வியாழன், 6 மார்ச், 2014

பத்து அப்துல்கலாம்களும் பதினொரு கேப்டன்களும்

காலையில்தான் பார்த்தேன்... தினமலர் இணையதளத்தில்... ஜெ. கம்யூ கட்சிகள் பேச்சு வார்த்தை தோல்வி என்று...

சில தினங்களாக தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை  இழுபறியாக சென்று கொண்டிருந்த போதே ஏதோ இருக்கிறது என்பது சாதாரண பார்வையாளர்களான எனக்கே தோன்றியது.. இறுதியில் பூனைக் குட்டி வெளியே வந்துவிட்டது...

அம்மா நாற்பதும் நமதே என்று தமிழகமெங்கும் சங்கநாதம் செய்து வருகிறார்.. அவருக்கு பல கணக்குகள் இருக்கிறது.. நாளை பிஜேபிக்கு நாம் ஆதரளவளிக்க நேர்ந்தால் மூன்றாம் அணி அமைந்தால் என பல கணக்குகள்.. அதனால் அவ்வாறு நடந்து கொள்கிறார்..  ஆனால் சில நண்பர்கள் பேசும் போது ”என்ன துணிச்சல் பாருங்க...” ”கூட்டணியை மதிக்க தெரியல..” ”கலைஞர் கிட்ட இருந்தா இப்படி ஆகுமா..” என எத்தனை அங்கலாய்ப்புகள்...

எல்லாம் சரிதான்... ஆனால் தமிழக மககள் ஏகோபித்த ஆதரவு ஜெ.க்கு இருக்கிறதா இல்லையா...? என்ற கேள்விக்கு சரியான விடையை யாரும் தருவதில்லை... கலைஞர் என்ன செய்தாலும் எப்படி பேசினாலும் அவருக்கு
ஆதரவு என்பது நூறு அல்லது தனிப் பெரும்பான்மைக்கு சற்று அருகே என்றுதானே வாக்களிக்கிறார்கள்.. ஆனால் அம்மாவிற்கு...? தோற்றால் சுத்தமாக ஜெயித்தால் பெரும்பான்மைக்கு மேலே படு மிருக பலத்துடன் தானே தமிழக மக்கள் வாக்களிக்கிறார்கள்...

ஏன் கம்யூனிஸ்டுகள் இத்தனையாண்டு காலம் அரசியல் செய்கிறார்களே.. தமிழகத்தில் ஒரு இரு தொகுதிகளில் மட்டுமே ஜெயிக்க முடிகிறது (தனியாக நின்றால்)  என்கிற கேள்விக்கு மனசாட்சியுடன் பதில் சொல்லட்டுமே..சரியோ தவறோ ஒரு ஜனநாயக சிஸ்டம் நம்மிடம் இருக்கிறது... அதில் சில குறைபாடுகள் இருக்கிறது...  பத்து அப்துல் கலாம்கள் எடுக்கும் முடிவை பதினொரு கேப்டன்கள் மாற்றலாம் என்பதுதான்.... 

அது ஒரு பெரும் குறைதான்...

அதற்கு ஒரு வழியை கண்டுபிடிக்க வேண்டும..

2 கருத்துகள் :

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை சொன்னது…

சரியோ தவறோ ஒரு ஜனநாயக சிஸ்டம் நம்மிடம் இருக்கிறது... அதில் சில குறைபாடுகள் இருக்கிறது- சரிபண்ணும் வழியைக கண்டுபிடிக்கவேண்டும் என்றுதான் தோன்றுகிறது. என்னவழின்னு தெரியலியே.......! நல்ல சிந்தனைப் பகிர்வுக்கு நன்றி

silanerangalil sila karuththukkal சொன்னது…

வருகைக்கு நன்றி முத்துநிலவன் சார்... அப்துல் கலாம்கள் அதற்கும் வழியை காட்டட்டும்