வெள்ளி, 14 மார்ச், 2014

கேயாஸ் தியரி...

கேயாஸ் தியரி என்பதை அடிப்படையாகக் கொண்டு கமல்   'தசாவதாரம்' படம் எடுத்திருப்பார்... ஏன் அத்தனை செலவு பண்ணுவானேன்... நமது நாட்டு நடப்புகளே பெரும் கேயாஸ் தியரியாக இருக்கிறது..

(1) நேற்று அழகிரி பாரதப் பிரதமரை சந்தித்தாராம்.. அதே சமயம் அவர் பிஜேபிக்கு பிரச்சாரம் செய்வாராம் என்று இன்றய பல பத்திரிகைகள் கூறுகிறது.. (இது எப்படி என்று ஒரே குழப்பமாக இருக்கிறது... ஈவிகேஎஸ் இளங்கோவன் வேறு அவர் காங்கிரசுக்கு வந்தால் வரவேற்போம் என்று பேட்டி  கொடுக்கிறார்.. என்ன சார் நடக்குது)

(2) கேப்டன் பிஜேபி கூட்டணி ஓவரா..? யார் யார் எத்தனை சீட்... தெரியவில்லை.. (ஆனால் கேப்டன் பிரச்சாரத்திற்கு தயாராம்..)

(3) அன்று  இந்தியத் தூதர் தேவ்யானியை கைது செய்து சண்டமாருதம் செய்த அமெரிக்கா.. எங்கள் நாட்டில் சட்டம்தான் முக்கியம் என்றது.. இன்று அமெரிக்க நீதிமன்றம் வழக்கையே  ரத்து செய்துவிட்டதாமே...? (தலைய பிச்சுக்கலாம் போலயிருக்கு..அப்ப ஏம்பா அந்தம்மாவுக்கு கை விலஙகெல்லாம் போட்டிங்க..?) 

(4) ”மலேசிய விமானம் இன்றுடன் வானில் காணாமல் போய் ஆறாவது நாள்” என்று பத்திரிகை செய்தி போடுகிறார்கள்..(அய்யா.. இதென்ன சினிமா படமா.. அம்பது நாள் நூறு நாள் என்று போடுவதற்கு.. மனம் திக்திக்கென்று அடித்துக் கொள்கிறதய்யா...உலகத்தில இது விட கொடுமை எதுவுமே கிடையாதுன்னு தோணுது...உலக விஞ்ஞானிகளே டெக்னோக்ராட்டுகளே.. ஐன்ஸ்டீன் பிறந்த நாளான இன்றாவது கண்டுபிடிங்கய்யா.. நல்லா இருப்பிங்க...) 

(5) ராகுல் பிரச்சாரத்திற்கு செலவழிக்கும் தொழிலதிபர் யார்..? மோடிக்கு ஸ்பெஷல் விமானம் ஹெலிகாப்டர் கொடுப்பது அம்பானி .. என்று பட்டாகத்தியெடுத்து வீசிய கெஜ்ரிவால் அய்யா அவர்கள்... ஜெய்பூரிலிருந்து டெல்லிக்கு அதே போன்ற ஸ்பெஷல் தனியார் ஜெட்டில் பயண்ம் செய்திருக்கிறார்.. (30 நிமிடப் பயணத்திற்கு பல லட்ச ரூபாயாம்  அதற்கு உபயம் இந்தியா டுடே பத்திரிகையாம்..) வாழ்க.. நண்பர் ஞாநி ஆம் ஆத்மி ஆயிட்டாராமே... வாழ்த்துக்கள் ஞாநி...

(6) இன்றய ஜெயமோகன் தளத்தில் ஒரு வாசகர் கடிதம் படித்தேன்.. உமாசுதன் என்பவர் எழுதியிருக்கிறார்... அதன் சுட்டி http://www.jeyamohan.in/?p=47855
கருப்பு சிவப்பாகுமா அல்லது சிவப்பு கருப்பாகுமா...? என்னை போட்டு உலக்கியெடுத்த ஒரு கடிதம் இதுதான்..

4 கருத்துகள் :

பெயரில்லா சொன்னது…

YOU ARE CORRECT SIR
S CHANDRASEKARAN

பெயரில்லா சொன்னது…

Innum Neriya sekkalaam pola irukke....?

Badri Nath சொன்னது…

வருகைக்கு நன்றி சந்திரசேகர் அவர்களே....

Badri Nath சொன்னது…

வருகைக்கு நன்றி அனானி.. உண்மைதான்.. இன்னமும் பல செய்திகள் உள்ளன.. ப்ளாக் தாங்காது...