செவ்வாய், 21 ஜனவரி, 2014

பெரிதினும் பெரிது

கட்டுரை எழுதி ஒரு வாரம்கூட ஆகவில்லை.. அதற்குள் என் நண்பர் ஒருவர் வேறு ஏதாவது எழுதியிருக்கிங்களா அல்லது ஏதாவது பரபரப்பு செய்திகளுக்கு காத்திருக்கிறீர்களா என்று கேட்டார்..


”இந்த உலகத்தில் பரபரப்பு செய்திகளுக்கா பஞ்சம்... எத்தனையோ உள்ளது.. அத்தனையும் எழுதவே இயலாத காரியம்...” என்றேன்.

எதைச் சொல்வது.. 

ஹாரர் சினிமாவுக்கு சற்றும் குறையாத மக்கள் இயல்பு வாழ்க்கையை முடக்கிப் போட்டிருக்கும் தொட்டபெட்டா ‘கிலி‘ கில்லர் கிழட்டுப்புலியைப் பற்றி எழுதுவதா..?

ஒரு முதலமைச்சரே போலீசை எதிர்த்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு பெரும் சட்டச் சிக்கல் உருவாக்குவதைப் பற்றிச் சொல்வதா..?

புதிய கட்சி ஆரம்பித்து ஆட்சியைப் பிடித்து இரண்டே வாரங்களில் கட்சிக்கு எதிராக புகார்கூறும் ஆளுங்கட்சி எம்எல்ஏயை பற்றி எழுதுவதா...?

எத்தனை செய்திகள் வந்தாலும் சுனந்தாபுஷ்கர் பற்றிய செய்திகள் பெரும் சோகத்தை  உருவாக்கியதைப் பற்றிச் சொல்லலாம்..

செல்வந்த பிண்ணனியில் பிறந்து  பல நாடுகளில் பணிபுரிந்து அய்க்கிய நாட்டு சபையின் முன்னாள் தலைவர் பதவிக்கு நின்றவரும் அதன் பின்னர்  மத்திய அமைச்சரான ஒருவரை மணந்து இறுதியில் நிம்மதியிழந்து ஏதோ ஒரு ஓட்டல் அறையில் பிணமாகக் கண்டுடெடுக்கப் பட்டதைச் சொல்வதா...

ஆயிரம் ரூபாய் சம்பளக்காரனும் அரற்றுகிறான்.. ஆயிரம் கோடி வருமானம் உள்ளவனும் அரற்றுகிறான்..

இதையெல்லாம் பார்க்கும் போது ”மன நிறைவு”  கொண்ட வாழ்க்கைக்கு ஈடாக இந்த உலகத்தில் எதுவுமே  இல்லை என்பது மட்டுமே  நிசர்தனமாக உண்மை...

6 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இந்த உண்மையை உணராதவர்கள் பல பேர்கள் என்பதும் உண்மை...

Badri Nath சொன்னது…

ஆமாம் நண்பர் திண்டுக்கல் தனபாலன்.. வருகைக்கு நன்றி

புலவர் இராமாநுசம் சொன்னது…

மனம் தொட்ட உண்மையான பதிவு!

Chellappa Yagyaswamy சொன்னது…

உங்கள் ஆதங்கம் நியாயமானதே. மன/மண நிம்மதிக்குப் பின் தான் எல்லாம்.

Badri Nath சொன்னது…

வருகைக்கு நன்றி புலவர் அவர்களே...

Badri Nath சொன்னது…

திரு Chellappa Yagyaswamy வருகைக்கு நன்றி