திங்கள், 17 பிப்ரவரி, 2014

பெப்பர் ஸ்ப்ரே எம்பியின் சொத்து மதிப்பு....?

சமீபத்தில் நாடாளுமன்றத்தில் வாசனை குறைவாக இருந்த காரணத்தாலோ என்னவோ மாண்புமிகு எம்பி ஒருவர் அனைவர் முகத்திலும் பெப்பர் ஸ்ப்ரேயை இலவமாக அடித்திருக்கிறார் ..
அவரவர் தப்பித்தால் போதும் என்று மூக்கைப் பொத்திக் கொண்டு அலறியடித்துக் கொண்டு வெளியேறியதை தொலைக்காட்சியில் காட்டினார்கள்....அவர் பெயர் லகடபதி ராசகோபாலாம்... ஏதோ இம்சை அரசன் படத்தில் வரும் கதாபாத்திரத்தின் பெயரைப் போல இருக்கிறது... 

அதைவிட இந்த ஆளின் சொத்து மதிப்பை சில நாளேடுகள் வெளியிட்டிருக்கின்றன... இவர் நடத்தும் நிறுவனங்களின் மதிப்பு ரூ 13,887 கோடி  என்றும் அது குட்டி போட்டது ரூ 25000 கோடி  என்றும்  வளர்ந்து தற்போது வருவாய் 51000 கோடி என்றும் நமக்கு மயக்கம் வரும் வரை வெளியிடுகிறார்கள்....  வெளிப்படையாக தன் சொத்து மதிப்பு ரூ 299 கோடி என்கிறாராம்.. 

என்னங்கய்யா நடக்குது நம்ம நாட்டில் ..? உலகப் பணக்காரர் பில்கேட்ஸ்ஸா... தயவு செய்து சரியாக பார்த்துச் சொல்லுங்கய்யா...

2 கருத்துகள் :

குட்டன் சொன்னது…

நம் நாட்டு ’அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’!

Badri Nath சொன்னது…

வருகைக்கு நன்றி குட்டன்... அப்படித்தான் இருக்கு நாட்டு நடப்பு....