வியாழன், 6 பிப்ரவரி, 2014

குதிரை வளரட்டும்...

மாண்புமிகு அரவிந்த கேஜ்ரிவா......ல் அவர்கள்... நேற்று ராய்டர் நிருபர் ஒருவருக்குப் பேட்டியளித்திருக்கிறார்.. அதாகப்பட்டது காப் பஞ்சாயத் (KHAP PANCHAYAT) (தமிழில் கட்டப் பஞ்சாயத்து)
என்பது சட்டப்படி வேண்டுமானாலும் தவறாக இருக்கலாம்.. ஆனால் சமூகத்தில் அது இடம் பெறுகிறதே.. என்று சுற்றி வளைத்து என்ன சொல்ல வருகிறார் என்றால் வேறு ஒன்றுமில்லை... வெகு விரைவில் ஹரியானா மாநிலத் தேர்தல் வருகிறது.. அந்த மாநிலத்தில் இந்த மாதிரியான பஞ்சாயத்துக்கள் ரொம்ப சகஜமாம்.. சாதிக் கட்டு நிரம்பிய அந்த மாநிலத்தில் எந்த முடிவும் கட்ட பஞ்சாயத்து மூலம்தானாம்.. அட.. ராமா... ஓட்டு வாங்கணுமே.. வேறு என்ன செய்யலாம்... என்ன வேண்டுமானாலும் செய்யலாம் போலும்.. all is fair in war or love என்று சொல்ல வேண்டியதுதான்... அட.. நீங்க இப்பத்தானே பொறந்திங்கய்யா... அதற்குள்ளாகவா...?

சார் உங்கள நான் ரொம்ப நம்பினேன்.... ஆனால்... எங்க ஊர்ல ஒரு பாட்டு ஒண்ணு இருக்கு..

 ”மூணு முக்கா நாழிகுள்ள முத்து மழ பொழிஞ்சு...
  வாரி யெடுக்கறத்துக்கள்ள மண்ணு மழ பொழிஞ்சுது...”

என்று அரற்றுவார்கள்.. சரியாகத்தான் பொருந்துகிறது....

2 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

மிகச் சரி...!

Badri Nath சொன்னது…

வருகைக்கு நன்றி தனபாலன் அவர்களே....