புதன், 23 ஏப்ரல், 2014

ஜனநாயகம்.....?

தேர்தல் சுரம் நாடெங்கும் பற்றிக் கொண்டு மக்கள் பார்வை முழுவதும் தேர்தலிலும் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்பதிலும் பரபரப்பாக ஆவலுடன் காத்திருக்கும் போதுதான் விஜய் டிவியில் அந்த நிகழ்ச்சி கடந்த ஞாயிறு (20.4.14) அன்று ஒளிபரப்பாகியது..



அதுதான் பிரபல நீயா நானா நிகழ்ச்சி.. இந்த முறை கோபிநாத் குழவினர் விவாதித்த ”விவாதப் பொருள்” ஜனநாயகம் என்றால் என்ன ...? பலரும் பலவித சுவாரஸ்யமான பதிலை அளித்துக் கொண்டிருந்தார்கள்...

நானும் பார்த்துக கொண்டேயிருந்தேன்... 1998 வாக்கில் நான் ஜனநாயகம் என்கிற சிறுகதையே எழுதியிருந்தேன்... அதுதான் எனக்கு நினைவுக்கு வந்தது... ஆக என்னைப் பொருத்த மட்டில் ஜனநாயகம் என்றால் என்ன என்று கேட்டால் நான் இப்படித்தான் பதிலளிப்பேன்...

யானைகள் வாழும் நாட்டில் எறும்புகள் வாழும் உரிமையை உறுதி செய்வதும் அங்கீகரிப்பதும் தான் ஜனநாயகம்....

அப்படி யார் அங்கீகரிக்கிறார்களோ... அவர்களே சிறந்த ஜனநாயகவாதி... அவர்களுக்கே  நமது ஓட்டு......

கருத்துகள் இல்லை :