செவ்வாய், 12 நவம்பர், 2013

கல்லில் நார் உரிக்கும் கலை

அன்பே சிவம் படத்தில் ஒரு வசனம் வரும்.. நாசர் அந்தப் படத்தில் ஒரு முதலாளியாக நடிப்பார்... அவர் ஒரு காட்சியில் இப்படிச் பேசுவார், ” இந்த அரசியல்வாதிங்க தொழிலாளர் பக்கம் சைட் எடுக்கற மாதிரி நடிப்பாங்க... ஆனா அவங்க நம்ம பக்கம்தான்.. பின்ன அன்னிய செலவாணி கொட்றது யாரு... நாமதான... தொழிலாளர்களா கொட்றாங்க...”

சரி.. இப்போது அந்த வசனம் ஏன் என்கிறீர்களா...? காரணமாத்தான்....   நேற்று (11.11.13) timesnow 9 மணி விவாதத்தில் ஒரு விசயம் அலசப் பட்டது.. (என் ப்ளாக் அர்னாப்பின் timesnow விவாதங்களை பற்றி விமர்சனமாக ஆகிவிட்டது குறைத்துக் கொள்கிறேன்...)அதாவது ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த (ஆம் ஆத்மி என்றால் இந்தியில் பொது ஜனமாம்) அரவிந்த் கேஜ்ரிவால் அயல்நாட்டு என்ஆர்ஐ NGOக்களிடமிருந்து பெரும் தொகை பெற்றுக் கொண்டாராம்.. அவர் ஒரு CIA ஏஜெண்டாம்..  யாரோ ஒருவர் அரசுக்கு புகார் மனு அளிக்க  ஷிண்டே அந்தப் புகார் மேல் நடவடிக்கை எடுப்பேன் என்று வேறு  கூறிவிட்டார்..

நேற்று விவாதத்தில் பரஸ்பர குற்றச்சாட்டுக்கள் பறந்தன.. கலந்து கொண்ட கட்சிகள் காங்கிரஸ், பிஜேபி, ஆம் ஆத்மி கட்சி, SP , BSP ஒரு retired IAS அதிகாரி எல்லோரும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டிக் கொண்டார்கள்.. அந்தக் குற்றச் சாட்டுத் துளிகள் சில.. (கடல் ஒளிந்து கொண்டிருக்கிறது போலும்) •காங்கிரஸ் தேர்தலுக்காக 900 கோடி கட்சி நிதி திரட்டியிருக்கிறது என்றார் அர்னாப்.
•பிஜேபி dove chemicals பல கோடிகள் வாங்கியதாக அர்னாப் மேலும் கூற
உடனே பிஜேபி மீனாஷி லேகி அதை திருப்பித் தந்து விட்டதாகக் கூறினார்
•SP BSP பரஸ்பரம் நிதி திரட்டியதாக குற்றம் சாட்டிக் கொண்டனர்..

இந்த விவகாரத்தில் நம்மவூர் கட்சிகள் பற்றி விவரம் தெரியவில்லை... ஆக இதிலிருந்து என்ன தெரிந்து கொள்ளலாம்.. கட்சி நடத்த, தேர்தலை சந்திக்க , பெரும் பணம் தேவைப் படுகிறது..  அது ஒரு வகையில் உண்மைதான்.. அப்படி அவர்கள் பெறும் பணத்தை நாட்டின் பெரிய முதலாளிகள் வாரிக் கொடுப்பார்கள்.. சந்தேகமேயில்லைதான்... ஆனால் முதலாளிகள் அரசிடமிருந்து quid pro quo கேட்பார்களே.. புரியவில்லையா... மேலே சொன்ன அன்பே சிவம் வசனம்தான்... ஆக.. பொது ஜனமாகிய நாம், அரசு என்கிற பெரும் நிறுவனத்தில்  நமது உரிமையை ஐனநாயக ரீதியில் போராடித்தான் பெற வேண்டும்...

கல்லில் நார் உரிக்கும் கலையை கைகொள்ள வேண்டும்...

கருத்துகள் இல்லை :