திங்கள், 11 நவம்பர், 2013

Dynamo - நம்ப முடியாத மேஜிக் நிபுணர்

ஜெ மோ, ந, மோ. நாடாளுமன்ற தேர்தல், கூடங்குளம், CHOGM இலங்கை, செஸ் போட்டி, ஸ்மால் பஸ் சர்ச்சை என இணையத்தில் ஏராளமான விவாதங்கள் மற்றும் counter விவாதங்கள்  கொட்டி கிடக்கின்றன.. அவற்றை எல்லாம் படித்து படித்து மன நோயே வந்து விடும் போல இருக்கிறது.. சற்று ரிலாக்ஸ் பண்ண வேண்டாமா...? சரிதான் சார்.. எப்பவுமே சிரீயஸ் விவாதம் மட்டுந்தானா..? ஆகையால் யான் பெற்ற இன்பத்தை நீங்கள் பெற்றிருக்கிறீர்களா என்பதற்குத்தான் இந்த பில்ட்ப்..

நேரிடையாக விசயத்துக்கு வருகிறேன்... 

நீங்கள் history சேனல் பார்த்திருக்கிறீர்களா...? எத்தனை உபயோகமான சேனல் அது..  ''H'' என்று  கேபிளில் வலம் வருகிறது.. அதற்கான இணைப்பு இல்லாவிட்டால் உடனே  கொடுத்துவிடுங்கள்.. அந்தச் சேனனில் வரும் விசயங்கள் எண்ணிலடங்கா... அவற்றில் ஒரு மணி நேர நிகழ்ச்சியாக வருவதுதான் Dynamo - Magician Impossible என்கிற ஒரு அதி அற்புத நிகழ்ச்சி... அந்த டைனமோ என்பவர்  ஒரு பிரிட்டிஷ்காரர் அவர் இயற்பெயர் Steven Frayne... அவர் செய்கிற அசத்தல் மேஜிக்கை என்னவென்று சொல்வது... 
அந்தரத்தில் அனைவர் முன்பாக பறப்பது
தீடிரென்று காணாமல் போவது
தண்ணீரில் நடப்பது
தண்ணீரை ஐஸ் ஆக்குவது
ஒருவர் எந்த பெயரோ பாடலோ  நினைக்கிறாரோ, அந்தப் பெயரையோ பாடலையோ அவர் கண்களைப் பார்த்துச்  சொல்வது
என்று.. நம்பவே முடியவில்லை... நீங்கள் அவர் நிகழ்ச்சியை பார்த்திருந்தால்
அவரைப் பற்றி கூடுதல் தகவல் எதேனும் சொல்லலாம்.. (எல்லாம் டிரிக் மயம்தான் என்றாலும்.... இத்தனை துல்லியத்துடன் அனாயசமாக செய்வதைப் பார்க்கும் போது, இதை எப்படிச் செய்கிறார் என்று தெரிந்து கொள்வதில் ஒரு குழந்தையின் ஆர்வம்தான் மேலிடுகிறது)

கருத்துகள் இல்லை :