வியாழன், 28 நவம்பர், 2013

ஜெகத்தின் குரு....

2004 வருடம் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் ஊழியர் படுகொலை 
என்கிற செய்தி வந்ததை ஞாபகப் படுத்திப் பார்க்கிறேன்.  அடப் பாவிகளா.. கோவிலில் உள்ளேயே கொலையா என்று நண்பர்களுடன் பேசிக் கொண்டதை நினைத்துப் பார்க்கிறேன்.

சில தினங்களில் நக்கீரன் இதழ் ஒன்றை அவசரமாக வாங்கினேன்.  காரணம். அந்த இதழில் ஜெயேந்திரர் பேட்டி என்ற தலைப்பில் அட்டைப் படம் வெளியிடப் பட்டிருந்தது.... அதன் வாசம்கூட எனக்கு நினைவிருக்கிறது, ”என் பக்தர்கள் யாராவது இந்தக் காரியத்தை செய்திருக்கலாம்...” என்று
..
சில தினங்களுக்குப் பின்னர் என் மனைவி என்னை அன்று காலையில் எழுப்பினார்..” டிவி பாருங்க..   ஜெயேந்திரரை கைது பண்ணிட்டாங்க.. கொலை கேசுல..” . அவசரஅவசரமாக எழுந்து அன்று காலையிலிருந்து டிவியைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருந்தேன்...

தொடர்ந்த நிகழ்வுகள் அனைவரும் அறிந்ததே... அப்ரூவர் ரவி சுப்பிரமணியன் என்பவர் நக்கீரனில் தொடர் கட்டுரையை எழுத, அதனாலேயே நான் நக்கீரன் இதழை வாங்கிக் கொண்டிருந்தேன்.. அதன் தகவல்கள் அதன் பின்னணி போன்றவை அனைவரும் அறிந்ததே...

அந்த வழக்கு பல்வேறு திருப்பங்கள் கொண்டு ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது.. முதலில் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற முனைந்த போது, ஜெயேந்திரர் தரப்பு அதை பாண்டிச்சேரியில்தான் நடத்த வேண்டும் என்று வழக்கு போட்டது வழக்கை விசாரித்த நீதிபதியுடன் ஜெயேந்திரர்  தொலைபேசி உரையாடல் என்கிற சர்ச்சை, அப்ரூவர் ரவி பிறழ் சாட்சி சங்கரராமன் மனைவியே பிறழ் சாட்சி என்று எத்தனை பிறழ்கள்....

தற்போது அனைவருக்கும் விடுதலை... 

சங்கரராமன் மகன் இந்தத் தீர்ப்பை பற்றி கூறும் போது,”அவரா வெட்டிக்கிட்டு சாகல.. யாரோ கொன்னுருக்காங்க... ” என்றார்..

கடைசியில் அது மட்டும்தான் உண்மை.....

கருத்துகள் இல்லை :