வெள்ளி, 22 நவம்பர், 2013

ஏன் இப்படி...?

 ///நியதி.-  வளரும் வரை புரட்சியாளர்களாக திகழ்கிறவர்கள், வளர்ந்து விட்டால் நம்ப முடியாத எதிர்புரட்சிக்காரர்களாக மாறிவிடுகிறார்கள்///
”Power corrupts; absolute power corrupts absolutely”
மற்றும் ”Great men are almost always bad men."

ஆங்கிலத்தில் மேற்கண்ட சொலவடை உண்டு... அதற்கான வாழ்நிலை உதாரணங்களாக  சில நாட்டு நடப்புகள் சில நபர்கள்  பார்க்க நேரிடுகிறது..

முதல் செய்தி
தெகல்கா என்கிற பெயர் ஊடகத் துறையில் மிகவும் பிரபலமான பெயர்.. உலகத்தில் உள்ள ஊழல்களை வெளிகொண்டு வருவதில் கில்லாடிகள்...சமீப காலங்களில் பெரும் வளர்ச்சி பெற்று வரும் ஊடகம்.. ( பிஜேபியை சேர்ந்த பங்காரு லட்சுமணன் பணம் பெற்றுக் கொண்டார் என்கிற செய்தி மற்றும் வீடியோ வெளியிட்டு அவர் பதவி விலகும் வரை சென்ற ஒரு நிகழ்வு. அதற்காக காரணகர்த்தர்கள் தெகல்கா...) அந்த தெகல்காவின் பொறுப்பாசிரியர் (Editor-in-Chief ) தருண் தேஜ்பால்.. தனது மகளை ஒத்த தன்னுடன் வேலை பார்த்த ஒரு பெண்ணை... என்னவென்று சொல்வது... FIR பதியப் பட்டு கைதாகும் நிலை... எத்தனை பெரிய வளர்ச்சி கண்ட ஊடகம்... இதையெல்லாம்விட தெகல்காவின் Managing editor  ஷோமா சௌத்ரி ”நீ பாதிக்கப் பட்டியா... என்னைவிட உனக்கு என்ன கொடச்சல்” என்கிற ரேஞ்சுக்கு பேட்டி காண வந்த சக பத்திரிகையாளர்களை தூற்றியதுதான் கொடுமையிலும் கொடுமை.

இரண்டாம் செய்தி
ஆம் ஆத்மி கட்சி IAC அதாவது ஊழலுக்கு எதிரான இந்தியா என்கிற சண்டமாருத கோஷத்துடன் நாடெங்கும் குறிப்பாக டெல்லியில் வளர்ந்து வரும் கட்சி.. டெல்லியில் முதலில் மூன்றாவது இடத்தை  பிடித்துவிட்டார்கள் என்றார்கள்..  பிறகு, இரண்டாம் இடம் என்றார்கள்.. அட போங்க நவம்பர் மாசத்தில அவங்க ரேட்டிங் கூடிப் போச்சு... முதல் எடம் வந்தாச்சு... சீஃப் மினிஸ்டரா அர்விந்த் கெஜ்ரிவால் பதவி  ஏற்க போறார்.. பாருங்க என்றார்கள்.. அந்தக் கட்சியின் முக்கியஸ்தர்கள் ஷாசியா இல்மி மற்றும்  குமார் விஸ்வாஸ்..  அதுவும் அந்த மாதர்குல விளக்கு ஷாசியா இல்மி எல்லா ஆங்கில டிவியில் வந்து தலய தலய ஆட்டிக் கொண்டு கூந்தலை ரஜினி ஸ்டைல்ல சிலுப்பிக் கொண்டு ஆங்கிலத்தில் பொளந்து கட்டுவார் பாருங்கள்... நான் உண்மையில் அந்தம்மாவின் ரசிகனாகிவிட்டேன்.. இந்தியாவைக் காக்க வந்த ரட்சகி இவர்தான் என்றே நினைத்தேன்... ஆனா.. புஸ்ஸ்... இணைய உலக துப்பறியும் பேர்வழி  ஒருவர் பொறி வைத்து அவரைப் பிடித்துவிட்டார்.. ரகசிய காமிராவில் படமெடுத்து  பரப்பிவிட்டார்..  நேற்று டைம்ஸ் நௌ தொலைக்காட்சியில் போட்டுக் காட்டினாகள்,,,அதில் அந்தம்மா ஓக்கே.. ஓக்கே.. கேஷா கொடுங்க.. நாங்க உங்களுக்காக போராட்டம் பண்றோம் என்று சொல்வதாக வருகிறது..அதிலும் அந்த குமார் விஸ்வாஸ்.. நோ செக்... ஒன்லி கேஷ் என்று வேறு சொல்வதாக வருகிறது.. அடப் பாவமே எனறு தலையில் கை வைத்துக் கொண்டு உட்கார்ந்து விட்டேன்...என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை...

மூன்றாவது செய்தி
 நம்ம ஊருக்கு வருவோம்...
கலைஞர் திமுக என்றால் அது தமிழுக்காக தமிழர்களுக்காக என்றுதான் பரவலாக அறியப் படுவது.. ஆனால் முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் நடந்ததைப் பற்றி இணைய உலகம் பத்திரிகை உலகம் என்று கலைஞரைப் புரட்டிப் போடாத ஊடகமே கிடையாது... இன்றும் அது நடந்து கொண்டிருக்கிறது...

சரி.. இந்தக் கட்டுரையின் முதல் இரண்டு வரிகள் உங்கள் கருத்தென்ன...?

கருத்துகள் இல்லை :