வியாழன், 25 ஜனவரி, 2018

எது நடந்ததோ....

 ஞாநி மறைவதற்கு முன் YOUTUBEல் ஒரு பதிவேற்றம் செய்திருந்தார் .. அதை பார்க்கும்போது பளிச்சென்று ஒரு விஷயம் சொல்லிருந்தார்.. அது மிக மிக முக்கியமானது என்றே நினைக்கின்றேன்..    

தமிழகத்தில் காலூன்ற  ஹிந்து ஓட்டுக்களை POLARIZE  செய்வது மிக முக்கியம் என்று பாஜக கருதுகிறது ....  அதற்கு  ஆண்டாள் பிரச்சனை மாட்டியது ...  அதை சரியாக பயன் படுத்தினார்கள்  ...

தற்போது ஜெயேந்திரர் பிரச்சனை வேறு...  அதையும் அவர்கள் பயன் படுத்தலாம் என்றே நடக்கும் நிகழ்வுகள் தோன்றுகிறது ...  பொதுவாக சங்கர மடம் மற்றும் இசுலாமிய அடிப்படைவாதிகள் கூட   தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னிரிமை தருவதில்லை,  மாறாக தங்கள் மதமே அவர்களுக்கு பிரதானம் என்று கடந்து போவதே தற்போதைய சூழலில் சரி என்று படுகிறது..

   இந்து மதத்திற்கு எதிரான விஷயம் நடக்கிறது என்று சராசரி மனிதனுக்குள் தோன்றினாலே போதும், ''அவர்கள்'' நினைக்கும் அஜெண்டா நிறைவேறிவிடும் ..இது புரிகின்றவர்களுக்கு புரியும் .. .. எது    நடக்கவிருக்கிறதோ அது நன்றாக நடக்காமல் தடுக்கும்  ..

2 கருத்துகள் :

வேகநரி சொன்னது…

//பொதுவாக சங்கர மடம் மற்றும் இசுலாமிய அடிப்படைவாதிகள் கூட தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னிரிமை தருவதில்லை//
இந்துமத மதவாதிகள் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதல் உரிமை தருவதில்லை என்றால், இஸ்லாமிய மதவாதிகள் தமிழ்த்தாய் வாழ்த்துக்கும், தேசிய கீதத்திற்கும் கூட மதிப்பு தருவதில்லை. தற்போது கண்டணங்கள் தெரிவிக்கும் பலர் அதற்கு ஆதரவு தெரிவித்தார்கள், அல்லது பேசாமல் இருந்தனர்.
தமிழில் கல்வி கற்கவும், தமிழில் பேச தயங்கும் தமிழக நாட்டிற்கு தமிழ்த்தாய் வாழ்த்து பாடியாவது தமிழின் முக்கியத்துவம் தமிழன் என்று காட்ட வேண்டிய தேவையுள்ளது அரசியலுக்காக.

silanerangalil sila karuththukkal சொன்னது…

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வேகநரி