வியாழன், 11 செப்டம்பர், 2014

நியாயமான பேச்சு....

ஆந்திராவில் ஒரு நடிகை பாலியல் தொழில் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.. அந்த ஊர் காட்சி ஊடகங்கள் படமெடுத்து டிவியில் காட்டியுள்ளார்கள்.


அதைப் பற்றி தனது முகநூலில் கருத்து தெரிவித்த குஷ்பூ ”அந்தப் பெண்ணை படம் எடுத்து டிவியில் காட்டீனீர்கள் ..சரி.. அவளை அந்தத் தொழில் செய்யச் சொன்னவரை அவளால் இன்பம் அடைந்த ஆணை ஏன் படமெடுக்க மறுக்கிறீர்கள்.. அந்தப் பயல்கள் போட்டோவைப் போடுங்க..” என்றிருக்கிறார்.. அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.. இதையொட்டிய விவாதங்கள் டிவியில அவ்வப்பொது பார்க்க நேர்கிறது..
Image result for kushbhoo photo

இந்த மாதிரி விஷயங்களில் ஆண்கள் முகம் காட்டப்படாத காரணம் என்ன...?

1) அட.. என்னங்க.. ஆம்பளங்க கொஞ்சம் அப்படி இப்படி இருப்பாங்க.. அத பெரிசு பண்ணலாமா (நம்ம முலாயம் சிங் யாதவ் சொன்னாரே ”hare.. boys are boys....” அதைப் போல....)
2) பல குடும்ப (?) ஆண்கள் அவளிடம் சென்றிருக்கலாம்.. அதைப் போட்டுக் காட்டி குடும்பத்துல கொழப்பம் வந்துருச்சுன்னா...

என்ன நியாயம் அய்யா...? this is a typical & the greatest male Chauvinist onslaught தவிர வேறு என்ன..? 

கற்பு என்றால் அஃதை பொதுவில் வைப்போம் என்கிற பாரதி வரியைத்தானே குஷ்பு சொல்லியிருக்கிறார்..


குஷபு சொல்வதில் என்ன தவறு இருக்கிறது என்றே தோன்றுகிறது...

2 கருத்துகள் :

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை சொன்னது…

நியாயமான பதிவு.
“கற்பு நிலையென்று சொல்லவநதார் - இரு
கட்சிக்கும் அதனைப் பொதுவில் வைப்போம்“-பாரதி.
குஷ்புவும் -சில நேரம்- சிந்திக்கும்படிச் செயல்படுகிறார். நன்றி

silanerangalil sila karuththukkal சொன்னது…

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி முத்துநிலவன்அவர்களே... நீங்கள் சொல்லும் அந்தச் ’சில நேரம் ’ என்பதை நான் வெகுவாக ரசித்தேன்.. நன்றி