வியாழன், 17 ஏப்ரல், 2014

பீக் அவர்...


நீங்கள் அலுவலக நேரங்களில் மவுண்ட் ரயில் நிலையம் வந்திருக்கிறீர்களா..  பீக் அவர் எனப்படும் சமயங்களில் சென்னையே வாகன நெரிசலில் விழி பிதுங்கித்தான் நிற்கிறது என்பது வேறு விஷயம்.. ஆனால் நான் என்னுடைய அனுபவத்தை வைத்துத்தான் சொல்ல முடியும்


இன்று இந்து நாளேட்டில் ஒரு கட்டுரை வந்திருந்தது.. 
”வரும் 2020-ல் தமிழகத்தில் வாகனங்களின் எண்ணிக்கை 5 கோடியே 61 லட்சத்து 43,622 ஆக உயரும் என நுண்ணறிவு போக்குவரத்து துறை வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது. வளர்ந்துவரும் வாகனங்களின் எண்ணிக்கையால் போக்குவரத்து நெரிசல் கடுமையாகி வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகிறார்கள்.

மார்ச் மாதம் 1-ம் தேதி நிலவரப்படி தமிழகத்தில் மொத்தம் 1 கோடியே 86 லட்சத்து 69 ஆயிரத்து 433 வாகனங்கள் இயங்குகின்றன. இதில் சென்னையில் மட்டும் 41 லட்சத்து 60 ஆயிரத்து 790 வாகனங்கள் உள்ளன. ஆனால், இதுவே 2020-ல் தமிழகத்தில் வாகனங் களின் எண்ணிக்கை 5 கோடியே 61 லட்சத்து 43,622 ஆக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் இடங்களை ஆய்வு செய்ய வல்லுநர்கள் குழு அமைக்க வேண்டும். இந்த குழு மூலம் எதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது, இதற்கான தீர்வு என்ன என்பதை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்....”
(நன்றி படங்கள் செய்தி இந்து நாளேடு)
படிக்க நன்றாகத்தான் உள்ளது.. எங்களைப் போல மவுண்ட் ரயிலை நம்பி வாழும் பல்லாயிரக்கணக்கான மக்கள் ”பீக் அவர்” சமயங்களில் விழி பிதுங்க கார்கள் பஸ்கள் டூ வீலர்கள் ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு செல்ல முயன்று சற்று வாகனங்கள் உரசிக் கொண்டால் பெரும் சண்டையிட்டுக் கொண்டு அதனால் மீண்டும் வாகன நெரிசல் ஏற்பட்டுக் கொண்டு... அப்பப்பா.. விவரிக்க இயலாத கொடுமை... இந்த லட்சணத்தில் மெட்ரோ என்கிற விரைவு ரயில் திட்டத்தின் பிரதான பகுதியாகவே மவுண்ட் ரயில் நிலையம் விரைவில் திகழப்போகிறது..  அதற்குள் ஏதாவது செய்ய வேண்டும்..  மக்கள் நலனில் குறைந்த பட்சம் அக்கரை செலுத்தும் அரசியல் வாதிகளும் அதிகாரிகளும் மனது வைத்தால் பிரச்சனை தீர்ந்து விடும் என்பது திண்ணம்....

கருத்துகள் இல்லை :