திங்கள், 2 செப்டம்பர், 2013

எங்கே செல்லும் இந்தப் பாதை

டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு பற்றி செய்திகள் தாங்கி வராத நாளேடுகள் டிவிக்கள் தற்போது சுத்தமாக இல்லை என்றே சொல்லலாம்.. சரி.. டாலர் எத்தனை ரூபாய் ஆனால் நமக்கு என்ன என்று நாம் வாளாயிருக்க முடியாது. நிச்சயமாக நம்மை பாதிக்கும்.. இப்படிச் சொன்னவுடன் அதெப்படி என்று சில நண்பர்கள் உறவினர்கள் கேட்கிறார்கள். எளிமையாக புரியும் படி சொன்னால்..

1) நம் நாடு  வர்த்தகத்திற்காக எப்போதோ உலக பொருளாதாரத்துடன் இணைத்துக் கொண்டு விட்டது

(2) வர்ததகம் மட்டுமல்ல வேலை வாய்ப்பிற்கும், படிப்பிற்காகவும் வெளிநாடுகளில் உள்ள இந்தியர் அனேகம்

(3) நமது அத்தனை பரிவர்த்தனைகளும் அமெரிக்க டாலரில்தான் நடைபெறுகிறது

(4) பெட்ரோல் டீசல் வர்த்தகம் எல்லாம் டாலரில்தான்

(5) நமது நடப்பு கணக்கு பற்றாக்குறை நாளாக நாளாக அதிகமாகிக் கொண்டிருக்கிறது

அதென்ன நடப்பு கணக்கு பற்றாக்குறை...? நாம் ஏற்றுமதி செய்கிறோம் அதிலும் நாம் குறிப்பிடும் பண மதிப்பு டாலரில்.. அதே போல் இறக்குமதியும் அப்படியே...

இந்தச் சூழலில் இறக்குமதி செய்ய அதிகமாக டாலர் கொடுத்து வாங்குகிறோம்..ஏற்றுமதி செய்யும் போது நமக்கு வரும் டாலர் பணம் இறக்குமதிக்குத் தருவதைவிட குறைவாக இருப்பதால் நாம் டாலரை இழக்க வேண்டியிருக்கிறது. தினமணியில் குருமூர்த்தி தொடர் கட்டுரை எழுதுகிறார் அதில் அவர் இந்தியா ஒரளவு தாக்கு பிடிக்க முடியவதற்குக் காரணம், வெளிநாட்டில் பணிபுரிவோர் அனுப்பும் பணமும் ஒருவகையில் நம்மை பெரும் பிரச்சனையிலிருந்து காப்பாற்றியுள்ளதாகக் கூறுகிறார். இதன் காரணமாக நாம் சந்திக்கும் உடனே பிரச்சனை பெட்ரோல் டீசல் காஸ் விலை உயர்வு. அதன் தொடர்ச்சியாக வரும் இதர பிரச்சனைகள்.. உடனடி தீர்வு அவசியம். இல்லையேல் சமூக கொந்தளிப்புகள் அதிமாகும்..

என்ன செய்யப் போகிறார்கள் ஆள்பவர்கள்?


9 கருத்துகள் :

KABEER ANBAN சொன்னது…

சுவிஸ் வங்கியில் முடங்கிக் கிடக்கும் நம்(மவர்கள்) பணத்தை வெளிக் கொணர முடிந்தாலே பல பிரச்சனைகள் தீரும் என்று சிலர் கருதுகிறார்கள். வேறு சிலர் அது பணவீக்கத்தை உண்டு பண்ணும் எனச் சொல்கிறார்கள். எது உண்மை ?

Badri Nath சொன்னது…

நீங்கள் சொல்வதும் பல உண்மைகளின் ஒன்று. மிக முக்கியமானதும் கூட

பெயரில்லா சொன்னது…

நம்ம ரூபாய் நோட்டை டாலர் பண்ணிவிட்டால் எப்படி ?

Rama K சொன்னது…

அரசியல் வாதிகள் பொருளாராத பாதையை முட் பாதையாக மாற்றி விட்டார்கள்...இந்திய மக்களின் "Life Style" மட்டுமே நம்மை காப்பாற்றி வருகிறது. பதிவுக்கு நன்றி!

முடிஞ்சா கமெண்ட்ல இருக்கிற "Word Verfication" எடுத்து விடுங்க..

http;//muthaleedu.blogspot.com

Badri Nath சொன்னது…

அதை விட நாமே அமெரிக்கர்களாக மாறிவிடலாமே... முதல் பெயரை மாற்றணும் ....அய்யா அனானி.. என் தலைப்பு சரிதான் போலும்...’எங்கே செல்லும் இந்தப் பாதை...’

Badri Nath சொன்னது…

நன்றி Rama K

Badri Nath சொன்னது…

வேர்ட் வெரிபிகேஷன் எடுத்துவிட்டேன்... தகவலுக்கு நன்றி
பத்ரிநாத்

S.Raman,Vellore சொன்னது…

சோவியத் யூனியன் இருந்த போது நாம் அவர்களிடமிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு ரூபாயாகவே அளிக்கலாம். இரானிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய்க்கு ரூபாயாகவே கொடுக்கலாம் என்றாலும் அதனை அமெரிக்காவின் மீதான அச்சம் காரணமாக பயன்படுத்தவில்லை.

Badri Nath சொன்னது…

நன்றி தோழர் ராமன் அவர்களே...