிய தலைமுறை விவாதத்தில் பங்கேற்ற அதிமுக பெண்மணி அட்டவணை 5 ன் படி அவர்கள் இவ்வாறு செய்வதே சட்ட விரோதம் என்றார் ...

எல்லாம் சரிதான்... ஆனால் சில அடிப்படையாக சந்தேகங்கள் உள்ளது அவற்றுக்கு பதில் தேவை ....

தொழிலாளர்கள் , அதுவும் ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் PF கிராஜுவிட்டி தொகை ரூ 5000 கோடியை பல ஆண்டுகளாக அரசு தரவில்லை அதை வேறு திட்டத்துக்கு திருப்பி விட்டார்களாம்...  இது  எந்தவகை அட்டவணையில் வரும் என்பது புரியவில்லை .....மேலும் நீதிமன்றம் அவற்றை மாதம் தவணை தொகையாக கொடுங்கள் என்கிறார்களாம் ...இவற்றை கேட்டபோது தலையே சுற்றுகிறது  (விவாதத்தில்  மூத்த வழக்கறிஞர் தமிழ்மணி இவ்வாறு ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் பணத்தை பல காலமாய் பிடித்து வைத்திருப்பது கிரிமினல் குற்றம் என்றார் )

ஒரே அரசின் கீழ்  வேலை செய்யும் கார்பொரேஷன் ட்ரைவர்களுக்கு வேறு ஊதியம் போக்குவரத்து ஊழியர்களுக்கு வேறு ஊதியம் என்பதும் புரியவில்லை   ..     கார்பொரேஷன் ஊழியர்கள்   என்ன ஒரிசா அரசிடம் வேலை பார்ப்பவர்களா  ...?

M.G.R அரசு விழாவுக்காக ரூ700 கோடி, எம் எல் ஏ சம்பள உயர்வு பென்ஷன் உயர்வு என பல கோடிகளை காணும் போது அரசு உழைக்கும் தொழிலாளர்களை கண்டு கொள்ளாமல் இருப்பதை எப்படி ஏற்றமுடியும் என்பதே புரியவில்லை ..

கருத்துகள் இல்லை :