சனி, 1 மார்ச், 2014

தூக்குத் தண்டனை....?

ஊரில் வந்ததிலிருந்து மனதே சரியில்லை...நேற்றுதான் செய்தியைப் படிக்க முடிந்தது... 


பல காலங்களுக்கு முன்பு கமல் எழுதி இயக்கிய ”விருமாண்டி” படம் பார்த்திருக்கிறேன்... கமல் நம் காலத்தின் மிகப் பெரிய அறிவு ஜீவிக் கலைஞர்தான் .. எந்த சந்தேகமும் இல்லை. அந்தப் படம் அழுத்தம் திருத்தமாக தூக்கு தண்டனையே தேவையில்லை என்றது.. நீதியரசர் கிருஷ்ணய்யர் வேறு தூக்குக்கு எதிராக குரல் கொடுத்திருந்தார்.. அவர் தொடர்ந்து தூக்கை எதிர்ப்பவர் ... நம்ம கலைஞரய்யா வேறு ”நான் தூக்குத் தண்டனைக்கு எதிரானவன்..” என்று சண்ட மாருதம் செய்கிறார்...

எத்தனை அறிவு ஜீவிகள்.. மனித உரிமைப் பாதுகாவல்ர்கள் தொடர்ச்சியான பிரச்சாரம் செய்கிறார்கள்...

நான் கிட்டத்தட்ட அதே மனப்பான்மைக்கு வந்து விட்டேன்... 

ஆனால் போன வாரம் நடந்த சம்பவம்....

என்னைப் புரட்டிப் போட்டுவிட்டது...  

டேய் மாபாதகர்களா......

அவள் குழந்தைடா... பெண் குழந்தை.....
என் மகள்டா.... விஷ ஜந்துக்களா....

நான் நீங்கள் எல்லோரும்  நாகரீகமாக வாழ விரும்புவதைப் போல அந்தப் பெண் குழந்தையும் கௌரவமாக வாழ விரும்பினாள்.... படித்தாள்... கனவுகளுடன் வேலையில் சேர்ந்தாள்....

நெஞ்சு பொறுக்கதில்லையே...

தூக்கைவிட அதிக பட்ச தண்டனை ஏதாவது சட்டப்புத்தகத்தில் இருக்கிறதா என்பதை யாராவது சொல்லுங்களேன்.....


4 கருத்துகள் :

prasanth சொன்னது…

அதிக பட்ச தண்டனை கொடுத்தால் குற்றம் குறையும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை

silanerangalil sila karuththukkal சொன்னது…

what you say is right in european countries and culture but the same does not fit in our country..our mind set is different.. we are ரெண்டாங்கெட்டான் culture.. our laws need teeth.....

prasanth சொன்னது…

If so,krishna iyer had given a blow to supporter of Capital punishment....He had distinguished 3 types of murder....1.those who do crime with no point of conscious 2.those who do crime with pakka plan...he can't caught 3.those who do crime with full hearted like terrorist....

silanerangalil sila karuththukkal சொன்னது…

பிரசாந்த்... கிருஷ்ண அய்யர் வாதம் ஒரு மாபெரும் பொதுப்படையான ஜனநாயகவாதியாகவும் மேலும் அவர் வகித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஸ்தானம் என்கிற சிம்மாசனத்திலிருந்து பேசுவதாகத்தான் எனக்குப் படுகிறது... நாம் சாதாரணமானவர்கள்.. வலிகள் நமக்கு மேல்தட்டில் இருப்பவரைக் காட்டிலும் அதிகம்... உன்னுடைய பின்னூட்த்திலிருந்து பேசுவோம்... (1) இந்த மாதிரி மனிதருக்கு தூக்குத்தண்டனை தேவையில்லை சட்டமே அப்படித்தான் இருக்கிறது... (2)(3) ஆட்களுக்கு மரண தண்டனை அவசியம் என்றே நான் கொள்கிறேன்... காரணம் நாம் வாழும் தேசம் இந்தியா... அவ்வளவு ஏன் நகமா என்கிற சினிமா நடிகை எம்பிக்கு போட்டியிட்டு பிரச்சாரம் செய்கிறார்.. அவரை பிரச்சாரமே செய்ய விடாமல் நம்மவூர் ஆண்நாய்கள் செய்யும் கூத்தை யூடிப்பில் போய் பாறேன்... நாறிப் போகிறது...