புதன், 15 ஜனவரி, 2014

எது உண்மை...?

இரண்டு மூன்று வாரங்களாக TIMES NOW போன்ற ஆங்கில செய்தி சேனல்கள்
பார்க்கின்றவர்களுக்குத் தெரியும்...

கர்நாடக மாநிலத்திலும் உபியிலும் பல சட்ட மன்ற  உறுப்பினர்கள் study tour என்கிற போர்வையில் அம்ஸ்டர்டாம், ஆஸ்திரேலியா போன்ற பல வெளிநாட்டுக்கு உல்லாச சுற்றுலா செல்வதை படத்துடன் அம்பலப்படுத்தி கிழி கிழியென்று  கிழிக்கிறார்கள்.. அதிலும் குறிப்பாக TIMES NOW அர்னாப் கோஸ்வாமி பெரும் அரச்சீற்றத்துடன் கோபாவேசமாக பேசுவதைப்  பார்க்கும் போது, அந்தக் கோபத்தை, பார்ப்பவருக்கு   மடைமாற்றம் செய்து விடுகிறார்.. அர்னாப் கேட்பது ”உங்க மாநிலத்தில எத்தனை ஏழை எளியவர்கள் விலைவாசி உயர்வில் படாதுபாடு பட்டு வருகிறார்கள் கடன் தொல்லையில் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.. அப்படிபட்ட நேரத்தில் உங்களுக்கு இந்த ஜாலி டூர் தேவையா.. அதுவும் எங்க வரிப் பணத்துல” என்று கேட்க அதற்கு பதில் சொல்லும் பல MLAக்கள் விழி பிதுங்க கண்டபடி உளறுவதைப் பார்க்க நேரும் போது வெடித்துச் சிரிக்க வைத்தாலும் உள்ளுர கோபமும் வருகிறது..

அதைப் போல உபி ஆட்களான ராஜா பையா ஆசம்கான் ஆகியோரின் ஜாலி டூர் பற்றி  அர்னாப் கேள்விக்கணைகளால் அர்ச்சனை செய்ய செய்ய, கையைப் பிசைந்து கொள்ளும் அந்த SP பிரமுகர்  கௌரவ் பாட்டியா நேர்காணலை விட்டு மைக்கை தூக்கியெறிந்துவிட்டு நடையைக் கட்டினார்..  மேலும் உபி முதல்வர் அகிலேஷ்,  பாலிவுட் திரை நட்சத்திரங்கள் நடனமாடும் ஒரு நிகழ்ச்சியில கலந்து கொண்டிருப்பதை காட்சிகளுடன் காட்டி  முஸாராபாத்தில் கலவரத்தில் பாதிக்கப் பட்ட குழந்தைகள் பெண்கள் குளிரிலும் பட்டினியிலும் செத்துக் கொண்டிருக்க உங்கள் முதல்வருக்கு இப்படிப்பட்ட ஒரு ஆடம்பர நிகழ்ச்சி தேவையா என்றும் யார் இதற்கு பணம் கொடுத்தார்கள் என்றும் போட்டு வாங்கித் தள்ளினார்.. விளைவு 24 நேரம் உபியில் TIMES NOW சேனல் ’கட்’டாகிப் போனது.. அதற்கும் நேற்று 14.1.14 அர்னாப்,  கௌரவ் பாட்டியாவை ”வாங்கித்” தள்ளினார்.. அதற்கு கௌரவ் அரற்றினாரே பார்க்கலாம்.. பரிதாபமாக இருந்தது..

சரி.. இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது எது?.. அர்னாப் பாணியில் கேட்டால்
(1) தமிழகத்தில் அப்படிப்பட்ட அராஜகங்கள் நடப்பதே கிடையாது.. அமைதிப் பூங்கா மாநிலம்..
(2) அப்படி அராஜகங்கள் நடந்தாலும் அதை எடுத்துரைக்க எந்த டிவி சேனலும் கிடையாது..
(3) அப்படி டிவி சேனல்கள் இருந்தாலும் அதை நடத்தும் பெரும் புள்ளிகள் எதிர்க்க முடியாத சூழ்ல்
(4) நம் மக்கள் அப்படி அதிரடியான விஷயங்களை திரைப்படத்தில் மட்டும் பார்த்து ரசிக்கும் மனோநிலை கொண்டவர்கள் 

இதில் சரியான விடையை கண்டுபிடித்துச் சொல்வர்களுக்கு 12V பேட்டரி அளவிற்கான மின்சாரம் இலவசம்... (வேற என்னங்க கொடுக்க முடியும்...?)

5 கருத்துகள் :

Ramani S சொன்னது…

அந்த மாநிலத்தில் பரவாயில்லையே
கேள்வி கேட்டவர்கள் பத்திரமாக இருக்கிறார்களே
அதுக்கெல்லாம் கொடுத்து வைத்திருக்கணும்

Badri Nath சொன்னது…

ஹா ஹா ஹா உண்மைதான் ரமனி சார்.. வருகைக்கு நன்றி

பெயரில்லா சொன்னது…

The New Delhi based 24 hrs news channels are the most absurd in the world. Burkha, Arnab and Rahul don't behave like journalists rather behave like interrogators and judges. In fact, most of what we see in these news channels are paid news. Sometime back, we used to have tamil movie heroes who keep their face rigid and shouts "yeaaai" with aruval (sickle) in one hand. Arnab and Rahul belongs to this category. I guess the interviewers of Puthiya Thalaimurai News channels are much better than the B, A and R.

Badri Nath சொன்னது…

வருகைக்கு நன்றி அனானி... but you are specific.... உங்கள் கோபத்திற்கான காரணத்தை மேலும் விளக்கமாகச் சொல்லலாம்... otherwise it seems you are also one of the affected parties என்றாகிவிடும்...உங்களுக்குத் தனிப்பட்ட விரோதம் ஏதாவது உண்டா என்ற அச்சமும் எற்படுகிறது.. உங்கள் கருத்துக்களை நீங்கள் விவரமாக ஒரு ப்ளாக்கே எழுதலாம் என்பது என் விருப்பம்..புதிய தலைமுறை ஓக்கேதான்... ஆனால் .. சவுக்குத் தளத்தைப் படித்தேன்.. அதனால் சற்று குழப்பமடைந்திருக்கிறேன்.. புரியும் என்று நினைக்கிறேன்...

Badri Nath சொன்னது…

ஒரு திருத்தம் அனானி YOU ARE NOT REPEAT NOT SPECIFIC என்று திருத்தி வாசிக்கவும்.. சாரி