திங்கள், 23 ஜூன், 2014

ரயிலின் சுமை...?

 மத்திய அரசு ரயில் கட்டணங்களை ஏற்றியுள்ளது..  இந்த அரசுக்கு  மக்கள் தனித்த பெரும்பான்மை கொடுத்த படியால் அவர்களாக குறைத்தாலன்றி எதுவும் செய்ய இயலாது...


கடந்த ஆட்சியில் பரிந்துரைக்கப் பட்ட 11 சதவிகித உயர்வுவை தேர்தலை முன்னிட்டு காங் அரசு பின்வாங்கிக் கொண்டது.. தற்போது 14.5 சதம் என்று பிஜேபி தூக்கிவிட்டது.. என்ன காரணமாம்... தற்போதைய சூழலில் தவிர்க்க முடியாத கசப்பு மருந்து என்கிறார் மோடி...

ஒருவகையில் தற்போதைய விலைவாசியில் ஊழியர்கள் சம்பளச்சுமை மற்றும் செயல்பாட்டு செலவுகள் போன்றவை கூடிப் போயிருக்கும் வேளையில் தவிர்க்க முடியாத  விலையேற்றம் என்கிற அரசு தரப்பின் வாதத்தை முழுமையாக நிராகரிக்க முடியாதுதான்...

அதே சமயம் புள்ளி விவரங்கள் தலைகீழாக இருப்பதுதான் வேடிக்கை... மாறி வரும் சூழலில் ரயில்வே துறையை சீரமைக்க அல்லது புத்தாக்கம் செய்ய 15 லட்சம் கோடிகள் தேவை என்று பல அறிக்கைகள் கூறுகிறதாம்.. DREU வின் தலைவர் தோழர் இளங்கோ அன்று டிவியில் கூறினார்.. அவர் சொல்லும் விவரங்கள் சரியானவையே..

15 லட்சம் கோடி என்பது பெரும் முதலாளிகள் அல்லது அரசு ஆகியோரைத் தவிர வேறு எவரும் முதலீடு செய்ய இயலாத காரியம்..  அரசுக்கு எத்தனையோ முன்னுரிமை பகுதிகள் உண்டு.. உன் காசை ரயில்வேயில் கொட்டு என்று கூறு முடியாது... ஆக இது தனியாரோடு கலப்பதுதான் காரிய சாத்தியமாகும்... அதே சமயம் இத்தனை கொட்டிக் கொடுக்கும் முதலாளி எந்த வித பிரதிபலன்கள் இல்லாமல் தர முயலமாட்டான்... RETURN எங்கே என்பதுதான் அவனுடைய முன்நிபந்தனையாக இருக்கும்... 

மாறி வரும் சூழலில் நமது இடதுசாரிகளும்  இந்த விஷயத்தில் தங்கள் கொள்கையை தளர்த்திக் கொள்ளலாம்... 

அதெப்படி அப்படி கூறுலாம் என்று சிலர் கோபிக்கலாம்.. தனியார்கள் விலையை தாறுமாறாக ஏற்றிவிடுவார்கள் என்று வாதிடலாம்..

இப்போது மட்டும் என்ன வாழ்கிறதாம்.....

ஏசி கட்டணத்தை விடுங்கள்.. சாதாரண ஏழைக் கூலிகள் அமைப்பாக்கப்படாத தொழிலாளர்கள் தங்களின் போக்குவரத்துக்கு  நம்பி இருப்பது மாதந்திர சீசன் டிக்கெட்டுகளைதான்.. அதன் திருத்தியமைக்கப் பட்ட விலை என்ன தெரியுமா...?

தாம்பரம் TO பீச் ரூ 300 (பழைய கட்டணம் ரூ 120)
செங்கல்பட்டு  TO பீச் ரூ 500/-
அரக்கோணம் TO சென்ட்ரல் ரூ 900/- 

இதை மட்டும் அந்த அன்றாடக் கூலிகள் தாங்க முடியுமா...?

2 கருத்துகள் :

'நெல்லைத் தமிழன் சொன்னது…

அரசாங்கம் எதற்கு செலவைவிடக் குறைவாக டிக்கட் போடவேண்டும்? ரயிலில் பயணம் செய்பவர்கள் எல்லாரும் அன்றாடக் கூலிகளா? செளகர்யத்துக்காகப் பயணம் செய்யும்போது அதற்கான செலவைக் கொடுத்தால் என்ன? இவர்களெல்லாம் தனியார் பேருந்தில் கொட்டிக் கொடுத்துப் பயணம் செய்ததில்லையா?

கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்று சொல்வதற்குப் பதிலாக, தொழிலாளர்களின் உறவினருக்கு ஓசி டிக்கெட் கொடுக்காதே என்று போராடினால் அர்த்தமுண்டு.

Badri Nath சொன்னது…

வருகைக்கு நன்றி நெல்லைத் தமிழன்.. நான் இதில் கூற வருவது சீசன் டிக்கெட்டுகள் வாங்கிப் பயணிக்கும் பல சாதாரண தொழிலாளர்கள் பற்றியது.. பலர் தினமும் பயணிக்கிறார்கள். சிறு காய்கறி வியாபாரிகள் பூ விற்பவர்கள் கட்டிடத் தொழிலாளர்கள் செங்கல்பட்டு மற்றும் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் வாடகை குறைவாக இருப்பதால் அங்கிருந்து கொண்டு சென்னையின் மையப் பகுதிகளில் குறைவான மாதச் சம்பளத்திற்கு வந்து செல்லும் அமைப்பு சாராத தொழிலாளர்கள் என்று பலரை பார்த்திருக்கிறேன்.. அவர்களை வைத்துப பார்த்தால் இந்த சீசன் டிக்கெட் உயர்வு என்பது மிக மிக அதிகமானது.. அவர்கள் வயிற்றில் அடிப்பதுதான்..