வெள்ளி, 21 மார்ச், 2014

கொலை மாநிலங்கள்

ரீடிஃப் தளத்தில் ஒரு செய்தியைப் பார்த்தேன்.. அதன் சுட்டி
http://www.rediff.com/news/slide-show/slide-show-1-interactive-map-the-real-rape-capital-of-india/20140320.htm
அதிக அளவிற்கு படுகொலைகள் நடக்கின்ற மாநிலங்கள் எவை என்ற கணக்கைப் போட்டிருந்தார்கள்.. (2012 புள்ளிவிவரங்கள்) சற்று வியப்பாகத்தான் இருந்தது.. நாம் கேள்விப் படுவதற்கும் நிஜத்திற்கும் எத்தனை வித்தியாசங்கள் இருக்கின்றன..

பொதுவாகவே நான் கேரளா பக்கமாக கொலைகள் நடப்பதை செய்திகளில் பார்த்திருக்கிறேன்.. ”அவுங்க அப்படித்தான்.. கம்யூனிஸ்டும் இந்து முசுலிம் மதக்காரர்கள் அடித்துக் கொள்வார்கள்...” என்றே நண்பர்களின் பேசிக் கொண்டிருப்பேன்.. அது முழுவதும் தவறு என்றே புள்ளிவிவரங்கள் சொல்கின்றன..

உண்மையில் இந்தியாவின் மாநிலங்களிலேயே கேரள பூமியில் படுகொலைகள் குறைவு       நம் கல்வியில் சிறந்த தமிழ்நாட்டைக் காட்டிலும்... . நம்ம தமிழ்நாடு அமைதிப் பூங்கா என்றல்லவா நினைத்திருந்தேன்...இவர்கள் கூறும் புள்ளி விவரப்படி, தென் தமிழ் நாட்டில் அதிக கொலைகள் நடக்கிறது..

 அதிக படுகொலைகள் நடப்பது தென் தமிழகம் தென் கர்நாடகம் தென் ஆந்திரா சற்று வட ஆந்திராவும் மத்திய பிரதேசம்  வட உத்திர பிரதேசம் அஸ்ஸாம்.. 

குறைவான கொலைகள் கேரளா கோவா (கமர்சியல் நகரமான மும்பையிலும்
குறைவான கொலைகள்) ராஜஸ்தான்,  (ஆச்சரியமூட்டும) ஜம்மு மாநிலம்  என்று போகிறது அந்த புள்ளிவிவரம்.. சற்றே ஆறுதலாக வட தமிழகமும்  இந்த லிஸ்டில் சேர்ந்திருப்பது ஏதோ பரவாயில்லை...

கருத்துகள் இல்லை :