சனி, 15 பிப்ரவரி, 2014

பின்-நவீனத்துவ ஜனநாயகம்

செய்தி 1
ஒரு தேசம் தன் மீது அன்னியர்கள் படையெடுத்து வருவதால் நாட்டைக் காப்பாற்ற  இளைஞர்களுக்கு அறைகூவல் விடுத்ததாம்.. அதைக் கேட்டு பல இளைஞர்கள்  நாட்டைக் காப்பாற்ற ராணுவத்தில சேர
முன் வந்தனராம்.. அப்படி முன் வந்த ஒரு இளைஞனை ஒரு வயதான மூதாட்டி சேரக்கூடாது என்று தடுத்தாளாம்.. ராணுவ வீரர் அந்த மூதாட்டியிடம் ”என்னம்மா இது.. உனக்கு தேசப் பற்று இல்லையா..? இப்படி ஒரு இளைஞனை தடுக்கிறாயா ” என்றாராம்.. அதற்கு அந்த மூதாட்டி சொன்னாளாம்”அய்யா  உமக்கு நாட்டைக் காப்பாற்ற ஆள் வேண்டும்.. ஆனால் வயதான என்னைக் காப்பாற்ற என் ஒரே மகனான இவன்தானே இருக்கிறான்.. இவனுக்கு ஏதாவது நடந்தால் நான் என்ன செய்வேன்...?” என்றாளாம் அந்த இளைஞனைக் காட்டி...

நாம் என்ன தீர்ப்பு சொல்வது.. தேசமும் சரி அதன் பார்வையில்.. அதே போல அந்த மூதாட்டியும் சரி அவள் பார்வையில் என்றுதானே...?

அந்த மூதாட்டியின் நிலைதான் நம்ம மெத்தப் படித்த கெஜ்ரிவால் நிலையும்... அவருக்கோ அரசியல் பண்ண வேண்டும்.. நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது.. அவரால் டெல்லியில் எதையும் கட்டுக்குள் வைத்திருக்க முடியவில்லை..(நம் தேசத்து ஜனநாயகம் ஒரு வகை chaotic தன்மை வாய்ந்ததும் ஒரு காரணம்) ஒரு புறம்  முகேஷ் போன்ற மலையுடன்  மோத வேண்டியுள்ளது... காங்கிரஸ் ஒரு பக்கம் இழுக்கிறது.. முதலில் சிஎம் என்கிற 
சிறையிலிருந்து வெளியேறினால்தான் அத்தனையும் முடியும் என்பதால் ஜன் லோக் பால் என்கிற அஸ்திரத்தை எடுத்து வெளியே வந்து விட்டார் எனலாம்.. (மேலும் பிரதான தேசிய கட்சிகள் ஜனலோக் பாலை நீர்த்து போகவே விரும்புவார்கள் என்பது நன்றான தெரிந்தும் அதை எடுத்திருக்கிறார்..)....
இது கெஜ்ரியின் நிலை.
அரசியல்சாசன பண்டிதர்கள் அறிவு ஜீவிகள் “போச்சு எல்லாம் போச்சு“ என்று கத்துகிறார்கள்.. எந்த ஒரு மசோதாவாக இருந்தாலும் மத்திய அரசு ஒப்புதலுக்குப் பின்னர்தான் தாக்கல் செய்ய வேண்டும்.. சாதாரண சட்ட அறிவு உள்ளவர்கள் அறிந்தது ஆனால் சிவில் சர்வீஸ் தேர்ச்சி பெற்ற மெத்தப் படித்த மேதாவிக்கு இது தெரியாதா என்று அரற்றுகிறார்கள்.. மேலும் கவர்னர் அப்படி மசோதா தாக்கல் செய்தால் அது சட்ட விரோதம் என்றும் அதை அனுமதிக்க முடியாது என்றும் கடிதமே தந்த பின்னரும் கெஜ்ரி அவ்வாறு செய்தது அடாத செயல் என்கிறார்கள்..

நாம் சொல்வோம்.. அவரும் சரி.. இவர்களும் சரி.....
===
செய்தி 2
காமிரா கவிஞன்.. வித்தியாசமான படைப்பைத் தந்த பாலு மகேந்திராவுக்கு அஞ்சலி.... அவர் படைப்புகளில் மூன்றாம் பிறை பற்றியே பலர் பேசுகிறார்கள்.. ஆனால் அதைவிட  பல மடங்கு அற்புதக் கலைப் படைப்பான வீடும் சந்தியா ராகமும் தான் என் நினைவில் எப்போதும் வந்து போகிறது.. பல குப்பைத்  தமிழ்ப்படங்களை உற்பத்தி செய்யும் கோலிவுட்டில் இப்படியும் படம் எடுக்கலாம் என்று வந்த படங்கள் அவை...  எந்தக் காலத்திலும் நீண்டு வாழும் சாகா வரம் பெற்ற படைப்புகள் அவை.. சொந்த வாழ்வில் எத்தனையோ தடுமாற்றங்களுடன் வாழ்ந்தவர்.. அந்த தடுமாற்றத்தின் ஊடாகவும் சிறப்பான படைப்பை தந்தவர்..

 அன்னாருக்கு அஞ்சலி..


===
செய்தி 3
கேப்டன் நேற்று (14.2.14)  பிரதமரை தன்னுடைய MLAக்கள் படையுடன் சந்தித்திருக்கிறார்.. அதையொட்டி இன்று 15.2.14ல் தமிழ் இந்துவில் ஒரு கார்ட்டூனை ஒரு வாசகர் வரைந்திருக்கிறார்.. அதாவது, இனிமேல் எந்தப் பிரச்சனை வந்தாலும் முதல்வரை சந்திக்க மாட்டோம்.. பிரதமரையே சந்திப்போம் என்கிற வாசகம் தாங்கி.... காலை சோம்பலை சட்டென்று விலக்கி குபுக்கென்று சிரிப்பை வரவழைத்த அட்டகாச கார்ட்ரூன்.. அதை உருவாக்கிய  அந்த வாசகர் வாழ்க.......

கருத்துகள் இல்லை :