சனி, 29 மார்ச், 2014

உலகத்தோடு ஒட்ட ஒழுகல்

செய்தி ஒன்று
////ஜெனிவாவில் உள்ள மனித உரிமைகள் ஆணையத்தில், அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் மீது விவாதம் நடத்தப்பட்டது. இந்த விவாதத்தின்போது தீர்மானத்தை ஏற்கவில்லை என இந்திய பிரதிநிதி தெரிவித்தார். விவாதம் முடிந்தபின்னர் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது தீர்மானத்திற்கு ஆதரவாக இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியன், மொரிஷியஸ் உள்ளிட்ட 23 நாடுகளும், எதிராக சீனா உள்ளிட்ட 12 நாடுகளும் வாக்களித்தன. இந்தியா உள்ளிட்ட 12 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தன. இதனால் தீர்மானம் நிறைவேறியது. ஐ.நா. மன்றத்தில் கொண்டுவந்த வரைவு தீர்மானத்தை நிறைவேற்று வதில் இந்தியாவில் உள்ள அரசியல்  கட்சிகளுக்கும் தமிகத்தில் உள்ள கட்சிகளுக்கும் இடையே  இணக்கமோ ஒற்றுமையோ  இல்லாமல் செயல்பட்டு வருகின்றன.///
எதிர்த்த நாடுகளில் கம்யூனிச கொள்கை உடைய நாடுகள் உள்ளதாம்... உலகத் தொழிலாளர்களே கண்டு கொள்ளுங்கள்... எந்த நிலையிலும் தங்களுக்கு பாதகம் என்றால் அது என்ன மனித உரிமை மீறலாக இருந்தாலும் அரிச்சந்திரன் கூட  இப்படியெல்லாம் பண்ணுவார்ப்பா....
செய்தி இரண்டு
////மத்திய அரசு நடுநிலையான  முடிவை எடுத்து  இருக்கிறது. இருந் தாலும் 23 நாடுகள், இந்த தீர்மானத்தை  ஆதரித்து இருக்கின்றன. இந்தியாவும் ஆதரித்து இருக்க வேண் டும். ஆனால் வெளியுறவுத் துறை  எடுத்த  முடிவு இது. அமைச்சரகம் இந்த முடிவை எடுக்கவில்லை. இலங்கையில் மனித உரிமை மீறப்பட்டுள்ளதா? என்பது பற்றி பேச நிறைய வாய்ப்புகள், அரங்குகள் உள்ளன. அதனால் நல்ல கருத்தை தொடர்ந்து  வலியுறுத்த வேண்டும். என்று சிதம்பரம் கூறினார்.////
சிதம்பரத்திற்குத் தெரியாத விஷயமா...? அது சரி.. நல்ல கருத்தை தொடர்ந்து வலியுறுத்த வேண்டும என்கிறாரே சிதம்பரம் அய்யா அவர்கள்.. எது நல்ல விஷயம் எப்படி என்று கொஞ்சம் விளக்கலாம்...
செய்தி மூன்று
///இது குறித்து அமெரிக்க அயலுறவுத் துறைச் செயலர் ஜான் கெர்ரி கூறுகையில், இலங்கை அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், இலங்கையில் அமைதியை நிலைநாட்டவும் இதுவே தருணம். இலங்கை அரசு, அந்நாட்டு மக்களுக்கு நீதி வழங்கும் என்று நினைத்து, நீதி கிடைப்பதற்காக காத்திருக்க முடியாது. அந்நாட்டில் வாழும் மக்கள், அவர்களது அடிப்படை உரிமையான ஜனநாயகம், நாட்டின் வளத்தையே கேட்கிறார்கள். அதனை அவர்களுக்குப் பெற்றுத் தர வேண்டியது உலக நாடுகளின் கடமையாகிறது. அதற்காகவே அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பாடுபட்டு வருகிறது  //
அமெரிக்காவைப் பற்றி கம்யூனிஸ்டுகளிடம்தான் கேட்க வேண்டும். வண்டி வண்டியாக தகவல் தருகிறார்கள்... இருந்தாலும் அமெரிக்கா தான்தான்  உலக அரங்கில் “நடுநிலையான பெரிய ஆள்தனத்தை” சரியாக காட்டிவிட்டதற்கு பாராட்டலாம்...

தமிழ் உணர்வாளர்கள் கருத்தைப் பார்க்க முடியவில்லை என்றாலும் அவர்கள் ஈழம் தவிர வேறு எதையும் ஏற்க மாட்டார்கள்..

ஆனால் ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது.. எந்த ஒரு உலக நாடுகளும் ஒன்றுக்கொன்று முரண் படும் நிலையில் ,  அம்மக்கள் வாட்டம் போக்கி  அமைதியாகவும் கௌரவமாகவும்  வாழ  வழிவகை செய்யும் எந்த ஒரு திட்டமும் இந்தத் தருணத்தில் உவப்பானதே என்று தோன்றுகிறது.


கருத்துகள் இல்லை :