வெள்ளி, 11 ஏப்ரல், 2014

ரஜினி வாய்ஸ்...

இந்து பத்திரிகையில் இந்தச் செய்தியை முதல் பக்கத்தில் இன்று 
 (11.4.14) போட்டிருந்தார்கள்... 


அய்யா பெருந்தலைவர் முலாயம் சிங்... வருங்கால பாரதப் பிரதமராக வரக்கூடிய  வெயிட்டிங் லிஸ்ட்டில் இருப்பவர்... இந்தியாவின் பெரும் பான்மை இந்தி மொழி பேசும் மாநிலத்தின் முன்னாள் முதல்வர்.. இன்னாள் முதல்வரின் தந்தையார்... 74 வயசுக்காரர்.....இன்றய இந்திய அரசியல்வாதிகளில் முக்கியமானவர்... நேற்று ஒரு பொதுக் கூட்டத்தில்  அவர் உதிர்த்த முத்துக்கள்தான் இவை .... 

”பசங்க கொஞ்சம் அப்படி இப்படின்னுதான் இருப்பாக... அதப் போய் பெரிசு பண்ணிக்கிட்டு.. ரேப் பண்ணிட்டான்னு கூப்பாடு போடறதும்... ரேப் பண்ணிவங்களுக்கு தூக்குத் தண்டனை கொடுக்கறதும் நல்லவாயிருக்கு...” என்கிற ரேஞ்சில் பேசியிருக்கிறார்...

நமது நாட்டுப்  பிரமுகர்  ஒருவர் வெளி நாட்டு சென்றிருந்தபோது. அந்த நாட்டுப்  பெண்ணிடம் கேட்டாராம். ”இநதியா பத்தி என்ன நினைக்கிறிங்க..”ன்னு

அந்தம்மா சொல்லிச்சாம்... ”எனக்கு இந்தியா ரொம்ப பிடிக்கும்.. சுத்திப்பாக்கணும்னு ஆசயா இருக்கு... ஆனா பொண்ணுங்க  ராத்திரி நடந்து வர்றத பாத்தா ஒங்க ஊர்ல ரேப் பண்ணிடுவாங்களாமே...’’

ரொம்ப பெத்த பேருதான் நமக்கு.....

ரஜினி 1996 சட்ட சபை தேர்தலில் ஜெ.. எதிர்த்து ஒரு வாய்ஸ் கொடுத்தார்....அது மிகப் பிரபலமாக அப்போது பட்டி தொட்டியெல்லாம்  ஒலித்துக் கொண்டிருந்த வசனம் அது ....” மறுபடியும் ஜெ வந்தா அந்த ஆண்டவனாலகூட காப்பாத்த முடியாது...”ன்னு..

அதையேதான் தற்போது சொல்ல வேண்டும்... இந்த மாதிரி பேசும் நபர்கள் தலைமையேற்றால், இந்தியாவை ஆண்டவனால்கூட காப்பாற்ற முடியாது...கருத்துகள் இல்லை :