செவ்வாய், 11 பிப்ரவரி, 2014

எந்தப் பக்கம்...?

சமூக அரசியல் ஆர்வலர்கள்/அறிவுஜீவிகள் முதல் டிவி சீரியல்களில் முழ்கும் சராசரி நபர்கள் வரை (பெண்கள் என்று சொல்ல விரும்பவில்லை.. காரணம் டிவிசீரியல் கலாச்சாரத்தில்  ஆண் பெண் வித்தியாசமில்லை) நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் பற்றி பேசுகிறார்கள்

அவரவர் ’உள்ளத்தனைய உயர்வு’ வகையில் பேசுகிறார்கள்.. அதனால் நானும் அதைப் பற்றிச் சொல்லாமல் இருக்கலாமா..?

 போட்டி என்றால் களத்தில் இருப்பவை காங்கிரஸ் பிஜேபி மூன்றாம் அணி (SP, கம்யூ, அதிமுக திமுக etc etc) ஆகியவைதான் பிரதானம்.. மற்றவர்களைப் பற்றி எழுதினால்  கட்டுரையை முடிக்கவே முடியாது....

ஊரெங்கும் பலர் கருத்துரைப்பது பிஜேபி...
கம்யூனிஸ்டுகள் ரஷ்யாவைப் பார் சீனாவைப் பார் என்பார்களே அதைப் போல பிஜேபி ஆதரவாளர்கள் குஜராத்தைப் பார்.. அதன் வளர்ச்சியைப் பார் என்று புகழ் பண் பாடுகிறார்கள்... சரிதான்... அதுதான் குஜராத்தைப் பார்த்தோமே.... வினவு முதல் மார்க்சிஸ்ட் ஆதரவாளர் ஊழியர் குரல் ராமன் வரை  பல பதிவுகள எழுதிக் குவித்திருக்கிறார்கள்... திறந்த மனத்துடன் படிக்கும் ஒருவர் எவ்வாறு அதன் மறுக்க முடியாத வாதங்களை மறுக்க  இயலும்...?  பின்பு எப்படி குஜராத்தைப் பார்ப்பது.. மோதி பார்தான்... 
காங்கிரஸ்...?
எந்தப் பிரச்சனைகளுக்கும் எந்த வம்பு தும்புக்கும் போகாத கட்சிதான்... (1984 சீக்கியர் படுகொலைகள் குற்றச் சாட்டுகள் தவிர)... ஆனால் தமிழகத்தில் ஒரு சதவிகிதம் கூட ஆதரவளிக்க மாட்டார்கள் போல வறண்டு கிடக்கிறது... இந்த லட்சணத்தில் கோஷ்டிச் சண்டைகள் வேறு.... இரண்டு முறைகள் ஆட்சியில் இருப்பதால் anti incumbancy வேறு பாதிக்கும்... இலங்கைப் பிரச்சனைகளை வேறு தமிழகத்தில் பூதகரமாக வைகோ தமிழருவி மணியன் போன்றவர்கள் உரைவீச்சில் தாக்குவார்கள்...
கம்யூ அதிமுக திமுக...
கம்யூனிஸ்டுகள் மம்தாவின் தொல்லையே தாங்க முடியவில்லை.. அவரிடம் ஆட்சியை பறி கொடுத்துவிட்டு தவிக்கும் போது தமிழகத்தில் என்ன செய்து விட முடியும்... அதனால்தான் ’அம்மாவின் வழி நம் வழி.. அம்மாவே நமது தலைவர்’ என்று கையைத் தூக்கிவிட்டார்கள்.. அம்மா 40 கிடைத்தாலும் முடியுமா..? சந்தேகம்தான்.. திமுவின் நிலையும் அஃதே... அவர்கள் என்ன செய்துவிட முடியும் 2G பிரச்சனைக்காக இந்தப் பக்கமா அந்தப் பக்கமா என்று சமயம் பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்....

அட.. கேப்டனை விட்டுவிட்டோமே... அவருக்கே என்ன செய்வது என்று தெரியவில்லை.. 

ஒட்டு மொத்தமாகப் பார்க்கும் போது வெறுப்பே மிஞ்சுகிறது... இதில் நாம் ஏன் மண்டையைப் போட்டு உடைத்துக் கொள்ள வேண்டும்....சரி.. இருக்கவே 
இருக்கிறது NOTA.. பார்க்கலாம்.....

4 கருத்துகள் :

ராஜி சொன்னது…

ஒட்டு மொத்தமாகப் பார்க்கும் போது வெறுப்பே மிஞ்சுகிறது
>>
நிஜம்தான். நம் ஓட்டு கள்ள ஓட்டாய் மாறிடக் கூடாதேன்னுதான் ஓட்டுப் போடப் போறென்

Badri Nath சொன்னது…

வருகைக்கு நன்றி ராஜி அவர்களே... அதான் nota இருக்கே...

S.Raman,Vellore சொன்னது…

பத்ரி சார், உங்கள் பதிவு படித்தேன். காங்கிரஸ், பாஜக குறித்து நன்றாகவே அலசியுள்ளீர்கள். அம்மாவே தலைவர் என்று மார்க்சிஸ்டுகள் கையை உயர்த்தி விடவில்லை. யார்
பிரதமர் என்பதை முடிவு செய்யும் தருணம் வரவில்லை என்பதுதான் யதார்த்தம். நாங்கள் சொல்வது ஒரே ஒரு விஷயம் மட்டுமே. முகங்கள் முக்கியமில்லை. மக்களுக்கு பயனளிக்கும் மாற்றுக் கொள்கைகள் மட்டுமே முக்கியம். அதிலே ஒரு உடன்பாட்டிற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கிறது.

Badri Nath சொன்னது…

வருகைக்கு நன்றி தோழர் ராமன்... சில கருத்து வேறுபாடுகள் எனக்கு இருந்தாலும் உங்களையும் மார்க்சிஸ்டு கட்சியையும் நான் பெரிதும் மதிப்பவன்.. ஜனநாயகத்தின் வளர்ச்சிக்கு உங்களைப் போன்ற சக்திகள் இன்றியமையாதது என்பது எனது எண்ணம்,,