வெள்ளி, 28 மார்ச், 2014

எல்லாத்துக்கும் இந்த மக்கள்தான் காரணம்....

IPL போட்டிகள் ஆரம்பமாகும் இந்தச் சமயத்தில் நமது சென்னை சூப்பர் கிங்
சாதாரண விரல் சூப்பர கிங்காக விழி பிதுங்கி நிற்கிறது..
.மகாகணம் பொருந்திய ஸ்ரீமான் சீனுவாசன்வாள் பிசிசிஐக்கு சேர்மேனாக இருக்கப்படாதாம்... உச்ச நீதி மன்றமே சொல்லிவிட்டது... காரணம் அவாள் மருமகப்பிள்ளை குருநாத்ஜி அவர்கள் மீது சூதாட்டப் புகார்.. அவரும் சென்ற மாதம் ’நான் சூதாடியது உண்மைதான்.. ஆனால் சாதாரண விளையாட்டுக்கு..’என்ற சொன்னதைப் போல செய்தி வேறு வந்தது... நேற்று உச்ச நீதி மன்றத்தில் பெரும்புள்ளி சால்வே என்கிற புகழ்பெற்ற வழக்கறிஞர் ஒரு புகார் மனு அளித்துள்ளார்.. ”இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனிக்கு ஐ.பி.எல்., கிரிக்கெட் மேட்ச் பிக்ஸிங்கில் தொடர்பு உண்டு,,“ என்று.....

இந்த விசாரணையை நடத்திய நீதிபதிகள், சென்னை, ராஜஸ்தான்  சஸ்பெண்ட் செய்வது, தற்காலிக தலைவராக கவாஸ்கரை கோர்ட்டே  நியமிப்பது உள்ளிட்ட முக்கிய அதிரடி முடிவுகளை எடுக்கவுள்ளது.  இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை வெளியிடும் முன்னதாக பி.சி.சி.ஐ.,க்கு
 ஒரு நாள் அவகாசம் கொடுத்துள்ளது.

IPL என்பது நமது நாட்டுக்கு ஒரு திருவிழாதான்.. எத்தனை கோலாகலம்..எத்தனை விளம்பரங்கள்... கிரிக்கெட் வீரர்கள் ஏதோ கடவுளர்கள் போல நமது நாட்டு யுவன்களும் யுவதிகளும் செய்யும் அலப்பறை கொஞ்சமா நஞ்சமா... 1000 கோடி என்கிறார்கள் 300 கோடி என்கிறார்கள் (சூதாட்டப் பணந்தேன்...) இது போக டிக்கெட்டின் விலையோ குறைந்தது ரூ 500 முதல் ரூ 5000 வரை போகிறது... கடந்த வருடம் என் மகள் ஆசைப் பட்டாள் என்று IPLக்கு அழைத்துச் சென்றேன்..ரூ 2000 பணால்..இந்த வருடம் இந்தச் செய்திகளையும் டிவியையும் காட்டி ‘சாரி’ சொல்லிவிட்டேன்...

என்னய்யா அக்கிரமம்... எல்லாம் நம்ம மக்களைச் சொல்லணும்.. இத்தனை patronage கொடுப்பதால்தானே எல்லாம் நடக்கிறது.. அய்யா.. மக்களே... நல்ல விஷயத்திற்கு உங்கள் ஆதரவைக் கொடுங்கள்.. நல்லவை நடக்கட்டும..

பின்குறிப்பு:  ’ஆமா 1000 கோடிக்கு எத்தனை சைபர்..?’

2 கருத்துகள் :

அரவிந்த் குமார்.பா சொன்னது…

மிகச் சரி நீங்கள் சொன்னது ! எனக்கு ஒருசந்தேகம்.. இன்னாரை நீக்கு என்று நீதிமன்றம் சொல்லலாம்.. இன்னாரை நியமி என்று எந்த அடிப்படையில் சொல்கிறார்களோ..? நீதிபதிகளைக் கவனித்தால் போதுமோ..?

Badri Nath சொன்னது…

வருகைக்கு நன்றி அரவிந்த குமார்.. நீதிமன்றம் இன்னாரை பரிந்துரைதான் செய்திருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.. மேலும் கவாஸ்கர் கிரிக்கெட் கதாநாயகனாகத் திகழ்ந்த காலத்தில்
கெர்ரிபேக்கர் என்கிற ஆஸ்திரேலிய முதலாளி கிரிக்கெட்டுக்காக தனியாக சாம்ராஜ்யம் நடத்திக் கொண்டு ஒரு டிவி சேனலை வைத்துக் கொண்டிருந்தார்.. கவாஸ்கரை பெரும் தொகைக்கு ஆட அழைத்தார்.. ஆனால் கவாஸ்கர் நாட்டுக்காக மட்டுமே ஆடுவேன் என்று அப்போதே சொன்னது நினைவில் உள்ளது.. அதானர்ல்தானோ என்னவோ அவர் மீது ஒரு நல்லபிப்பிராயம் எல்லோருக்கும் இருக்கிறது..