வியாழன், 3 ஏப்ரல், 2014

ச்சீய்./ என்னமா பீதிய கௌப்பறாங்க /இது சரியா...?

மூன்று தலைப்பில் தனித்தனியாக செய்திகள்தான்... தனியான விஷயங்கள்தான்... ஆனால் ஓரே பதிவாக போட்டுவிடலாமே என்றுதான் இப்படி ஒரு தலைப்பு..

முதலில் ச்சீய்....
நடிகை நக்மா காங்கிரஸ் சார்பாக மீரட் தொகுதியில் தேர்தலில் போட்டியிடுகிறார்.. முதலில் ஒரு எம்எல்ஏ கிழவன் அவரை முத்தமிட முயன்றிருக்கிறான்.. இன்னொரு இடத்தில் வேறு ஒரு இளைஞன் தவறாக நடந்திருகிறான்.. இதை காணொளியாகப் பார்த்த எனக்கு ஆத்திரம் அடங்கவேயில்லை.. நாகரீகமாக எழுத வேண்டும் என்று பார்க்கிறேன்.. ”அடேய்.. மனித பன்றிகளே.. நீங்கள் உயிரோடு இந்த உலகில் ஏன்டா வாழ்கிறீர்கள்..”  என கத்த வேண்டும் போலிருக்கிறது.. என்ன நாடு இது.. பெண்னென்றால் என்ன வேண்டுமானாலும் அத்து மீறலாம் என்ற எண்ணமா..? உண்மையில் நாம் நாகரீகமானவர்கள்தானா என்பதே சந்தேகமாக இருக்கிறது.. கடவுள் வாழும் தேசமாம்... பெண்ணை கடவுளாக வணங்கும் தேசமாம்... ஏன்டா பொய் சொல்கிறீர்கள்... ச்சீய்...காறி துப்பத் தோன்றுகிறது...

SHS
SHS  என்றால் staying home syndrome என்று பெயராம்.... இப்படிப்பட்ட   மனோ வியாதியஸ்தர்கள் வீட்டில் அடைந்து கிடப்பதையே விரும்புவார்களாம்.. சமூகத்தை விட்டு தன்னைத் துண்டித்துக் கொள்வார்களாம்.. எந்த வித சந்தோஷத்தை விரும்பாமல் போரடித்துக் கொண்டு வீட்டில் இருப்பார்களாம் என்று நாளேடுகளில் விளம்பரத்தைப் பார்த்தேன்.. 

முன்பு இப்படி கேள்விப்பட்டதில்லை... ஏற்கனவே இருந்த வியாதிதானா..? வேறு பெயரில் இருந்ததா...? புதிதாக கிளப்பி விடுகிறார்களா...? கம்யூனிஸ்ட்டுகள் பாணியில் இது ஒரு ஏகாதிபத்ய சதியோ என்றுகூட நினைத்துப பார்த்தேன்.. ஆனால் மக்களை வீட்டிலேயே முடக்கி வைப்பதை எதிர்க்கும் விசயமாக இருப்பதால் அப்படி இருக்காது என்று முடிவுக்கு வந்தேன்.. இது உண்மையான செய்திதான்.. அதைப் பற்றி மேலதிகமான தகவல் தெரிந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்..

இது சரியா...?
தமிழ்மணத்தில் நான் விரும்பிப் படிக்கும் பதிவர் இக்பால் செல்வன்.. அவர் சமீபத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்..  ’இனம்’ திரைப்பட சர்ச்சை சம்பந்தமாக...  நூற்றுக்கு நூறு சரியான பதிவு  அது.. அருமையாக கருத்துக்கள்.. நான் அவர் கருத்தில் முழுவதும் உடன் படுகிறேன்.. இனம் சம்பந்தமாக தேவையற்ற சர்ச்சைதான் உருவாக்கியிருக்கிறார்கள்... படம் எடுத்தவர் சந்தோஷ் சிவன் மலையாளி என்பதால் சந்தேகக் கண்களுடன் பார்ப்பது சரிதான்... மேலும் கருத்துச் சுதந்திரம் என்கிற பெயரில் அவதூறாகச் சொல்லவ்து தவறுதான்.... ஆனால் அத்திரைப்படத்தை வெளியிடுபவர் லிங்குசாமி என்பர் தமிழர்தானே... மேலும் வைரமுத்து செல்வமணி போன்ற  தமிழ் படைப்பாளிகள் படத்தைப் பார்த்தபிறகும் அவர்கள் ஆட்சேபிக்காத போதும் படத்தை வெளியிட விடமாட்டோம் என்பது ஜனநாயகமற்ற செயல்  என்றே தோன்றுகிறது..  இக்பால் சொல்வது போல இது ஒரு வகை தலிபானிசமே என்றே சொல்லத் தோன்றுகிறது....

2 கருத்துகள் :

mcferran சொன்னது…

migaum nandru

Badri Nath சொன்னது…

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி திரவாளர் mcferran அவர்களே....