வெள்ளி, 8 நவம்பர், 2013

ஜெமோவின் எழுத்துரு

இந்துவில் ஜெமோ தமிழ் எழுத்துரு பற்றி எழுதினாலும் எழுதினார்  அவர் கருத்துக்கு கண்டனம் குவிந்த வண்ணம் இருக்கின்றன..  எங்கு திரும்பியும் கடும் கண்டனக் கணைகள்...
மலையாளி நாயர்  என்று வசவுகள்.. நேற்று இந்து அலுவலகத்தில் பெரும் தமிழ்ப் படையினர்  தியாகு சுபவீ தொல் திருமா என்று பல முக்கியஸ்தர்கள் படையெடுத்து இந்து நிர்வாகத்தை இந்த விவகாரம் குறித்து அணுகியுள்ளர்.. இன்று (8.11.13) இந்து தமிழ் நாளேடு ஒரு பக்கத்திற்கு கண்டனக் குரல்களை பதிவு செய்திருக்கிறது. கருத்து தெரிவித்தோர் ஞாநி உட்பட பலர்.... 

என்னைப் பொருத்த வரை ஜெமோவின் கருத்து ஏற்புடைத்தல்ல . அவர் பாஷையில் சொல்வதாக இருந்தால் ‘naan ungaL karuththai eRRkavillai ’...   தமிழ் எழுத்துருவில் insufficiency இருப்பதாக தெரியவில்லை..  ஆனால் பொதுவில் ஜெமோ தன்னை ஒரு கலகக்காராக அடையாளப் படுத்துவார்.. அதன் ஒரு பகுதியாகத்தான் இதை பார்க்கிறேன்.. controversy என்பது அவர் மிகவும் விரும்பி ஏற்கும் ஒன்று. இதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்... ஒருவன் ஒரு கருத்தைச் சொன்னால் அதனால் தமிழ் அழிந்து விடும் என்கிற ரேஞ்சுக்கு  பதில் தாக்குதல் தொடுப்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.. நாம் பதிலுக்கு தாக்குதல் தராவிட்டால் நம்மை தமிழ் விரோதி என்று சொல்லிவிடுவார்களோ என்ற பதட்டத்திலேயே அவர் மீது கடும் குற்றச்சாட்டுக்கள் பலர் கூறுவதை இணையத்தில் பார்க்க நேரிடுகிறது.. இதையும் என்னால் ஏற்க முடியவில்லை..  தமிழும் இந்து மதமும் ஒன்று.. பல்நூற்றாண்டு காலமாக பல தடைகளை தாண்டி வந்து கொண்டுதான் இருக்கிறது..
அழிக்க முடியாது...

8 கருத்துகள் :

பாலாஜி சொன்னது…

அதுசரி, சும்மா தெருவில் நான் நடந்து போய்க்கொண்டிருக்கையில் என்னை ஒருத்தன் மிக கேவலமாக திட்டி விட்டு போனால், சொரணை கெட்ட ஜென்மமாக துடைத்து விட்டு போக சொல்கின்றீர்களா ?

Badri Nath சொன்னது…

நண்பர் பாலாஜி.. உங்கள் பாணியில் எதையும் எதனோடும் ஒப்பிட்டால் பெரும் கோபமும் வன்மமும் வரும் என்பதை நான் புரிந்து கொள்கிறேன்.. என் பாணி என்பது காந்திய பாணியாகும்.....ஜெயமோகனின் கருத்துக்கு என் எதிர் கருத்து காந்தியபாணியில் சொல்லியிருக்கிறேன்.. எனக்கு பிடித்த வழி அதுவே... நன்றி

neutron சொன்னது…

ஆங்கிலேயர்கள் தன்னாலேயே வெளியேறிவிடுவார்கள் என்று காந்தி நினைத்திருந்தால் நமக்கு சுதந்திரம் அவ்வளவு சீக்கிரம் கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே. அதற்காக வன்முறையினை நான் ஆதரிப்பதாக பொருளில்லை. ஏதோ பைத்தியக்காரன் உளறுகிறான் என்று சும்மா இருந்தால், ஆஹா நான் சொன்னதை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்கிற ஆணவம் வந்துவிடும். இதே போன்ற கருத்தினை மராத்தி மொழிக்கு எதிராக மகாரஷ்டிராவில் சொல்லியிருந்தால் ஜெ மோ வை உண்டு இல்லை என்று ஆக்கியிருப்பார்கள். குறைந்தபட்சம் எதிர்ப்பு கூட தெரிவிக்கவில்லையென்றால் எப்படி ?

Badri Nath சொன்னது…

மதிப்பிற்குரிய neutron.. நான் ஜெமோவிற்கு பாராட்டு பத்திரமா வாசித்திருக்கிறேன்..அவர் controversy ஐ விரும்புவார் என்றல்லவா எழுதியிருக்கிறேன்.. அவர்கூறியதை எவரும் ஏற்க மாட்டார்கள் என்றல்லவா சொல்லியிருக்கிறேன்... தமிழை எவரும் அழிக்க முடியாது.. ஆனால் தமிழ் சாகும் என்று சொல்வது வெறும் வாய் வார்த்தைதான்.. ஆதி அந்தம் இல்லாத மொழியை எவரும் அழிக்க முடியாது என்பதுதான் என் துணிபு

விவரணன் நீலவண்ணன் சொன்னது…

கண்டும் காணாமல் இருந்திருக்கலாம் ஒன்று ஜெமோ தனது தளத்தில் எழுதியிருந்தால், அல்லது தெரியாத ஒருவர் இந்துவில் எழுதியிருந்தால். ஆனால் இந்துவில் ஜெமோ எழுதியது பலரும் அறியப்படும் இடமும் நபரும். மவுனமாய் இருந்திருந்தால் மவுனம் சம்மதம் என நினைத்து அடுத்து கிரந்த எழுத்துருவை திணிக்க முற்படுவோர், அதனால் முளையிலே கிள்ளுவது சிறப்பல்லவா?

பெயரில்லா சொன்னது…

ஜெமோவின் கருத்து சொல்வதால் தமிழுக்கு பாதிப்பில்லை தான்.
ஆனா கண்ட கண்ட நாயெல்லாம் கருத்து சொல்கின்றேன் என்ற பெயரில் தமிழில் வாய் வைக்க கூடாது என்று நினைப்பது தவறு இல்லை தானே

Badri Nath சொன்னது…

கண்டும் காணதிருக்க முடியாது..தியாகு போன்றோர் சரியாக கண்டனத்தை பதிவு செய்திருப்பதாகவே தோன்றுகிறது....

Badri Nath சொன்னது…

யாரை சொல்கிறீர்கள்...?