சனி, 15 ஜூன், 2013

மர்ஃபி விதிகள்

நீங்கள் மர்ஃபி விதிகள் பற்றி கேள்விப் பட்டிருக்கிறீர்களா..
கிட்டத்தட்ட 1000 மர்ஃபி விதிகள் இருக்கின்றன...
நம் வாழ்க்கையில் அந்த விதிகளை சற்று ஒப்பிட்டுப் பார்த்த போது
“அட.. இந்த மனிதர் உண்மையில் கில்லாடிதான்“ என்று தோன்றுகிறது
if something goes wrong, it will என்கிற வகையில் ஏறத்தாழ 1000 விதிகளை சொல்லிக் கொண்டு செல்கிறார். நாமே பார்க்க முடியும் நாம் ஒரு பஸ்ஸை பிடிக்கச் செல்லும் போது, அது சற்று முன்பாகத்தான் சென்றிருக்கும்.. ஒருவேளை சரியான நேரத்துக்குச் சென்றால், அது லேட்டாக வரும். அல்லது எதிர் திசையில் சென்றிருக்கும்..இப்படி.. கூகிளில் தேடுங்கள் மர்ஃபி விதிகள் என்று.. 1000 விதிகள் அனைத்தும்  கிடைக்கும்..  படிப்பதற்கு சோகமாக இருந்தாலும், சிரிப்பை வரவழைக்கிறது.. இதைப் பற்றி என் மகளிடம் சொன்னேன்...”அப்போ அந்த ஆளு எத்தனை நொந்து போய் எழுதியிருப்பார்” என்றாள்...
யோசித்துப் பார்த்தால் உண்மைதான் என்று நினைத்துக் கொண்டேன்...

கருத்துகள் இல்லை :