ஞாயிறு, 4 மார்ச், 2018

திரிபுரம் எரித்த திரிபுரா...


கடந்த   2016  ஆண்டு  நான் சென்னையிலிருந்து தஞ்சைக்கு உழவன் எக்ஸ்பிரசில் பயணித்தேன்.. தேர்தல் அறிக்கப் பட்ட காலம்,..  வழக்கத்துக்கு மாறாக போலீஸ் இருந்ததைப் பார்த்தேன்.. காரணம் புரியவில்லை,, காலையில் தஞ்சையில் இறங்கியதும்தான் தெரிந்து கொண்டேன் .. நானும்  அன்றைய திரிபுரா முதல்வர் மாணிக் சர்காரும் உழவன் எக்ஸ்பிரசில்   பயணித்திருக்கிறோம் என்று…   என் வாழ்க்கையில் ஒரு மாநில முதல்வருடன் சேர்ந்து பயணித்தது அதுதான் முதல் முறை..

அன்று முழுவதும் தோழர் மாணிக் சர்க்கார் தஞ்சைப் பகுதியில் தோழர்கள் புடை சூழ நடந்து வந்து கொண்டேயிருந்தார்.  இன்றய காலகட்டத்தில் இப்படி ஒரு முதல்வரை நாம் பார்ப்பது என்பதே நம்ப முடியாது..

நாம் கக்கனையும் காமராஜரையும் கேள்விப் பட்டிருக்கிறோம்… ஆனால் நேரில் சந்திக்கவில்லை.. ஆனால் அப்படிப்பட்ட ஒரு மனிதரை   நான் நேரில் காணும் வாய்ப்பை பெற்றேன்..   இவரா  தோற்ப்பார் என்று என்னால் நம்பமுடியவில்லை..   … அவர் கட்சி மண்ணைக் கவ்வியிருக்கிறது என்பதை நம்பவே முடியவில்லை..  இதன் காரணம் வேறு எங்கும் தேடி அலையவேண்டியதில்லை..

ஜெயகாந்தன் தலைப்பு ஒன்று நிழலாடுகிறது… “ உண்மை சுடும்..“  நாம் இந்த விஷயத்தை காய்தல் உவத்தலின்றி பார்ப்போம்…

திரிபுராவின் களம் என்பதே எளிமையானது  வங்காளிகள் திரிபுராவின் பூர்வக் குடிகள் என்கிற ஒரு டிவைட் தெளிவாகவே உள்ளது..

தோழர்  எச்சூரி அவர்கள் வழக்கமாக EVM மிஷினை குற்றஞ்சாட்டுகிறார்.. அந்தக் கருவிதானே மார்க்சிஸ்ட்டின் வாக்கு சதவிகிதம் பாஜகவைவிட அதிகம் என்கிறது..  அதையும் மறுப்பாரா..?   ஆக அதுவல்ல விஷயம்..

இன்றய தமிழ் இந்துவில் ஒரு செய்தி வந்திருக்கிறது.. மாணிக் சர்க்கார் ஒரு பெங்காலி பற்றாளர். ,ஆட்சி அதிகாரத்தில் பழங்குடியினாருக்கான பங்கை அளிக்காதவர் என்று பாஜக பிரச்சாரம் செய்திருக்கிறது.. அது வலிமையாக அவர்களை சென்றைடைந்திருக்கிறது..

திரிபுரா பழங்குடி  மொழியை வங்காள மார்க்சிஸ்ட் முதல்வர்கள் நிருபன் சக்ரவர்த்தி, தசரததேவ்,மாணிக் சர்க்கார் அழித்தனர் என்கிற குற்றச்சாட்டை திரிபுரா மக்கள் ஏற்றிருக்கிறார் என்பதே உண்மை..

திரிபுரா அரசியல் என்பது மண்ணின்  மைந்தர்களான பழங்குடியினருக்கும் வங்காளிகளுக்கும் இடையிலான போட்டி என்றே உருவாகிவிட்டதை பாஜக நன்கு  பயன் படுத்தியிருக்கிறார்கள்..

பழங்குடியினர் பாஜகவுடன் இணைந்து தோற்கடித்து உள்ளனர்.

திரு ஆழி செந்தில்நாதன் என்கிற சமூக செயற்பாட்டாளர்  தன்னுடைய முகநூலில் சில கருத்துக்களை தெவித்துள்ளார்..  அது எத்தனை காத்திரமான கருத்து என்பதை நீங்களே பார்க்கலாம்..


அவர் கூறுகிறார்,“ ஆனால் பாஜகவுக்கு இது மிகச்சுலபத்தில் கிடைத்த வெற்றி அல்ல. 2010 முதல் வட கிழக்கில் பாஜக தொடர்ச்சியாக செய்துவந்த செயல்பாடுகளின் பலனை இப்போது அது அறுவடை செய்கிறது. திரிபுராவைப் பொறுத்தவரை வங்காளப் பெரும்பான்மையரின் கட்சியான சிபிஎம்முக்கு, முன்பு பழங்குடியினரிடமும் செல்வாக்கு இருந்தது. இப்போது பழங்குடியினர் ஐபிஎஃப்டி வழியாக பாஜகவை ஆதரிக்கிறார்கள். வங்காளிகள் மத்தியிலும் பாஜக பெருவெற்றி பெற்றிருக்கிறது

இந்தியாவின் மற்ற பகுதிகளில் ஜாதிகளை வைத்து 'சோஷல் எஞ்சினியரிங்' செய்யும் பாஜக வடகிழக்கில் இனக்குழுக்களை வைத்து அதை செய்துமுடித்திருக்கிறது. இன்றைய பாஜக கூட்டணி வெற்றிக்கு உழைத்தவர்களில் பலர் முன்னாள் "பிரிவினைவாதிகள்" அல்லது வடகிழக்கின் பல்வேறு இனங்களின் தேசியவாதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

சிபிஎம் எதிர்கொள்ளும் சவால் வேறொன்று - வங்கத்திலும் திரிபுராவிலும் வங்காள இன மக்களிடம் சிபிஎம் தொடர்ந்து தன் செல்வாக்கை இழந்துவருகிறது. வங்க மக்களிடம் வங்காள தேசிய உணர்வை ஆழப்படுத்தியிருந்தால் இன்று சிபிஎம் மேற்குவங்கத்தையும் திரிபுராவையும் இழந்திருக்காது. (கேரள சிபிஎம் மலையாள தேசிய உணர்வை ஆழமாக நம்பும் கட்சி). வங்காளிகளை இந்துஸ்தானிகளாக நினைத்த சிபிஎம் இப்போது இந்துஸ்தானிகளின் பிரதான கட்சியான பாஜகவுக்கு தனது வாக்குகளை பறிகொடுப்பது தவிர்க்க இயலாத ஒன்று. ..அதற்கு வடகிழக்கின் இனக்குழுக்களின் அரசியலை நன்கு உற்றறிந்து புரிந்துகொள்ளவேண்டும்.“ என்று முடிக்கிறார் திரு ஆழி செந்தில்நாதன்..

இதைவிட சிறப்பான கருத்தாக்கம் இந்தப் பிரச்சனையில் நான் காணமுடியவில்லை…

1 கருத்து :

silanerangalil sila karuththukkal சொன்னது…

நன்றி அதன்படி செய்கிறேன்