செவ்வாய், 8 ஏப்ரல், 2014

அட ராமா....

தேர்தல் களேபரங்கள் எத்தனையோ நடந்து கொண்டிருந்தாலும், இந்தத்  தேர்தல் செய்தி சாதாரண வாக்காளரான என்னையே  அதிர்ச்சிக்கும்  குழப்பத்திற்கும் ஆளாக்கிவிட்டது
.
நீலகிரி மாவட்ட பாஜக வேட்பாளர் மற்றும் சிதம்பரம் தொகுதி பாமக வேட்பாளர் ஆகியோரது வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட செய்திதான் அது...

ஒரு சாதாரண சுயேட்சை பார்ட்டிகள் வேண்டுமென்றே சில பரபரப்பு மற்றும் வெட்டி விளம்பரத்திற்காக நிற்பவர்கள் செய்யும் செயலை ஒரளவிற்கு புரிந்து கொள்ள முடியும்... ஆனால் பாஜக பாமக போன்ற கட்சிகள்  நேற்று வந்த கட்சிகளா...? முதல் கட்சி இந்தியாவையே ஆளப் போகிற கட்சி என்று சொல்லிக் கொள்கிறது.. இரண்டாவது கட்சி  தமிழகதில்  விரைவில் ஆட்சியைப் பிடிப்போம்  என்று சொல்லும் கட்சி..

மாபெரும் கட்சிகள் ஒரு சாதாரண வேட்பு மனு தாக்கலில் சொதப்புவார்களா... என்பதை முதலில் நம்பவே முடியவில்லை...

ராஜதந்திரம் உள்குத்து என்று ஆயிரம் சொன்னாலும்.. அய்யா ஒங்க ராச தந்திரத்திற்கும் உள்குத்திற்கும் ஒரு அளவே இல்லையா என்றுதான் சொல்லத் தோன்றுகிறது....

கருத்துகள் இல்லை :