ஞாயிறு, 26 மே, 2019

தேர்தலும் படிப்பினைகளும் ( பாகம் 1).


பிஜேபியின் இரண்டாம் ஆட்டம் பல முற்போக்கர்களை வியப்படைய வைத்துள்ளது … அதிர்ச்சிக்கும்   உள்ளாகியிருக்கிறார்கள் .

தேர்தலுக்கு முன் அடியேன் பிஜேபி  200+ என்றும்     காங்  150+ என்றும் கூறியிருந்தேன்..    இதை சில பிஜேபி -எதிர்ப்பு நண்பர்கள் அடியேன் கூற்றை ஏற்கவில்லை..


  ஆனால் தேர்தலுக்கு  முன்னரே எனக்கு ஒரு உறுத்தல் இருந்தது.. ஏனோ பிஜேபிக்கு எதிராக வட இந்தியர்கள் இருப்பதை அடியேனின் மனம் எந்த நிமிடத்திலும் உணரவில்லை …   அதே சமயம் பிஜேபி குறைந்த MPகளுடன் ஆட்சி அமைக்கும் என்று நம்பினேன் …  

ராஜிவ் காலத்தில் போபோர்ஸ் பிரச்னையின் போது இந்திய முழுவதும் ஒரு எதிர்ப்பு இருந்ததை என்னால் பார்க்க முடிந்தது…  ஆனால் இந்த முறை மோடிக்கு எதிராக இந்தியர்கள் அதிலும் குறிப்பாக வட இந்தியர்கள் இல்லை என்று உணர முடிந்தது ..ஆனால் GST பணமதிப்பிழப்பு  போன்றவற்றால் மோடிக்கு   ANTI-INCUMBENCY இருக்கும் என எண்ணினேன்…  அதனால்தான் இந்த முறை மோடிக்கு 200+ என்று எழுதினேன்.. அதன் பலன்களாக காங்கிற்கு 150+ என்று வரும் என்று கணித்தேன்..

 தேர்தலுக்கு பின் சில விஷயங்கள்  புலனாகிறது..


ஒரு முழக்கத்திக்கு ஆதரவாக ஒரு கட்சி கட்டப்பட்டால் அது நிச்சயம் எடுபடுகிறது.. அதுவே அந்த முழக்கம் நிலவும் சூழலுக்கு எதிராக இருந்தால் அதை மக்கள் நிராகரிக்கிறார்கள் பிஜேபியின் இந்து முழக்கம் பற்றி அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்..


தனிநபர் துதியை வைத்து கட்டப்பட்ட கட்சிகள் MGR, ஜெ யின் அதிமுக..


 காங்கிரஸுக்கும் இந்தப் பிரச்சனை  உள்ளது ராஜிவ் அதன்  பிறகு சோனியா அதன்  பிறகு ராகுல் பிரியங்கா என்று தனிநபர் முன்னிலை படுத்தும் கட்சியாகி விட்டது…. இந்தியாவில் பெரும்பாலும் அவ்வாறான கட்சிகள்தான் உள்ளன.. ஆந்திராவின் மாநிலக் கட்சிகள் மொழியை முழக்கமாக வைத்திருக்கும் கட்சிகள் ஆகும். அங்கு பிஜேபி காங் எடுபடவில்லை,, YSR கட்சி நம்ம ஊர் தமிழ்மாநில மூப்பனார் போல் வந்துள்ளது. 


கம்யூ கட்சிகள் திட்டவட்டமான கொள்கைகள் உடைய கட்சியாகும்.. வரையறை செய்யப்பட்ட கொள்கையின் கீழ்கட்டப்பட்ட கட்சியாகும்


 ஆனால் உலகெங்கும் வலது சாரி அலை வீசும் காலகட்டத்தில் அவர்களால் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை .. தமிழக நிலையுடன் நாம் ஒப்பிட்டால்  இந்த விஷயம் எத்தனை வீரியமானது என்று புரியும்..


 தமிழக மண் என்பது பெரும்பாலும் பிற்படுத்தப்பட்ட மக்கள் அதிகம் வாழும் இடம்….    குறிப்பாக 97% சதம் எனலாம்… இந்த மண்ணில்தான் பெரியாரின் நாத்திகப் பிரச்சாரம்  கடுமையாக எடுபட்டது…. அதற்கு ஆயிரம்  காரணங்களை திராவிட ஆதரவாளர்கள் அடுக்கினாலும்,அடியேன் புரிந்து கொள்வது இதுதான்..




 பார்ப்பனர்கள் முன்னேறிவிட்டனர்நீங்கள் முன்னேற வேண்டும் என்றால்  எங்களை ஆதரிக்க வேண்டும் இல்லை என்றால் உங்களால் முன்னேற முடியாது என்கிற  பிரச்சாரத்தை திராவிட  இயக்கம் வலுவாக   எடுக்க  அதை பெரும்பான்மை  மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்…..


  பிராமணர்கள் ஆட்சிக்கு வந்தால் ஒதுக்கீட்டை எடுத்துவிடுவார்கள் என்கிற தீவிர பிரச்சாரம் பெரும்பான்மை பிராமணரல்லாத மக்களிடம் எடுபட்டது... ஆனால் பிராமணரல்லா பெரும் பகுதி மக்களின் இந்த உணர்வு நிலை ஒரளவு உண்மையும் கூட..

இந்த அச்ச உணர்வு தொடர்ச்சியாக பிராமணர் அல்லாத மக்களை திராவிட கட்சிகளை நோக்கித் தள்ளின.

இதுதானே தவிர தமிழக மக்கள் பிராமணர்களுக்கும் இந்துக் கடவுளர்களுக்கும் எதிரானவர்கள் என்பது பச்சைப் பொய்.  இது உண்மையாக இருந்தால் இங்கே பிராமணர்கள் அவர்கள் கௌரவத்துடன் வாழமுடியாது.  இந்துக் கடவுளர்களின் பெரும்பான்மை கோவில்கள் தமிழகத்தில்தான் உள்ளது.  இந்தியாவிலே அதிக அளவு பக்திமான் இங்குதானோ என்று வியக்கும் வண்ணம் நேர்த்திக்கடன்கள் வேண்டுதல் கூட்டங்கள் திருவிழாக் காலங்களில் அலைமோதுகிறது.  


இந்த ஒற்றைப் புள்ளிதான் தமிழக மக்களின் முழக்கமே தவிர இது நாத்திக பூமி என்பதை அடியேனால் துளியும் ஏற்க இயலவில்லை.   அதி தீவிர திராவிடர்கள் இதற்கு அவர்களுக்கு ஏற்ற விதத்தில் வியக்யானம் செய்து கொண்டுவருவார்கள்.


இவ்வித அதி தீவிர திராவிடர்கள் உண்மையில் வெகு சொற்ப சதவிகித்தினர்தான்.

இந்த அதி தீவிர திராவிடர்கள் சொல்வது பற்றியும் இந்தியாவின் பிஜேபியின் இந்து polarization பற்றியும் முஸ்லிம் வஹ்ஹாபியர்கள் பற்றியும் அடுத்த பதிவில் பார்க்கலாம்   

கருத்துகள் இல்லை :