திங்கள், 13 ஜனவரி, 2014

“நான் கடவுளைக் கண்டேன்...”

இதற்கு முந்தைய பதிவில்தான் இறைவன் இருக்கின்றானா என்று எழுதியிருந்தேன்.. ஆனால் இப்போது நான் கடவுளை கண்டேன்.. 
நேற்று 12.1.14 விஜய் டிவியில் நீயா நானா நிகழ்ச்சியைப் பார்க்க நேர்ந்தது.. அதில் ஒருவர் சொன்னது மிக நெகிழ்ச்சியாக இருந்தது.. அவர் சொன்ன வார்த்தைகள் கிட்டத்தட்ட அவர் மொழியில் ”சில வருஷத்துக்கு முன்னர் எனக்கு ரெண்டு கிட்னியும் ஃபெயில் ஆயிருச்சு.. எனக்கு  மாற்று கிட்னி தர யாரும் முன்வரல.. என் பெற்றோரும் என்ன செய்வது என்பது தெரியாமல் இருந்தாங்க.. ஆனால் என் மனைவி என் இரண்டு கிட்னியையும் எடுத்துங்க என் குழந்தைகளை நீங்க பாத்துங்க என்றார்..(அது சாத்தியமில்லை என்றாலும் அப்படிச் சொல்லும் போது அவர் உடல்மொழியில்  எதுவும் போலியாகத் தெரியவில்லை) ரொம்ப ஆச்சரியமா எனக்கு என் மனைவியின் கிட்னி ஒத்துப் போச்சு இப்போ அதை பொருத்தி 2 வருஷமா நல்லா இருக்கேன்.. அந்தப் பிரச்சனை முடிஞ்சு வந்தா என் கம்பெனி  ஆஃப் ஆயிருச்சு.. அந்த நிலையிலும் அவங்க உத்யோகம் பார்த்து என் குடும்பத்த காப்பாதினாங்க..” என்று கூறினார்.. ”அவரை காட்டுங்கள்..” என்று கோபிநாத் கூற மேல் வரிசையில் ஒரு பெண்மணி சற்று கூச்சத்துடன்  எழுந்து நின்றார்..

தகுதி இல்லாதவர்கள்  எதையும் சாதிக்காதவர்கள் தன் மேல மீடியா வெளிச்சம் பட வேண்டும் என்று விரும்பும் உலகத்தில் தன்னுடைய இத்தனை பெரிய தியாகத்தை அந்தப் பெண்மணி மிக அடக்கமாக  நிகழ்ச்சியில் எதுவும் பேசாமல் இருந்ததைப் பார்க்க நேர்ந்த போது, The greatest truths are the  simplest things in the world, simple as your own existence என்கிற விவேகானந்தரின் பொன்மொழிதான் நினைவுக்கு வந்தது..

இறைவன் இருக்கின்றானோ இல்லையோ.. இதோ நான் அந்தப் பெண்ணின் உருவத்தில் கடவுளைக் கண்டேன்...

8 கருத்துகள் :

Tamizhan சொன்னது…

Amazing inspiring moments, we also saw that episode. Rekindled our hopes for this world!. You need to correct the date :12-1-2014, not 13

silanerangalil sila karuththukkal சொன்னது…

வருகைக்கு நன்றி தழிழன்... நீங்கள் சொல்வது போல பலர் உணர்ந்திருக்கிறார்கள்.. நன்றி... தேதி மாற்றிவிட்டேன்.. சாரி... நன்றி...

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

மனித ரூபத்தில் பலரும் அங்கங்கே இருக்கின்றார்கள் என்பது உண்மை...

தித்திக்கும் இனிய தைப் பொங்கல் + உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

silanerangalil sila karuththukkal சொன்னது…

உண்மைதான் நண்பர் தனபாலன்.. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்..

Paddy Rao சொன்னது…

மனிதன் கடவுள் ஆகிறான் , கடவுள் ஜனிப்பதில்ல ; இறைவன் அவதாரம் ரகசியம் இதுவே.
எடயன் கிருஷ்ணனில் கண்ட அதே கடவுள் தான் அந்த பெண்மணியும்

silanerangalil sila karuththukkal சொன்னது…

வருகைக்கு நன்றி BOSTON அவர்களே.. உண்மைதான்

Avargal Unmaigal சொன்னது…

கடவுள் பல வழிகளில் நம் முன் தோன்றுவார் இவருக்கோ அவரது மனைவின் மூலமாக தோன்றி இருக்கிறார் அது மட்டுமல்லாமல் அவருடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார். அதிர்ஷ்ட சாலிதான் இவர்

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள். பொங்கல் போல உங்கள் வாழ்வும் இனிக்க எனது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

silanerangalil sila karuththukkal சொன்னது…

IT IS 100% RIGHT avargal Unmaigal.. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்..