செவ்வாய், 23 செப்டம்பர், 2014

வாசந்தியும் ஜெயமோகனும்....

வாழ்க்கை எந்தளவு சிக்கலாகவும் சிடுக்குகள் நிறைந்தும்  சுவாரஸ்யமாகவும் இருக்கிறதோ அதே அளவு  இலக்கியங்களும் படைப்பாளிகளும் இருக்கிறார்கள் என்றே எனக்குத் தோன்றுகிறது..

பெண்களுக்காக பரிந்து பேசினால் ஒரு பெண்ணியவாதி என்கிறார்கள். அப்படி  பேசாவிட்டால் இருந்தால்  ஆணாதிக்கவாதி  என்று குற்றம் சாட்டுகின்றனர்.. 

என்னைப் பொருத்தவரை இந்தப் பிரச்சனையே வேண்டாம்.. எது நியாயமோ அதை ஆதரிப்போம் என்றே சமீபகாலமாக நினைக்கிறேன்..

ஜெயமோகன் சில தினங்களுக்கு முன் அப்படி ஒரு குற்றச்சாட்டிற்கு ஆளானார்.. நீங்கள் படித்திருக்கலாம்... ஆனால் இந்த விவகாரமே சற்று சிக்கலாக கயிற்றின் மேல் நடப்பதாகத்தான் உள்ளது.. 

ஆண் பெண்  இருவரும் தவறு செய்கிறார்கள்.. நாம் தவறுக்கு வக்காலத்து வாங்க முடியுமா...?

கடந்த வாரம் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில்  வழக்கறிஞர் சுமதி அப்படித்தான் சொன்னார்.. 

விவாகரத்திற்கு வருபவர்களில் எல்லா வழக்குகளிலும் பெண்ணை மட்டும் ஆதரிக்க முடியாது.. சில வழக்குகளில் பெண் மீதும் தவறு இருக்கிறதை பார்க்க முடிகிறது என்றார்..

அதே கதைதான்....

வாசந்தியிசம் மற்றும் ஜெயமோகனிசம் ஆகியவற்றில் யார் பக்கம் நிற்பது..?

டால்ஸ்டாய் பற்றி இந்துவில் வாசந்தி எழுதிய கட்டுரை  வந்திருக்கிறது.. என்னைப் பொருத்த வரையில் அது ஒரு  அமெரிக்க வகை பார்வை என்றுதான் சொல்வேன்.. 

அதைத்தான் ஜெயமோகன் தன் கட்டுரையில் சொல்லியிருக்கிறார்... அதற்கான சுட்டி:::  http://www.jeyamohan.in/?p=21056 

டால்ஸ்டாயின் படைப்புகள் பல வற்றைப்  படித்திருக்கிறேன்.. தனிமையில் அழுதிருக்கிறேன்...  லெனினுக்கு முந்தியவரான அவர் படைப்புகள் அச்சு அசல்  மார்க்சியத்திற்கான முன் மாதிரி.. பொதுவுடைமையைப்  பற்றி பல புத்தககங்கள் படிப்பதைக் காட்டிலும் அவரின் பல புனைவுப் படைப்புகளே போதும்.. அத்தனை எளிமையான மார்க்சியம்... ஆனால் அவர் வாழ்க்கைப் பற்றி  தற்போதுதான் அதுவும் ஜெயமோகன் சுட்டியிலிருந்துதான்  அறிந்து கொண்டேன்.. அதைப் படிக்கும் போதும் கண்ணீர் வருவதை தவிர்க்க முடியவில்லை...

வாசந்தி சொல்வது சரியா ஜெயமோகன் சொல்வது சரியா.. 

இரண்டும்தான்.. ஆனால் ஜெயமோகன் சொல்ல வரும் மார்க்சியப் பார்வை தவிர்த்துவிட்டுப் பார்த்தால் வாசந்தி  சொல்வது நியாயமாகப் படும்....

இது கிட்டத்தட்ட விருமாண்டி படம் போலத்தான்... கொத்தாளத் தேவர் சொல்லும் விருமாண்டியின் கதையும் விருமாண்டியே சொல்லும் தன் கதையும் போலத்தான் இதுவும்....

2 கருத்துகள் :

tamil ilango சொன்னது…

ஜெயமோகனும் ம் சரி, வாசந்தியும் சரி என்றால்...
யார் யார் எது எதில் சரி அல்லது எவ்வளவு சரி
என்பதையும் சேர்த்துச் சொல்ல வேண்டும் அல்லவா!
இளங்கோ

silanerangalil sila karuththukkal சொன்னது…

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.. யார் சொன்னார் என்ன சொன்னார் என்பது பற்றித்தான் பேச முடியும் அதுவே எனது எல்லை என்று வரையறுத்துக் கொண்டிருக்கிறேன்...