வெள்ளி, 21 பிப்ரவரி, 2014

உண்மை (தற்போது) உறங்குகிறது...

நேற்று (20.2.14) timesnow விவாதத்தை பார்க்க நேர்ந்தது.. 7 பேரின் விடுதலைப் பற்றி அலசப்பட்டது. மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் கலந்து கொண்டதால் சற்று ஆர்வமேற்பட்டது.


கடும் விவாதம்தான்... திருமுருகன் அர்னாப்பைப் பார்த்து ”நீங்கள் வர்மா கமிசன் அறிக்கைப் படித்தீர்களா.. படிக்கவில்லை.. வேண்டுமென்றே படிக்காமல் பேசுகிறீர்கள்.. அதில் சந்திராசாமி சுப்பிரமணிய சாமி பற்றியெல்லாம் வருகிறதே..” என்று பொரிந்து தள்ளினார்.. 

அவர் பேசியதை சரியாகக் கேட்கக்கூட இயலாமல் பெரும் சத்தம்... அர்னாப் ஒரு கட்டத்தில் அவரை வெளியேறச் சொன்னார்.. 

சரியாக விவாதம்தான்.. அவற்றிலிருந்து நான் தெரிந்து கொண்டது..

புலிகள் ஆட்சியில் மாத்தையாவிற்கு மரண தண்டனைதான் வழங்கப்பட்டது.
ரசிய சீன கம்யூனிஸ்ட் அரசாங்கங்களும் மரண தண்டனைகள் பெருமளவு வழங்கியிருக்கிறது..

ஆனால் இந்தியாவை பற்றி ஆயிரம் குற்றச்சாட்டுக்கள் கூறினாலும் முன்னாள் பிரமதர் கொலைக் கைதிகளை மன்னித்து ஆயுள் தண்டனைதானே நமது ஜனநாயகம் வழங்கியிருக்கிறது...

ஆக இந்தியா காந்தியப் பாதையில்தான் சென்றிருக்கிறது என்றே நான் நம்புகிறேன்..

எனக்குள்ள சந்தேகங்கள்...
  
 புலிகள் கொல்லவில்லை என்ற வாதம் - ஆனால் அன்டன் பாலசிங்கம் ஒரு முறை சூசகமாக தெரிவித்திருக்கிறார்.. "put the past behind...." என்கிற வாசகத்துடன் வரும் பேட்டி

புலிகள்தான் காரணம்  வேறு எவருக்கும் தொடர்பில்லை  என்கிற வாதம்- அப்படியென்றால் பல்நோக்கு விசாரணை (multi dimensional inquiry) என்கிற பெயரில் வர்மா கமிசனும் ஜெயின் கமிசனும் ஏன்..?

ஆக நிச்சயம் சில உண்மைகள் இன்னமும்  இருக்கிறது என்றே தெரிகிறது.






2 கருத்துகள் :

இந்திய தமிழன் சொன்னது…

Proof is in the pudding.Even the daughter of the two accused,is asking them to be forgiven for their act (in a plea to Rahul).

silanerangalil sila karuththukkal சொன்னது…

வருகைக்கு நன்றி இந்திய தமிழன்....உண்மைதான்