வெள்ளி, 28 பிப்ரவரி, 2014

சரிப்பட்டு வராது

மீண்டும் ஒரு  பயணம்... தற்போது மும்பையிலிருந்து  சென்னைக்கு....


பக்கத்து இருக்கைகளில் சில வெளிநாட்டவர்கள்.. மேற்படி தெரிந்து கொண்டதில் அவர்கள் ஜெர்மன் நாட்டினர்.. ஆங்கிலம் நன்றாகப் பேசினர்.. இந்தியா போன்ற நாட்டிற்கு வர வேண்டியிருக்கிறதே, அதனாலோ என்னவோ.. 

நெடுந்தூர ரயிலாக இருந்தால் காலை உணவாக நான் எடுத்துக்கொள்வது பிரட் ஆம்லெட்தான்... நான் சாப்பிடும் போது என்னையே பார்த்துக் கொண்டிருந்த ஒரு பெண் "what do you eat?" என்றார்...  நான்  "Dont you have this food in your country?" என்று கேட்டேன்... தோள்களைக் குலுக்கினார்.. ஆச்சரியமான இருந்தது.. அதென்ன தயிர்சாதமா...?

அவர்களிடம் மேலும் பேசும் போது தெரிந்து கொண்டது....
1) வந்தவர்கள்  எட்டு பேர்... ஆறு  பெண்கள்... இரண்டு ஆண்கள்... எவருமே திருமணமே செய்து கொள்ளவில்லை.. மூன்று பெண்கள் 30 வயதிற்கு மேல்... இருவர் 50 மேல் இருக்கும்....
2) பெரும்பாலும் சில காலம் சேர்ந்து வாழ்வார்களாம்... சரிப்பட்டு வரவில்லை என்றால் பிரிந்து விடுவார்களாம்..
3) சில ருத்தொருமித்த தம்பதியினர்   திருமணம் செய்து கொண்டு பல வருடங்கள் வாழ்வதும் உண்டாம்...
) அவர்களுக்கு personal  வாழ்க்கை மிக முக்கியமாம்... உதாரணம் travel போன்றவை....  அதற்கு இடையூராக எது வருவதும்  பிடிக்காதாம் திருமணம் உட்பட...

இவை நம் சமூகத்திற்கு சரிப்பட்டு வராது....அதற்கு நமது சமூகம்  miles to go..... இல்லையா..?

கருத்துகள் இல்லை :