புதன், 20 நவம்பர், 2013

பெர்னாட்ஷா-வாக மாறுவோம்...

சில தினங்களாகவே இணைய உலகில் பாரத் ரத்னா பற்றி சர்ச்சைகள்  தென்பட்டுக் கொண்டே இருக்கின்றன.  சச்சின் தான் இதில்(கூட) கதாநாயகர்.. ”எப்படியா போச்சு அந்த ஆளுக்கு பாரத் ரத்னா“ பலர் சண்டமாருதம் செய்கிறார்கள்..

அவருக்குத் தருவதில் என்ன  தவறு என்றே தெரியவில்லை..

சச்சினுக்கு பாரத் ரத்னா கொடுக்கப்பட்டதை விமர்சிப்பவர் கீழ்கண்ட வகையினர்
1) அவருக்கு தகுதி கிடையாது 
2) அவருக்கு மட்டும் தருவது தவறு
3) கோடீஸ்வரனான சச்சினுக்கு என்ன தேவை
எதுவும்  என்னால் ஏற்க இயலவில்லை..

கிரிக்கெட் என்கிற விளையாட்டு இந்தியர்கள் ரத்தத்தில்  ஊறிப் போனது ஏன் என்பதைப் பற்றி பெரும் ஆராய்ச்சி நடந்தால்தான் இதற்கு விடைகூற இயலும்.. சூப்பர்ஸ்டாருக்கு ஏன் இத்தனை பணம், புகழ் என்றால் அவர் படங்கள் ஓடுவதால்தான்.. அதைப் போல கிரிக்கெட் விளையாட்டு நமது நர்ட்டில் இன்னபிற விளையாட்டைவிட கூடுதலாக புகழ் பெற்றிருப்பதால் பணம் கொட்டோ கொட்டோ என்று கொட்டுகிறது. சமீபத்தில் பெரும் வெற்றி பெற்ற நடுவில கொஞ்சம் பக்கத்தை காணோம் படத்தில்கூட கதையின் பிள்ளையார் சுழியே கிரிக்கெட்தான், அதனால் வந்த வினையைப் பற்றி கதையைப் பின்னியிருப்பார்கள்.. ஏன் இந்திய  விளையாட்டான ஹாக்கி விளையாடும் போதோ நமது பாரம்பரிய கபடி விளையாடும் போதோ அடியே  படாதா...?   கதை எழுதுபவர்களுக்கு ஏன் அப்படி தோன்றுவதில்லை...?

மேலும் சிலர் கூறுவது, ”சச்சின் ஜட்டியில்கூட விளம்பரம் போட்டுக் கொள்கிறார்.. கோடியில் புரள்கிறார்..” என்றால் எனக்கு சிரிப்புத்தான் வருகிறது.. மேலும் சிலர் ஒரேயடியாகப் போய் அவர் சமூகத்திற்கு என்ன செய்துவிட்டார் என்றுகூட சொல்ல ஆரம்பிக்கிறார்கள்.. எனக்குத் தெரிந்து ஒரு பேட்டியின் போது மும்பை நகர் பற்றி சர்ச்சையை சிவசேனா கட்சியினர் கிளப்பிய சமயம், மும்பை சகலருக்கும் சொந்தமானது என்று பேட்டி கொடுக்க அதை பால்தாக்ரே கட்சியினர் கண்டனம் செய்தார்கள்.. சச்சின் அப்படி பேட்டி கொடுக்கத் தேவையேயில்லை.. இருந்தாலும் அதற்காக அவரை பாராட்டலாம். கவாஸ்கருக்கு இல்லாத புகழ் இவருக்கென்ன என்கிறார்கள். கவாஸ்கர் காலத்தை காட்டிலும் தற்போதையே வணிகமயமான கால கட்டத்தில் மக்கள் சார்ந்த எல்லா துறைகளும் merchandise ஆகி இருக்கின்றன.. பெரும்  மக்கள் கூட்டத்தை patronageஆக கொண்ட கிரிக்கெட் அதில் வெற்றிகரமாக திகழும் நிபுணர்கள் கூடுதல்  கவனம் பெறுவது இயற்கையான ஒன்றுதானே. 

எல்லாம் சரிதான் சார்..  xக்கு கொடுக்கவில்லை  yக்கு கொடுக்கவில்லை.. சரியா...? சரியில்லைதான்.. அதற்கு சச்சின் என்ன செய்ய இயலும்..? கிரிக்கெட்டே பிடிக்காதவர்கள் ”அவருக்கு பாரத் ரத்னா கொடுப்பது தவறு..” என்று சொல்வதை ஒரு வாதத்திற்காகவது ஏற்கலாம்.. ஆனால் கிரிக்கெட் பார்ப்பவர்களுக்கு, ரசிப்பவர்களுக்கு சச்சின் சர்வ நிச்சயமான ஒரு நிகரில்லா வீரர்தான்..

அந்த வகையில் சச்சினுக்கு பாரத் ரத்னா பொருத்தமானதே...”அதெல்லாம் ஏற்க முடியாதுங்க”ன்னு சண்டைக்கு வர்றிங்களா... அதுக்காக பாட்ஷாவாக மாற வேண்டாம் சார்... பெர்னாட்ஷாவாக மாறுங்களேன்.. அதுதான்  சரிப்படும்..  மக்களை மாற்றுங்கள்..
ஒரே வழி அதுதான்....

4 கருத்துகள் :

கும்மாச்சி சொன்னது…

பத்ரி சச்சினை விட சிறந்த வீரர்கள் இந்திய அணியில் இருக்கிறார்கள் என்பதே எங்களது வாதம்.

Badri Nath சொன்னது…

சச்சினை விட......ம்ம்ம்...ஏற்க முடியவில்லை என்றாலும் சரி... உங்கள் பார்வையில் அவர்களுக்கு ரத்னா (பதக்கம்தான்) கொடுத்தால்போயிற்று.. ஆனால் யார் சொல்வது...எனிவே.. வருகைக்கு நன்றி கும்மாச்சி....

பெயரில்லா சொன்னது…

ஏனங்கோ.. நானும் உங்களை வழிமொழிகிறேன்.. 100 சதம்
R Chandrasekaran

Badri Nath சொன்னது…

நன்றி சந்திரசேகரன்..